திங்கள், 18 ஜனவரி, 2021

இன்றைய (18-01-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்

மேஷம்

ஜனவரி 18, 2021


தை 05 - திங்கள்

மனதில் இருக்கும் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மனதிற்கு நெருக்கமானவர்களுக்காக சில காரியங்களை விட்டுக்கொடுத்து மகிழ்ச்சி அடைவீர்கள். பிற மொழி மற்றும் மதம் சார்ந்த மக்களிடம் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். நீண்ட நாள் நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் அனுபவமும், இலாபமும் கிடைக்கும். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



அஸ்வினி : ஆசைகள் நிறைவேறும். 


பரணி : மகிழ்ச்சியான நாள். 


கிருத்திகை : அனுபவம் கிடைக்கும்.

---------------------------------------





ரிஷபம்

ஜனவரி 18, 2021


தை 05 - திங்கள்

அரசு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் இலாபம் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வாடிக்கையாளர்களின் அறிமுகமும், ஆதரவும் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



கிருத்திகை : ஆதாயமான நாள். 


ரோகிணி : இலாபம் அதிகரிக்கும்.


மிருகசீரிஷம் : ஆதரவான நாள்.

---------------------------------------





மிதுனம்

ஜனவரி 18, 2021


தை 05 - திங்கள்

எதிர்காலம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவியாக செயல்படுவார்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். தனித்திறமையை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வாரிசுகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும். 


திருவாதிரை : சாதகமான நாள்.


புனர்பூசம் : மகிழ்ச்சி உண்டாகும்.

---------------------------------------





கடகம்

ஜனவரி 18, 2021


தை 05 - திங்கள்

குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். பிரபலமான நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நெருக்கமானவர்களின் மூலம் சிறு சிறு அலைச்சல்கள் ஏற்பட்டு மறையும். வியாபாரம் தொடர்பான பணிகளில் இலாபம் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். போட்டிகளில் ஈடுபட்டு பாராட்டுகளை பெறுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



புனர்பூசம் : அறிமுகம் கிடைக்கும். 


பூசம் : இலாபகரமான நாள். 


ஆயில்யம் : பாராட்டுகளை பெறுவீர்கள்.

---------------------------------------





சிம்மம்

ஜனவரி 18, 2021


தை 05 - திங்கள்

உத்தியோக பணிகளை முடிப்பதில் காலதாமதம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். வியாபாரம் தொடர்பான பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் காணப்படும். செயல்பாடுகளில் மறைமுகமான விமர்சனங்கள் ஏற்பட்டு மறையும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



மகம் : காலதாமதம் ஏற்படும்.


பூரம் : மந்தமான நாள்.


உத்திரம் : விமர்சனங்கள் ஏற்படும்.

---------------------------------------





கன்னி

ஜனவரி 18, 2021


தை 05 - திங்கள்

மனதில் புதிய சிந்தனைகள் மேம்படும். பிள்ளைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூட்டாளிகளிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



உத்திரம் : சிந்தனைகள் மேம்படும். 


அஸ்தம் : உதவிகள் கிடைக்கும். 


சித்திரை : எண்ணங்கள் நிறைவேறும்.

---------------------------------------





துலாம்

ஜனவரி 18, 2021


தை 05 - திங்கள்

குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். இழுபறியாக இருந்துவந்த வேலைகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். வியாபாரம் தொடர்பான பணிகளில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



சித்திரை : இழுபறிகள் அகலும். 


சுவாதி : சாதகமான நாள். 


விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------





விருச்சகம்

ஜனவரி 18, 2021


தை 05 - திங்கள்

முயற்சியில் இருந்துவந்த தடைகளை தாண்டி முன்னேற்றம் அடைவீர்கள். தாய்வழி உறவினர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். கலைப்பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவினால் நிம்மதியான சூழ்நிலைகள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



விசாகம் : முன்னேற்றம் ஏற்படும். 


அனுஷம் : ஆதாயமான நாள்.


கேட்டை : மேன்மை உண்டாகும்.

---------------------------------------





தனுசு

ஜனவரி 18, 2021


தை 05 - திங்கள்

குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகளால் மனதில் மாற்றங்கள் உண்டாகும். தொலைபேசி வழியாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வீடு மற்றும் வாகனம் மாற்றுவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சிக்கேற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் பொருளாதாரம் தொடர்பான இன்னல்கள் குறையும். எழுத்துத்துறை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்



மூலம் : ஆலோசனைகள் கிடைக்கும். 


பூராடம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


உத்திராடம் : இன்னல்கள் குறையும். 

---------------------------------------





மகரம்

ஜனவரி 18, 2021


தை 05 - திங்கள்

திட்டமிட்ட பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



உத்திராடம் : முயற்சிகள் ஈடேறும். 


திருவோணம் : அனுகூலமான நாள். 


அவிட்டம் : வெற்றி கிடைக்கும்.

---------------------------------------





கும்பம்

ஜனவரி 18, 2021


தை 05 - திங்கள்

உரையாடும் பொழுது பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். சிந்தனைத்திறனில் மாற்றங்கள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் சற்று கவனம் வேண்டும். உபரி வருமானம் மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். வாக்குவன்மையினால் நீண்ட நாட்களாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



அவிட்டம் : அறிவு வெளிப்படும்.


சதயம் : மாற்றமான நாள். 


பூரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------





மீனம்

ஜனவரி 18, 2021


தை 05 - திங்கள்

மனதில் இனம்புரியாத கவலைகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். சந்தேக உணர்வினால் நெருக்கமானவரிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முதலீடுகளும், இலாபமும் கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதலும், புதிய கண்ணோட்டமும் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்



பூரட்டாதி : கவலைகள் நீங்கும். 


உத்திரட்டாதி : கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.


ரேவதி : புரிதல் உண்டாகும்.

---------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Odi odi Utkalantha Jothi Full Song Tamil Lyrics for music | ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் - ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics)

 ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics) Odi odi Utkalantha Jothi l...