வியாழன், 26 நவம்பர், 2020

இன்றைய (26-11-2020) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்

மேஷம்

நவம்பர் 26, 2020


கார்த்திகை 11 - வியாழன்

 மனதில் தன்னம்பிக்கையும், புத்துணர்ச்சியும் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தந்தை வழி உறவினர்களின் நெருக்கமான சிலரிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அஸ்வினி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


பரணி : மாற்றங்கள் உண்டாகும்.


கிருத்திகை : நெருக்கம் அதிகரிக்கும்.

---------------------------------------





ரிஷபம்

நவம்பர் 26, 2020


கார்த்திகை 11 - வியாழன்

 குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வாரிசுகள் தொடர்பான செயல்பாடுகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். சபை தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.


ரோகிணி : பிரச்சனைகள் குறையும்.

 

மிருகசீரிஷம் : மேன்மையான நாள்.

---------------------------------------





மிதுனம்

நவம்பர் 26, 2020


கார்த்திகை 11 - வியாழன்

 மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நிர்வாகத்திறமையின் மூலம் பலருடைய ஆதரவையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள். புதிய நபர்களின் வருகையினால் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் தொடர்பான உயர் அதிகாரிகளின் ஆதரவினை பெறுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



மிருகசீரிஷம் : சிந்தனைகள் தோன்றும்.


திருவாதிரை : திறமைகள் வெளிப்படும்.


புனர்பூசம் : பாராட்டுகள் கிடைக்கும்.

---------------------------------------





கடகம்

நவம்பர் 26, 2020


கார்த்திகை 11 - வியாழன்

 சகோதரர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். பணியாட்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வாகன வசதி மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாக செயல்படுவதன் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



புனர்பூசம் : ஆதரவான நாள்.


பூசம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

 

ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------





சிம்மம்

நவம்பர் 26, 2020


கார்த்திகை 11 - வியாழன்

 மனதில் நினைத்த எண்ணங்கள் நிறைவேறுவதில் காலதாமதம் உண்டாகும். பொருளாதாரம் தொடர்பான செயல்பாடுகளில் இழுபறியான சூழல் ஏற்படும். தந்தையின் மூத்த சகோதரர்களிடம் சற்று அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். தேவையற்ற விவாதங்களின் மூலம் மனதில் அமைதியற்ற சூழ்நிலை ஏற்படலாம்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



மகம் : காலதாமதம் உண்டாகும்.


பூரம் : இழுபறியான நாள்.


உத்திரம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------





கன்னி

நவம்பர் 26, 2020


கார்த்திகை 11 - வியாழன்

 சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வாழ்க்கைத்துணைவர் வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் எண்ணங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் மனதில் தெளிவும், புத்துணர்ச்சியும் உண்டாகும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திரம் : எண்ணங்கள் ஈடேறும்.


அஸ்தம் : ஆதரவு கிடைக்கும்.


சித்திரை : மாற்றங்கள் உண்டாகும்.

---------------------------------------





துலாம்

நவம்பர் 26, 2020


கார்த்திகை 11 - வியாழன்

 உயர் அதிகாரிகளிடம் சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகளின் தன்மைகளை அறிந்து கொள்வீர்கள். வாகனப் பயணங்களின்போது சற்று பொறுமை வேண்டும். முன்கோபத்தால் யாரையும் உதாசீனப்படுத்தாமல் பொறுமையுடன் செயல்படுவது நன்மையளிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



சித்திரை : பொறுமை வேண்டும்.


சுவாதி : தனவரவுகள் கிடைக்கும்.


விசாகம் : முன்கோபத்தை தவிர்க்கவும்.

---------------------------------------





விருச்சகம்

நவம்பர் 26, 2020


கார்த்திகை 11 - வியாழன்

 மாணவர்கள் விளையாட்டுத்துறையில் கவனத்துடன் இருக்க வேண்டும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



விசாகம் : கவனம் வேண்டும்.


அனுஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.


கேட்டை : ஆர்வம் ஏற்படும்.

---------------------------------------





தனுசு

நவம்பர் 26, 2020


கார்த்திகை 11 - வியாழன்

 மனதிற்கு பிடித்த இடங்களுக்கு சென்று வருவீர்கள். விவசாயப் பொருட்களின் மூலம் இலாபம் உண்டாகும். சுரங்கம் தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பிராணிகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



மூலம் : இலாபம் உண்டாகும்.


பூராடம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------





மகரம்

நவம்பர் 26, 2020


கார்த்திகை 11 - வியாழன்

 நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சங்கீதத்தில் ஈடுபாடு மற்றும் நுட்பங்களை அறிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். தடைபட்ட பாகப்பிரிவினைகள் சாதகமாக கிடைக்கும். விற்பனை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு இலாபம் மேம்படும். சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.


திருவோணம் : நுட்பங்களை அறிவீர்கள்.


அவிட்டம் : சாதகமான நாள்.

---------------------------------------





கும்பம்

நவம்பர் 26, 2020


கார்த்திகை 11 - வியாழன்

 தனம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எந்தவொரு பொருளையும் பாதுகாக்கும் திறமைகள் மேம்படும். சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளின் மூலம் இலாபம் உண்டாகும். புதிய கலைகளை கற்பதில் ஆர்வம் ஏற்படும். அணிகலன்களின் சேர்க்கை உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



அவிட்டம் : இன்னல்கள் குறையும்.


சதயம் : இலாபம் உண்டாகும்.


பூரட்டாதி : ஆர்வம் ஏற்படும்.

---------------------------------------





மீனம்

நவம்பர் 26, 2020


கார்த்திகை 11 - வியாழன்

 வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். வாழ்க்கைத்துணைவர் வழி உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகளும், போட்டிகளும் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



பூரட்டாதி : செல்வாக்கு அதிகரிக்கும்.


உத்திரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.


ரேவதி : ஆதாயம் உண்டாகும்.

---------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Odi odi Utkalantha Jothi Full Song Tamil Lyrics for music | ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் - ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics)

 ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics) Odi odi Utkalantha Jothi l...