திங்கள், 21 செப்டம்பர், 2020

ஒரு கிரகமும் இல்லாத வீடுகள்...

 

ஒருவரின் ஜாதகத்தில் குறிப்பாக ஒரு பாவகத்தில் எந்த ஒரு கிரகமும் இல்லை என்ற நிலையிலும் ,அந்த பாவகம் எந்த ஒரு கிரகத்தின் பார்வையினைப் பெறாத நிலையில் அந்த வீட்டின் பலன்கள் எப்படி இருக்கும்? 

ஒரு பாவகம், எந்த ஒரு கிரக தொடர்பினையும்  பெறாத நிலையில் அந்த வீட்டின் அதிபதியின் சுய இயல்பை, அந்த வீடு பிரதிபலிக்கும். 


சுய இயல்பு என்றால் என்ன? கிரகங்கள் சுப கிரகமாக அமையுமாயின் சுப தன்மையையும், அசுப கிரகமாயின் அசுப தன்மையையும் பெற்றிருக்கும். இதுதான் கிரகங்களின் சுய இயல்பு என்பதாகும்.


எடுத்துக்காட்டாக மீன இலக்னத்திற்கு ஏழாம் இடமான கன்னியில் எந்த ஒரு கிரகமும் இல்லை என்ற நிலையில் அந்த வீட்டினை எந்த ஒரு கிரகமும் பார்க்கவில்லை எனும் பட்சத்தில் பலன்கள் எப்படி இருக்குமென்றால் ஏழாமிடம் புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி இராசியாக இருப்பதால் அவருக்கு வரக்கூடிய மனைவி புதனின் குண இயல்புகளை கொண்டவராக இருப்பார். 


புதனின் இயல்புகளான  அதீத புத்திசாலித்தனம், இளமையான தோற்றம்,

நகைச்சுவை உணர்வு, எல்லோரையும் காரணத்தோடு அனுசரித்துச் செல்லும் பாங்கு போன்றவற்றை கொண்டவராக இருப்பார்.

 அந்த ஜாதகத்தில் புதன் அமர்ந்த இடத்திற்கு ஏற்பவும் புதனுடன் இணைந்துள்ள மற்ற கிரகங்களின் குணத்திற்கேற்ற  பலன்களையும்  பெற்றிருப்பார்.


அதேபோல கும்ப இலக்கினத்திற்கு 7ஆம் இடமான சிம்மத்தில் எந்த ஒரு கிரகமும் இல்லை என்ற நிலையில், அந்த வீட்டினை எந்த ஒரு கிரகமும் பார்க்காத நிலையில் அவருக்கு வரக்கூடிய மனைவி சூரியனின் குண இயல்புகளை பிரதிபலிப்பவராக இருப்பார். ஆளுமை, அதிகாரம்,

தற்பெருமை, நான் என்ற எண்ணம் போன்றவை,  சூரியன் அமர்ந்த இடம், சூரியனுடன் தொடர்பு பெற்றுள்ள கிரகங்களைப் பொறுத்து பலன்கள் மாறுபடும். எனவே எந்த ஒரு கிரகமும் இல்லாத, பார்க்காத வீடுகளின் பலன்கள், அந்த வீட்டு அதிபதியின் சுய இயல்பினை பிரதிபலிப்பதாக அமையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Odi odi Utkalantha Jothi Full Song Tamil Lyrics for music | ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் - ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics)

 ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics) Odi odi Utkalantha Jothi l...