திங்கள், 21 செப்டம்பர், 2020

ராசிபலன்' சில சமயங்களில் ஏன் பலிப்பதில்லை? என்று நீங்களும் தெரிஞ்சுக்கணுமா?


பொதுவாக ராசிபலன் அல்லது ஜோதிட பலன்கள் பலிக்காமல் போவதற்கு நிறைய காரணங்கள் உண்டு. அதற்காக ஜோதிடமே தவறு என்று கூறி விட முடியாது. நம்முடைய வாழ்க்கையிலேயே எவ்வளவோ ஜோதிடர்கள் கணித்து கூறிய சில விஷயங்கள் நம் வாழ்க்கையில் நடந்திருப்பதை கண்டு நாம் வியந்து இருப்போம். எப்படி இவ்வளவு சரியாக சொல்கிறார்கள்? என்று நமக்கே தோன்றியிருக்கும். அது தான் ஜோதிடத்தின் பலம். நம்முடைய முக்காலத்தையும் நம் கண்முன்னே காட்டும் மாயக்கண்ணாடி தான் ஜோதிடம். அப்படி இருந்தும் ராசிபலன் சில சமயங்களில் பலிப்பதில்லையே ஏன்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.


முக்காலத்தையும் காட்டும் மாயக்கண்ணாடி ஜோதிடம் என்றாலும், அது நூற்றுக்கு 90 சதவீதம் தான் பலிக்கும். நமது பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சிறு மாறுதல் ஏற்பட்டாலும் ஜோதிட பலன்கள் பலிக்காது போய்விடும் என்பது தான் உண்மை. உதாரணத்திற்கு கைரேகை சாஸ்திரத்தை எடுத்துக் கொள்வோம். கைரேகை சாஸ்திரத்தை பொறுத்தவரை ஒருவரது கையில் ரேகை பார்க்கும் பொழுது, அவருடைய சந்திர மேட்டில் சூலம், வேல், சக்கரம் போன்ற அமைப்புகள் இருந்தால் அவர்களுக்கு கைரேகை ஜோதிடம் சொல்ல மாட்டார்கள். அதற்கு காரணம் அத்தகைய படைப்பை கடவுள் நேரடியாக கண்காணிப்பதாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இவர்களுக்கு சொன்னாலும் அது பலிக்காது.


சாதாரண மனிதர்களுக்கு பலிக்கும் ஜோதிடம் கூட இத்தகையவர்களுக்கு பலிப்பதில்லை, அதாவது ஒருவர் மனநிலை பாதித்து இருந்தால், சாலையோரத்தில் அழுக்கு படிந்த உடைகளுடன், உடலுடன் இருந்தால், பிச்சை எடுப்பவர்கள், நிராதரவாக நிற்பவர்கள், அகோரிகள், மனிதனைப் போல அல்லாத முகம், உடல் கொண்டவர்கள் இவர்களுக்கெல்லாம் ஜோதிடம் பலிப்பதில்லை. இவர்களுடைய படைப்பு அதற்காகவே அமைந்துள்ளது எனக் கூறலாம்.


ஒருவரது ஜாதகத்தில் 5 அல்லது 6 கிரகங்கள் உச்சம் பெற்று இருந்தால் அவர்களுக்கு கூறப்படும் ஜோதிடம் பலிக்காது என்பார்கள். கேதுவுடன் நான்கு கிரகங்களும், ராகுவுடன் மூன்று கிரகங்களும் ஒன்று சேர்ந்து இருந்தால் அந்த ஜாதகர் வாழ்க்கையில் ஏகப்பட்ட கஷ்டங்களை அனுபவிப்பார். அவர்களுக்கு ஜாதகம் பார்த்து ஜோதிடம் கூறினாலும் அது பலிக்காது... 


இது இறைவனின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் சில விஷயங்கள். இவற்றை ஜோதிடத்தால் கணித்துக் கூற முடியாத நிலையில் இருக்கும் என்பது தான் உண்மை. அன்றாடம் சொல்லும் ராசிபலன் பெரும்பான்மையினருக்கு பொருந்தினாலும் ஒருசிலருக்கு பொருந்துவதில்லை. அதற்கு காரணம் அவர்களின் ஜாதகத்தில் இருக்கும் பிரச்சினையாக இருக்கலாம் அல்லது கிரக அமைப்புகளின் மாற்றங்களால் உண்டாகும் விளைவாக இருக்கலாம்.


அதற்காகத்தான் நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் பலிக்கும் என்பார்கள். 10 சதவீதம் பேருக்கு அளிக்காமல் போவதற்கு பூமியின் சுழற்சி இது போல் காரணமாக அமைந்து விடுகிறது. இதனால் ஜோதிடத்தையே தவறு என்று முற்றிலுமாக கூறக்கூடாது. ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்பவர்கள் எல்லாம் நன்றாகத் தானே இருக்கிறார்கள் என்று நினைப்பதும் தவறு. எல்லோருக்கும் எல்லாமும் சரியாக நடந்து விடாது.


ஜோதிடம் என்பது மனிதனுக்கு கிடைத்த வரப்பிரசாதம். அதை முறையான ஜோதிடரிடத்தில் முறையாக காண்பித்து நம்முடைய எதிர்கால வாழ்க்கையை தெரிந்து கொள்ள வேண்டும். நல்ல ஜோதிடர்கள் அமையாமல் இருப்பதும் ஒரு விதி தான் என்று கூறலாம். நம்முடைய தலைவிதியை மாற்ற நம்மால் முடியுமா? கர்ம வினைப்பயன் நம்மை தொடர்ந்து தானே ஆகும்?🤔🤔

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Odi odi Utkalantha Jothi Full Song Tamil Lyrics for music | ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் - ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics)

 ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics) Odi odi Utkalantha Jothi l...