வியாழன், 6 அக்டோபர், 2022

செய்த நன்றியை மறவாது இருப்பதுடன், உதவி செய்தவருக்கும் நம்மாலான சேவைகளை செய்ய வேண்டும்....


செய்த நன்றியை மறவாது இருப்பதுடன், உதவி செய்தவருக்கும் நம்மாலான சேவைகளை செய்ய வேண்டும்....


மகாபாரதத்தில் இது தெரியுமா உங்களூக்கு ?


பாரதப் போர் நிகழ்ந்து முடியும் நிலையில், பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்தவாறே பல நீதிகளை தருமருக்கு எடுத்துரைத்தார்.


இவை பெரும்பாலும் நீதிக்கதைகள் ஆகும்.

தருமர், நன்றி பற்றிக் கேட்க பீஷ்மர் சொல்லலானார்.


வேடன் ஒருவன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். விஷம் தோய்ந்த அம்பு ஒன்றை விலங்கின் மீது அவன் செலுத்த அது குறிதவறி ஒரு பெரிய ஆலமரத்தை அடிப்பாகத்தைத் தைத்தது.


அம்பில் இருந்த விஷத்தினால் மரம் பட்டுப் போனது. இலைகள் உதிர்ந்து காட்சியளித்தது. மரம் பட்டுப்போனாலும், அம்மரத்தில் வாழ்ந்திருந்த கிளி ஒன்று அங்கேயே தங்கி இருந்தது.


இது கண்டு இந்திரன் அங்கு வந்து கிளியைப் பார்த்து, "காட்டில் எவ்வளவோ மரங்கள் இருக்கின்றன. அங்கு செல்லாமல் பட்டுப்போன இம்மரத்திலேயே ஏன் இருக்கிறாய் " என்றான்.


கிளி சொல்லியது..

"இம்மரத்தில் தான் நான் பிறந்து பறந்து, ஒடியாடி மகிழ்ந்து வளர்ந்தேன். இம்மரம் பூத்துக் குலுங்கி எனக்கு, காய்களும், கனிகளையும் தந்தது. அவற்றை உண்டு நான் வளர்ந்தேன். 


என் வளர்ச்சிக்கு பெரிய உதவி செய்த இம்மரத்தை விட்டு விட்டு என்னால் செல்ல முடியாது. இம்மரம் நல்ல நிலையில் இருந்த போது அதன் பலன்களை அனுபவித்த நான் இம்மரத்திற்கு கஷ்டநிலை ஏற்பட்டபோது அதை விட்டு பிரிவது நியாயமில்லை. அது செய் நன்றி மறப்பதற்கு ஒப்பாகும்' என்றது.


கிளியின் வார்த்தைகளைக் கேட்ட வேடன் மனம் மகிழ்ந்து, கிளிக்கு வேண்டிய வரத்தைக் கேட்கச் சொன்னான்.


கிளி உடனே.."பட்டுப்போன் இம்மரம் மீண்டும் தழைக்க வேண்டும். பசுமையோடு காய், கனிகளுடன் இருக்க வேண்டும்" என்றது.


இந்திரனும் அது போல வரமளிக்க, ஆலமரம் மீண்டும் துளிர்த்து பசுமையுடன் காட்சி தந்தது.



எந்த ஒரு செயலை நாம் செய்ய மறந்தாலும்... ஒருவர் நமக்குச் செய்த நன்றியை மறவாது இருப்பதுடன், உதவி செய்தவருக்கும் நம்மாலான சேவைகளை செய்ய வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Odi odi Utkalantha Jothi Full Song Tamil Lyrics for music | ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் - ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics)

 ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics) Odi odi Utkalantha Jothi l...