புதன், 21 அக்டோபர், 2020

இன்றைய (21-10-2020) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்

 மேஷம்

அக்டோபர் 21, 2020


ஐப்பசி 05 - புதன்

 உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரித்தாலும் உயர் அதிகாரிகளின் ஆதரவால் திருப்தியான சூழ்நிலைகள் உண்டாகும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நன்மையளிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாகும். வாழ்க்கை துணைவரின் மூலம் பொருளாதாரம் சார்ந்த உதவிகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



அஸ்வினி : திருப்தியான நாள்.


பரணி : பயணங்கள் சாதகமாகும்.


கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------





ரிஷபம்

அக்டோபர் 21, 2020


ஐப்பசி 05 - புதன்

 தம்பதியர்களுக்கு இடையே ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் மனவருத்தங்களை தவிர்க்கலாம். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு காலதாமதமாக கிடைக்கும். கூட்டாளிகளிடம் எதிர்பார்த்த இலாபம் தாமதப்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.


ரோகிணி : காலதாமதம் நேரிடும்.


மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.

---------------------------------------





மிதுனம்

அக்டோபர் 21, 2020


ஐப்பசி 05 - புதன்

 உத்தியோகம் தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிர்பாராத இடமாற்றங்கள் நேரிடலாம். வழக்கு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் அகலும். பங்காளி வகை உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்களில் அலைச்சலுக்கு பின்பு ஆதாயம் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



மிருகசீரிஷம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.


திருவாதிரை : இடமாற்றங்கள் நேரிடலாம்.


புனர்பூசம் : இழுபறிகள் அகலும்.

---------------------------------------





கடகம்

அக்டோபர் 21, 2020


ஐப்பசி 05 - புதன்

 வாரிசுகளிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தேவையற்ற பொறுப்புகளும், வீண் அலைச்சல்களும் ஏற்படலாம். கலை தொடர்பான பணிகளில் ஆர்வம் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



புனர்பூசம் : நிதானம் வேண்டும்.


பூசம் : ஆர்வம் ஏற்படும்.


ஆயில்யம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.

---------------------------------------





சிம்மம்

அக்டோபர் 21, 2020


ஐப்பசி 05 - புதன்

 பிள்ளைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனைகள் முன்னேற்றத்தை உண்டாக்கும். வாசனை திரவியங்களின் மூலம் இலாபம் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மகம் : மகிழ்ச்சியான நாள்.


பூரம் : ஆரோக்கியம் மேம்படும்.


உத்திரம் : இலாபம் கிடைக்கும்.

---------------------------------------





கன்னி

அக்டோபர் 21, 2020


ஐப்பசி 05 - புதன்

 சொத்துப்பிரிவினை தொடர்பான செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்பட்டால் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்ள முடியும். சகோதரர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். மற்றவர்களை பற்றி விமர்சிக்காமல் இருப்பது நல்லது. உத்தியோக உயர்வு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்



உத்திரம் : பொறுமை வேண்டும்.


அஸ்தம் : அனுகூலம் உண்டாகும்.


சித்திரை : வெற்றிகரமான நாள்.

---------------------------------------





துலாம்

அக்டோபர் 21, 2020


ஐப்பசி 05 - புதன்

 குடும்ப உறுப்பினர்களிடம் ஆரோக்கியமான விவாதங்கள் தோன்றி மறையும். புதிய முயற்சிகளின் மூலம் தனவரவுகள் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். எதையும் சமாளிக்கும் மனோதைரியம் உண்டாகும். உத்தியோகத்தில் நிம்மதியான சூழ்நிலைகள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



சித்திரை : விவாதங்கள் மறையும்.


சுவாதி : தனவரவுகள் அதிகரிக்கும்.


விசாகம் : ஒற்றுமை மேலோங்கும்.

---------------------------------------





விருச்சகம்

அக்டோபர் 21, 2020


ஐப்பசி 05 - புதன்

 புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகமும், ஆதரவும் கிடைக்கும். புதிய நபர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். பொன், பொருள் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



விசாகம் : அறிமுகம் கிடைக்கும்.


அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.


கேட்டை : பாராட்டுகளை பெறுவீர்கள்.

---------------------------------------





தனுசு

அக்டோபர் 21, 2020


ஐப்பசி 05 - புதன்

 திடமான சிந்தனையுடன் செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் முதலீடுகள் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பழைய நினைவுகளின் மூலம் உடல் சோர்வு உண்டாகும். மனதில் இருந்துவந்த ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உயர் பதவியில் இருப்பவர்கள் சற்று சிந்தித்து செயல்படுவது நன்மையளிக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



மூலம் : முன்னேற்றம் உண்டாகும்.


பூராடம் : சோர்வான நாள்.


உத்திராடம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------





மகரம்

அக்டோபர் 21, 2020


ஐப்பசி 05 - புதன்

 உத்தியோகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், அன்பும் அதிகரிக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவதன் மூலம் மதிப்புகள் உயரும். வாகனம் தொடர்பான பயணங்களில் கவனம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



உத்திராடம் : புரிதல் ஏற்படும்.


திருவோணம் : மதிப்புகள் அதிகரிக்கும்.


அவிட்டம் : கவனம் வேண்டும்.

---------------------------------------





கும்பம்

அக்டோபர் 21, 2020


ஐப்பசி 05 - புதன்

 சூழ்நிலைகளுக்கு தகுந்தாற்போல் நடந்து கொள்வதன் மூலம் நினைத்த காரியங்களில் எதிர்பார்ப்புகள் ஈடேறும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் ஏற்படும். அரசியல் மற்றும் பொதுமக்கள் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். உடன்பிறந்தவர்களின் மூலம் தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



அவிட்டம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


சதயம் : முன்னேற்றமான நாள்.


பூரட்டாதி : கீர்த்தி உண்டாகும்.

---------------------------------------





மீனம்

அக்டோபர் 21, 2020


ஐப்பசி 05 - புதன்

 தொழிலில் அரசு தொடர்பான எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தர்ம ஸ்தாபனம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான தொழிலில் ஆதாயம் மேம்படும். சொந்த ஊர் தொடர்பான பயணங்கள் எண்ணிய விதத்தில் நடைபெறும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.


உத்திரட்டாதி : மேன்மையான நாள்.


ரேவதி : ஆதாயம் உண்டாகும்.

---------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Odi odi Utkalantha Jothi Full Song Tamil Lyrics for music | ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் - ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics)

 ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics) Odi odi Utkalantha Jothi l...