சனி, 23 ஜனவரி, 2021

இன்றைய (23-01-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்

மேஷம்

ஜனவரி 23, 2021


தை 10 - சனி


குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்வதன் மூலம் ஒற்றுமை மேம்படும். எதிர்பார்த்த தனம் தொடர்பான உதவிகள் கிடைக்கும். தானியம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



அஸ்வினி : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.


பரணி : உதவிகள் கிடைக்கும்.


கிருத்திகை : மேன்மை உண்டாகும்.

---------------------------------------




ரிஷபம்

ஜனவரி 23, 2021


தை 10 - சனி

உடலில் இருந்துவந்த ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். மனதில் புதிய கண்டுபிடிப்பு தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். உறவினர்களிடம் கருத்துக்களை பரிமாறும்போது அவர்களின் கருத்துக்களுக்கு மதிப்புகள் கொடுப்பதன் மூலம் நன்மை ஏற்படும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பொது வாழ்வு தொடர்பான பணியில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



கிருத்திகை : புத்துணர்ச்சியான நாள்.


ரோகிணி : நன்மை ஏற்படும்.


மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------




மிதுனம்

ஜனவரி 23, 2021


தை 10 - சனி

கடன் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வேலையாட்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் காணப்படும். செய்யும் முயற்சிகளின் மூலம் அபிவிருத்திக்கான எண்ணங்கள் ஈடேறும். மனதில் இருந்துவந்த தேவையற்ற கவலைகள் குறைந்து மகிழ்ச்சி உண்டாகும். இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் மனதில் தோன்றும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மிருகசீரிஷம் : தீர்வு கிடைக்கும்.


திருவாதிரை : எண்ணங்கள் ஈடேறும்.


புனர்பூசம் : சிந்தனைகள் தோன்றும்.

---------------------------------------




கடகம்

ஜனவரி 23, 2021


தை 10 - சனி

மனதில் இருக்கும் ஆசைகள் நிறைவேறும். எதிர்பாலின மக்களின் மீது ஈர்ப்பு உண்டாகும். புதிய துறைகளில் ஈடுபட்டு நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். சபை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு உதவிகள் கிடைக்கும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மையும், செல்வச்சேர்க்கையும் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



புனர்பூசம் : ஆசைகள் நிறைவேறும்.


பூசம் : உதவிகள் கிடைக்கும்.


ஆயில்யம் : செல்வச்சேர்க்கை உண்டாகும்.

---------------------------------------




சிம்மம்

ஜனவரி 23, 2021


தை 10 - சனி

குழந்தையின் செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். உற்பத்தி தொடர்பான வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இலாபம் மேம்படும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மகம் : இலாபம் மேம்படும்.


பூரம் : தாமதங்கள் குறையும்.


உத்திரம் : கவனம் வேண்டும்.

---------------------------------------




கன்னி

ஜனவரி 23, 2021


தை 10 - சனி

குலதெய்வ வழிபாடு தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். தொழில் தொடர்பான வியாபாரத்தில் எதிர்பாராத முன்னேற்றம் உண்டாகும். பங்காளி உறவுகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சர்வதேச வணிகம் தொடர்பான செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் அகலும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திரம் : சிந்தனைகள் ஏற்படும்.


அஸ்தம் : முன்னேற்றம் உண்டாகும்.


சித்திரை : கருத்து வேறுபாடுகள் குறையும்.

---------------------------------------




துலாம்

ஜனவரி 23, 2021


தை 10 - சனி

பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் உடைமைகளில் கவனம் வேண்டும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



சித்திரை : கவனம் வேண்டும்.


சுவாதி : அலைச்சல்கள் உண்டாகும்.


விசாகம் : விழிப்புணர்வு வேண்டும்.

---------------------------------------




விருச்சகம்

ஜனவரி 23, 2021


தை 10 - சனி

புதிய தொழில் தொடங்குவது தொடர்பான செயல்பாடுகளில் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். சமூகம் தொடர்பான பணிகளில் பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். தம்பதியர்களுக்கிடையே மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



விசாகம் : முயற்சிகள் ஈடேறும்.


அனுஷம் : அறிமுகம் கிடைக்கும்.


கேட்டை : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




தனுசு

ஜனவரி 23, 2021


தை 10 - சனி

உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். உபரி வருமானம் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வாகனப் பயணங்களின்போது பொறுமை வேண்டும். கால்நடைகள் வளர்ப்பு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த இடையூறுகள் அகலும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மூலம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


பூராடம் : பொறுமை வேண்டும்.


உத்திராடம் : இடையூறுகள் அகலும்.

---------------------------------------




மகரம்

ஜனவரி 23, 2021


தை 10 - சனி

இலக்கியம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் காணப்படும். ஆன்மிகம் தொடர்பான பயணங்களின் மூலம் மனதில் தெளிவு பிறக்கும். உணர்ச்சிவசப்படாமல் முக்கியமான விஷயங்களில் சிந்தித்து செயல்பட வேண்டும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதலும், குழப்பங்களும் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்



உத்திராடம் : மேன்மையான நாள்.


திருவோணம் : தெளிவு பிறக்கும்.


அவிட்டம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------




கும்பம்

ஜனவரி 23, 2021


தை 10 - சனி

உலக வாழ்க்கையின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். தம்பதியர்களுக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான செயல்பாடுகளில் புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். விவசாயம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



அவிட்டம் : அனுபவம் கிடைக்கும்.


சதயம் : மாற்றங்கள் உண்டாகும்.


பூரட்டாதி : அலைச்சல்கள் மேம்படும்.

---------------------------------------




மீனம்

ஜனவரி 23, 2021


தை 10 - சனி

எழுத்துக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நவீன தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மூலம் இலாபம் மேம்படும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை பகிர்வதை தவிர்ப்பது நல்லது. திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.


உத்திரட்டாதி : இலாபம் மேம்படும்.


ரேவதி : எண்ணங்கள் ஈடேறும்.

---------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Odi odi Utkalantha Jothi Full Song Tamil Lyrics for music | ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் - ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics)

 ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics) Odi odi Utkalantha Jothi l...