புதன், 18 ஆகஸ்ட், 2021

இன்றைய (18-08-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

ஆகஸ்ட் 18, 2021



ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் தோன்றும். எதிர்பாராத புதிய வாய்ப்புகள் சிலருக்கு ஆதாயமான பலன்களை ஏற்படுத்தும். தந்தை வழி உறவுகளிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



அஸ்வினி : ஈடுபாடு உண்டாகும்.


பரணி : குழப்பங்கள் நீங்கும்.


கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------




ரிஷபம்

ஆகஸ்ட் 18, 2021



உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த சில உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். வாழ்க்கைத்துணைவரின் வழி உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத செலவுகளின் மூலம் விரயங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



கிருத்திகை : காலதாமதம் உண்டாகும்.


ரோகிணி : சிந்தித்து செயல்படவும்.


மிருகசீரிஷம் : விரயங்கள் ஏற்படும்.

---------------------------------------




மிதுனம்

ஆகஸ்ட் 18, 2021



மறதி தொடர்பான பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். எதிர்பாலின மக்களின் மூலம் ஆதாயமான சூழ்நிலைகள் உண்டாகும். உணவு சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். புதிய இடங்களுக்கு சென்று வருவதற்கான சூழ்நிலைகள் அமையும். மற்றவர்களிடம் பழகும் தன்மையில் மாற்றங்கள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



மிருகசீரிஷம் : பிரச்சனைகள் நீங்கும்.


திருவாதிரை : விழிப்புணர்வு வேண்டும்.


புனர்பூசம் : மாற்றமான நாள்.

---------------------------------------




கடகம்

ஆகஸ்ட் 18, 2021



வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எடுத்துச்செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். கூட்டாளிகளிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிரிகளின் மூலம் காலதாமதம் உண்டானாலும் ஆதாயமான சூழ்நிலைகள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்



புனர்பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


பூசம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


ஆயில்யம் : ஆதாயமான நாள்.

---------------------------------------




சிம்மம்

ஆகஸ்ட் 18, 2021



பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். தனவரவுகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்வீர்கள். போட்டி, பந்தயங்களில் ஈடுபாடு உண்டாகும். பழைய சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பங்கள் ஏற்படும். உறவினர்களின் வருகையால் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



மகம் : ஆர்வம் உண்டாகும்.


பூரம் : குழப்பங்கள் ஏற்படும்.


உத்திரம் : மாற்றமான நாள்.

---------------------------------------




கன்னி

ஆகஸ்ட் 18, 2021



மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். தவறிப்போன சில பொருட்கள் பற்றி அறிந்து கொள்வீர்கள். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். விவசாயம் தொடர்பான பணிகளில் விளைச்சல்கள் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



உத்திரம் : தாமதங்கள் குறையும்.


அஸ்தம் : கவனம் வேண்டும்.


சித்திரை : நெருக்கம் அதிகரிக்கும்.

---------------------------------------




துலாம்

ஆகஸ்ட் 18, 2021



வாக்கு சாதுர்யத்தின் மூலம் தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். முயற்சிக்கேற்ப தனவரவுகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



சித்திரை : தனவரவுகள் மேம்படும்.


சுவாதி : ஆதரவான நாள்.


விசாகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




விருச்சிகம்

ஆகஸ்ட் 18, 2021



பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும். வித்தியாசமான சிந்தனைகள் மனதில் ஏற்பட்டு நீங்கும். தனம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். நறுமண பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



விசாகம் : மாற்றங்கள் உண்டாகும்.


அனுஷம் : இலக்குகள் பிறக்கும்.


கேட்டை : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------




தனுசு

ஆகஸ்ட் 18, 2021



கால்நடைகள் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்களின் மூலம் உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளும், அதன் மூலம் சிறு சிறு கோபங்களும் உண்டாகும். உயர் பதவியில் இருப்பவர்கள் நிதானத்துடன் செயல்படுவது நன்மதிப்பை ஏற்படுத்தும். மற்றவர்களின் பொருட்களின் மீதான ஈர்ப்பு சிலருக்கு உண்டாகும். 



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம் 



மூலம் : உடல் சோர்வு நீங்கும்.


பூராடம் : நிதானம் வேண்டும்.


உத்திராடம் : ஈர்ப்பு உண்டாகும்.

---------------------------------------




மகரம்

ஆகஸ்ட் 18, 2021



வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பணிபுரியும் இடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. தர்க்கம் புரிவதில் சூழ்நிலைக்கேற்ப பேச்சுக்களில் அனுசரித்து செல்ல வேண்டும். விரும்பிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திராடம் : சாதகமான நாள்.


திருவோணம் : விவாதங்களைத் தவிர்க்கவும்.


அவிட்டம் : விருப்பங்கள் நிறைவேறும்.

---------------------------------------




கும்பம்

ஆகஸ்ட் 18, 2021



மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். மின்சாரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். புதுவிதமான பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் வசதி வாய்ப்புகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நண்பர்களின் வருகையானது மனதிற்கு புதிய நம்பிக்கையை அளிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



அவிட்டம் : கவலைகள் குறையும்.


சதயம் : வாய்ப்புகள் உண்டாகும். 


பூரட்டாதி : நம்பிக்கை மேம்படும்.

---------------------------------------




மீனம்

ஆகஸ்ட் 18, 2021



அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். வெளிவட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும். கௌரவப் பொறுப்புகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார அபிவிருத்தி தொடர்பான எண்ணங்களும், அதற்கான வாய்ப்புகளும் சாதகமாக அமையும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



பூரட்டாதி : மதிப்புகள் அதிகரிக்கும்.


உத்திரட்டாதி : அபிவிருத்தியான நாள்.


ரேவதி : மாற்றங்கள் உண்டாகும்.

---------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Odi odi Utkalantha Jothi Full Song Tamil Lyrics for music | ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் - ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics)

 ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics) Odi odi Utkalantha Jothi l...