சனி, 7 நவம்பர், 2020

ஆண் ஜாதகருக்கு நிச்சயமாக திருமணம் நடக்கும் என்பதை நிர்ணயம் செய்வது எப்படி...?

ஆண் ஜாதகம்

1, ஆண் ஜாதகத்தில் லக்னாதிபதிக்கு 1,5,9-இல் அல்லது 2,12-இல் அல்லது 7-இல் 7-க்குடையவன் நின்றிருக்க 7-க்குடையவனுக்கு திரிகோணத்தில் கேது இல்லாமல் இருக்க வேண்டும்.

2, ஆண் ஜாதகத்தில் குருவுக்கு 1,5,9-இல் அல்லது 2,12-இல் அல்லது 7-இல் சுக்கிரன் நின்றிருக்க, சுக்கிரனுக்கு திரிகோணத்தில் கேது இல்லாமல் இருக்க வேண்டும்.

3, 7-க்குடையவனும், லக்னாதிபதியும் அடுத்தடுத்த ராசிகளில் நின்றால் திருமணம் நிச்சயம் நடைபெறும்.

4, 7-க்குடையவனும், லக்னாதிபதியும் ஒருவருக்கொருவர் திரிகோணமாக நின்றால் திருமணம் நிச்சயம் நடைபெறும்.

5, 7-ஆம் பாவ அதிபதி லக்னத்திற்கு கேந்திரத்தில் ( 1-4-7-10 ) நின்றிருந்தால் திருமணம் நிச்சயம் நடைபெறும்.

6, 7-ஆம் பாவ அதிபதி குருவாக அமைந்து லக்னத்திற்கு கேந்திரத்திலோ (1-4-7-10 ) அல்லது திரிகோணத்திலோ ( 1,5,9 ) நின்றிருந்தால் திருமணம் நிச்சயம் நடைபெறும்.

7, 7-ஆம் பாவ அதிபதி செவ்வாயாக அமைந்து லக்னத்திற்கு கேந்திரத்திலோ அல்லது 6-ஆம் வீட்டிலோ அல்லது 10-ஆம் வீட்டிலோ நின்றிருந்தால் திருமணம் நிச்சயம் நடைபெறும்.

8, 7-ஆம் பாவ அதிபதிபதி சனியாக அமைந்து, லக்னத்திற்கு கேந்திரத்திலோ அல்லது 4-ஆம் வீட்டிலோ அல்லது 11-ஆம் வீட்டிலோ நின்றிருந்தால் திருமணம் நிச்சயம் நடைபெறும்.

9, 7-ஆம் பாவ அதிபதியும், லக்னாதிபதியும் இணைந்து எந்த பாவத்திலிருந்தாலும் திருமணம் நிச்சயம் நடைபெறும்.

10, 7-ஆம் பாவ அதிபதியும் லக்னாதிபதியும் ஒருவருக்கொருவர் சம சப்தமாக இருந்தாலும் திருமணம் நிச்சயம் நடைபெறும்.

11, 7- ஆம் பாவாதிபதியும், லக்னாதிபதியும் பரிவர்த்தனை பெற்று நின்றிருந்தால் திருமணம் நிச்சயம் நடைபெறும்.

 மேற்கண்ட விதிகளில் ஒரு விதியாவது ஜாதகருக்கு பொருந்தி வருமானால் நிச்சயம் திருமணம் ஆகும். எனக் கூறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Odi odi Utkalantha Jothi Full Song Tamil Lyrics for music | ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் - ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics)

 ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics) Odi odi Utkalantha Jothi l...