மேஷம்
அக்டோபர் 18, 2020
ஐப்பசி 02 - ஞாயிறு
திருமண வரன் தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். புதிய நபர்களின் நட்புகளால் தனலாபம் அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அஸ்வினி : சுபச்செய்திகள் கிடைக்கும்.
பரணி : தனலாபம் உண்டாகும்.
கிருத்திகை : ஒற்றுமை மேலோங்கும்.
---------------------------------------
ரிஷபம்
அக்டோபர் 18, 2020
ஐப்பசி 02 - ஞாயிறு
புதிய எண்ணங்களாலும், சாதகமான முயற்சியாலும் பொருட்சேர்க்கை உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு இலாபம் அடைவீர்கள். இளைய சகோதரர்களால் சுபவிரயங்கள் உண்டாகும். சபைகளில் ஆதரவு கிடைக்கும். மனக்கவலைகள் நீங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : பொருட்சேர்க்கை உண்டாகும்.
ரோகிணி : ஆதரவு கிடைக்கும்.
மிருகசீரிஷம் : மனக்கவலைகள் நீங்கும்.
---------------------------------------
மிதுனம்
அக்டோபர் 18, 2020
ஐப்பசி 02 - ஞாயிறு
பங்காளிகளுக்கு இடையேயான உறவு மேம்படும். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேலோங்கும். புதிய யுக்திகளால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். இணையதள வேலை வாய்ப்புகளினால் மேன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மிருகசீரிஷம் : உறவு மேம்படும்.
திருவாதிரை : இலாபம் கிடைக்கும்.
புனர்பூசம் : மேன்மை உண்டாகும்.
---------------------------------------
கடகம்
அக்டோபர் 18, 2020
ஐப்பசி 02 - ஞாயிறு
பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். வெளிவட்டாரங்களில் மரியாதை உயரும். சொந்த பந்தங்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். இளைய சகோதரர்களிடம் அனுகூலமாக நடந்து கொள்ளவும். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : அறிமுகம் உண்டாகும்.
பூசம் : மகிழ்ச்சியான நாள்.
ஆயில்யம் : அனுகூலமாக நடந்து கொள்ளவும்.
---------------------------------------
சிம்மம்
அக்டோபர் 18, 2020
ஐப்பசி 02 - ஞாயிறு
மாணவர்களுக்கு கல்வி பயிலும் விதங்களில் மாற்றங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளில் சில காலதாமதம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். பேச்சில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
மகம் : மாற்றங்கள் ஏற்படும்.
பூரம் : அனுசரித்து செல்லவும்.
உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
---------------------------------------
கன்னி
அக்டோபர் 18, 2020
ஐப்பசி 02 - ஞாயிறு
பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பாக வெளிவட்டாரங்களில் உங்களின் மீதான செல்வாக்கு உயரும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் சுபச்செய்திகள் கிடைக்கும். தம்பதியர்களுக்கிடையே அன்பும், புரிதலும் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திரம் : பணவரவு மேம்படும்.
அஸ்தம் : செல்வாக்கு உயரும்.
சித்திரை : சுபச்செய்திகள் கிடைக்கும்.
---------------------------------------
துலாம்
அக்டோபர் 18, 2020
ஐப்பசி 02 - ஞாயிறு
எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். எதிர்ப்புகளை வெற்றிக்கொள்ளும் அளவிற்கு செயல்பாடுகள் இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் உள்ள போட்டி, பொறாமைகள் குறையும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதன் மூலம் கடன் பிரச்சனைகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
சித்திரை : பதவி உயர்வு கிடைக்கும்.
சுவாதி : ஆர்வம் உண்டாகும்.
விசாகம் : பொறாமைகள் குறையும்.
---------------------------------------
விருச்சகம்
அக்டோபர் 18, 2020
ஐப்பசி 02 - ஞாயிறு
பிள்ளைகளின் செயல்பாடுகளின் மூலம் இலாபம் உண்டாகும். பழைய நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். மூத்த உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் தொழில் சம்பந்தமான சில நுணுக்கங்களை கற்பீர்கள். கலைஞர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
விசாகம் : இலாபகரமான நாள்.
அனுஷம் : ஆதாயம் உண்டாகும்.
கேட்டை : நுணுக்கங்களை கற்பீர்கள்.
---------------------------------------
தனுசு
அக்டோபர் 18, 2020
ஐப்பசி 02 - ஞாயிறு
மனை சம்பந்தமான தொழில் முயற்சிகள் ஈடேறும். வாகனப் பயணங்களால் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். தாயின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மூலம் : முயற்சிகள் ஈடேறும்.
பூராடம் : ஆசிகள் கிடைக்கும்.
உத்திராடம் : நினைவாற்றல் மேலோங்கும்.
---------------------------------------
மகரம்
அக்டோபர் 18, 2020
ஐப்பசி 02 - ஞாயிறு
சங்கீத இசைக்கலைஞர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். திடீர் யோகத்தால் எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். மனைகளில் வீடு கட்டும் பணிகளை தொடங்குவீர்கள். வெளிநாட்டு பணி முயற்சிகளில் எண்ணிய பலன்கள் கிடைக்கும். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : சாதகமான நாள்.
திருவோணம் : திடீர் யோகம் உண்டாகும்.
அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.
---------------------------------------
கும்பம்
அக்டோபர் 18, 2020
ஐப்பசி 02 - ஞாயிறு
புதிய நபர்களின் நட்பால் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். புதியவற்றை கண்டறிந்து புகழப்படுவீர்கள். சக ஊழியர்களால் தொழிலில் சாதகமான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகளால் இலாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அமைதி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : அபிவிருத்தி உண்டாகும்.
சதயம் : புகழப்படுவீர்கள்.
பூரட்டாதி : இலாபம் கிடைக்கும்.
---------------------------------------
மீனம்
அக்டோபர் 18, 2020
ஐப்பசி 02 - ஞாயிறு
அஞ்ஞான எண்ணங்கள் மேலோங்கும். அரசு தொடர்பான செயல்பாடுகள் மற்றும் ஆவணங்களில் கவனம் வேண்டும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படலாம். எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். பிறருக்கு உதவும்போது எச்சரிக்கையுடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
பூரட்டாதி : கவனம் வேண்டும்.
உத்திரட்டாதி : மாற்றங்கள் ஏற்படலாம்.
ரேவதி : எச்சரிக்கை வேண்டும்.
---------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக