மேஷம்
அக்டோபர் 11, 2020
புரட்டாசி 25 - ஞாயிறு
பிள்ளைகளிடம் கனிவுடன் பழகவும். வெளிநாட்டு பயணங்களில் இருந்துவந்த தடைகள் அகலும். தெய்வப் பணிகளில் ஈடுபடுவதன் மூலம் மனத்தெளிவு உண்டாகும். வீட்டில் சுபச்செய்திகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். கால்நடைகள் வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பதவியில் மாற்றம் மற்றும் வருமான உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அஸ்வினி : தடைகள் அகலும்.
பரணி : மகிழ்ச்சியான நாள்.
கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும்.
---------------------------------------
ரிஷபம்
அக்டோபர் 11, 2020
புரட்டாசி 25 - ஞாயிறு
பதவி உயர்விற்கான சூழல் உண்டாகும். திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். வாழ்க்கைப் பற்றிய புரிதல் உணர்வு ஏற்படும். மறைமுக எதிரிகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். மனதில் இருந்துவந்த பயம் நீங்கும். தொழிலில் திருப்தியான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
கிருத்திகை : அங்கீகாரம் கிடைக்கும்.
ரோகிணி : புரிதல் உண்டாகும்.
மிருகசீரிஷம் : திருப்தியான நாள்.
---------------------------------------
மிதுனம்
அக்டோபர் 11, 2020
புரட்டாசி 25 - ஞாயிறு
வழக்குகளில் எதிர்பார்த்த சாதகமான முடிவுகள் கிடைக்கும். உணவு விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். உடல் நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உத்தியோகத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த காரியங்கள் காலதாமதமாக நடைபெறும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மிருகசீரிஷம் : சாதகமான நாள்.
திருவாதிரை : தனவரவுகள் உண்டாகும்.
புனர்பூசம் : காலதாமதம் நேரிடும்.
---------------------------------------
கடகம்
அக்டோபர் 11, 2020
புரட்டாசி 25 - ஞாயிறு
குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வேலை தொடர்பான முக்கிய முடிவுகளில் கவனம் வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். வாகனங்களில் உள்ள பழுதுகளை சரி செய்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
புனர்பூசம் : கவனம் வேண்டும்.
பூசம் : முன்னேற்றம் ஏற்படும்.
ஆயில்யம் : அறிமுகம் உண்டாகும்.
---------------------------------------
சிம்மம்
அக்டோபர் 11, 2020
புரட்டாசி 25 - ஞாயிறு
பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகம் தொடர்பாக இருந்துவந்த பிரச்சனைகள் சற்று குறையும். போட்டிகளில் ஈடுபட்டு பரிசும், பாராட்டும் பெறுவீர்கள். வேளாண்மை சம்பந்தமான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
மகம் : அனுகூலம் உண்டாகும்.
பூரம் : பாராட்டுகள் கிடைக்கும்.
உத்திரம் : பிரார்த்தனை நிறைவேறும்.
---------------------------------------
கன்னி
அக்டோபர் 11, 2020
புரட்டாசி 25 - ஞாயிறு
சாஸ்திர அறிவில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் உங்களின் மீதான மதிப்பும், மரியாதையும் உயரும். குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவது பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : முன்னேற்றமான நாள்.
அஸ்தம் : மரியாதை உயரும்.
சித்திரை : ஆதரவு கிடைக்கும்.
---------------------------------------
துலாம்
அக்டோபர் 11, 2020
புரட்டாசி 25 - ஞாயிறு
வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சாதகமான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : இலாபம் கிடைக்கும்.
சுவாதி : ஆர்வம் உண்டாகும்.
விசாகம் : சாதகமான நாள்.
---------------------------------------
விருச்சகம்
அக்டோபர் 11, 2020
புரட்டாசி 25 - ஞாயிறு
எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலன்களை தரும். குடும்பத்தில் உள்ள பெரியோர்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
விசாகம் : அனுகூலமான நாள்.
அனுஷம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
கேட்டை : சுபச்செய்திகள் கிடைக்கும்.
---------------------------------------
தனுசு
அக்டோபர் 11, 2020
புரட்டாசி 25 - ஞாயிறு
பொருளாதாரம் தொடர்பான சில நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளால் மனவருத்தங்கள் உண்டாகும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மூலம் : நெருக்கடிகள் ஏற்படலாம்.
பூராடம் : மனவருத்தங்கள் உண்டாகும்.
உத்திராடம் : கவனம் வேண்டும்.
---------------------------------------
மகரம்
அக்டோபர் 11, 2020
புரட்டாசி 25 - ஞாயிறு
சாமர்த்தியமான பேச்சுக்களின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். செலவுகளை குறைப்பதன் மூலம் நெருக்கடியான சூழல் குறையும். பணியில் புதிய மாற்றங்கள் ஏற்படலாம். தேவையற்ற அலைச்சல்களால் மனதில் பதற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
உத்திராடம் : வெற்றிகரமான நாள்.
திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் : பதற்றம் உண்டாகும்.
---------------------------------------
கும்பம்
அக்டோபர் 11, 2020
புரட்டாசி 25 - ஞாயிறு
வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனைகள் தோன்றும். வேலை தொடர்பான உடல் சோர்வும், அலைச்சலும் உண்டாகும். எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். திட்டமிட்ட காரியத்தை அன்றே செய்து முடிப்பது நல்லது. நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
அவிட்டம் : சிந்தனைகள் தோன்றும்.
சதயம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.
---------------------------------------
மீனம்
அக்டோபர் 11, 2020
புரட்டாசி 25 - ஞாயிறு
கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழிலில் சிறு சிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் இலாபம் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : மனவருத்தங்கள் நீங்கும்.
உத்திரட்டாதி : சாமர்த்தியம் உண்டாகும்.
ரேவதி : மனம் மகிழ்வீர்கள்.
---------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக