ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

இன்றைய (27-02-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

                               >>> ஜோதிடம் என்னும் அற்புதக்கலையில் ஆர்வம் கொண்டு அக்கலையின் அரிய தகவல்களைப் பகிர விரும்புவோருக்கும், அறிய விரும்புவோருக்குமான பாலம் -  ஜோதிட அஞ்சல் குழு Telegram குழுவில் இணைய இங்கே சொடுக்குங்கள்...


மேஷம்

பிப்ரவரி 27, 2022




வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். புதுவிதமான இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும்.  உடல் ஆரோக்கியத்தில் புத்துணர்ச்சி உண்டாகும். திருப்தியான நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



அஸ்வினி : முன்னேற்றமான நாள்.


பரணி : இலக்குகள் பிறக்கும்.


கிருத்திகை : புத்துணர்ச்சி உண்டாகும்.

---------------------------------------





ரிஷபம்

பிப்ரவரி 27, 2022




குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். கால்நடை தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும்.  திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் மேன்மை ஏற்படும். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும்.  ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். ஆர்வம் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.


ரோகிணி : லாபம் உண்டாகும்.


மிருகசீரிஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------





மிதுனம்

பிப்ரவரி 27, 2022




உடன்பிறந்தவர்களுடன் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். சமூகப் பணிகளில் அலைச்சல் அதிகரிக்கும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். மருத்துவம் தொடர்பான விஷயங்களில் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் உண்டாகும். முயற்சிகளில் கவனம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3 


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



மிருகசீரிஷம் : அலைச்சல் உண்டாகும்.


திருவாதிரை : சிந்தித்து செயல்படவும்.


புனர்பூசம் : குழப்பம் உண்டாகும். 

---------------------------------------





கடகம்

பிப்ரவரி 27, 2022




தனவரவுகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மாற்றமான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் புதிய அனுபவம் கிடைக்கும். கனிவு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



புனர்பூசம் : இழுபறிகள் மறையும்.


பூசம் : மாற்றமான நாள்.


ஆயில்யம் : அனுபவம் பிறக்கும்.

---------------------------------------





சிம்மம்

பிப்ரவரி 27, 2022




குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். சுயதொழிலில் லாபம் மேம்படும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையும், தைரியமும் உண்டாகும். எதிர்பாராத அலைச்சல்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். சிந்தனைகள் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



மகம் : கலகலப்பான நாள். 


பூரம் : அனுபவம் ஏற்படும்.


உத்திரம் : மாற்றம் உண்டாகும். 

---------------------------------------





கன்னி

பிப்ரவரி 27, 2022




நெருக்கமானவர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். குழந்தைகளுக்கு கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். உத்தியோக பணிகளில் சிலருக்கு இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். நுட்பமான விஷயங்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். முயற்சிகள் ஈடேறும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



உத்திரம் : ஆர்வமின்மை குறையும்.


அஸ்தம் : மந்தத்தன்மை விலகும்.


சித்திரை : நுட்பங்களை அறிவீர்கள்.

---------------------------------------





துலாம்

பிப்ரவரி 27, 2022




சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும்.  வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். விவசாய பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும்.  உடன்பிறந்தவர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கைக்கான சூழ்நிலைகள் அமையும். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



சித்திரை : முன்னேற்றமான நாள். 


சுவாதி : வாய்ப்புகள் ஏற்படும். 


விசாகம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.

---------------------------------------





விருச்சிகம்

பிப்ரவரி 27, 2022




கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். நெருக்கமானவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து மகிழ்வீர்கள். புதிய முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.  பெரியோர்களின் ஆலோசனைகளின் மூலம் மனதில் புதிய தன்னம்பிக்கை ஏற்படும். சிந்தனைகள் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்



விசாகம் : குழப்பம் நீங்கும்.


அனுஷம் : மகிழ்ச்சி உண்டாகும்.


கேட்டை : தன்னம்பிக்கை மேம்படும்.

---------------------------------------





தனுசு

பிப்ரவரி 27, 2022




எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். குடும்பத்தில் புதிய முடிவுகளுக்கு ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். முக்கிய பிரமுகர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். விருப்பம் நிறைவேறும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



மூலம் : நெருக்கடியான நாள்.


பூராடம் : அனுபவம் ஏற்படும்.


உத்திராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------





மகரம்

பிப்ரவரி 27, 2022




சக ஊழியர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். புதுவிதமான ஆடைகளை அணிந்து மனம் மகிழ்வீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்களும், பழக்கவழக்கங்களில் புதுமையும் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு 



உத்திராடம் : விவாதங்களை தவிர்க்கவும். 


திருவோணம் : மாற்றமான நாள். 


அவிட்டம் : லாபம் அதிகரிக்கும். 

---------------------------------------






கும்பம்

பிப்ரவரி 27, 2022




கணவன், மனைவிக்கிடையே புரிதல் மேம்படும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படுவீர்கள். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். நண்பர்களின் மூலம் அலைச்சல்களும், புதிய அனுபவங்களும் ஏற்படும். இனம் புரியாத பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். வரவு மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



அவிட்டம் : புரிதல் மேம்படும்.


சதயம் : சிந்தித்து செயல்படவும்.


பூரட்டாதி : அனுபவம் பிறக்கும்.

---------------------------------------





மீனம்

பிப்ரவரி 27, 2022




உத்தியோகம் நிமிர்த்தமான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான பயணங்கள் கைகூடும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். வழக்கு சார்ந்த பணிகளில்  இருந்துவந்த இழுபறிகள் குறையும். திறமைகள் வெளிப்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



பூரட்டாதி : பயணங்கள் கைகூடும்.


உத்திரட்டாதி : அனுகூலமான நாள்.


ரேவதி : இழுபறிகள் குறையும்.

---------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Odi odi Utkalantha Jothi Full Song Tamil Lyrics for music | ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் - ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics)

 ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics) Odi odi Utkalantha Jothi l...