புதன், 7 அக்டோபர், 2020

பெண்களின் ஒழுக்கத்தையும், குணநலன்களையும் அறிவது எப்படி...?


ஜோதிடம் பார்க்க செல்பவர்கள் திருமண பொருத்தம் பார்த்துவிட்டு கேட்கும் கேள்வி, பொண்ணு ஒழுக்கம் எப்படி..? என்பது தான்.

சிலர் இந்த பதிவை படித்துவிட்டு, பெண் கற்பு பத்தி ஆராய்ச்சியா.. ஜோசியம் இதுல எங்க வருது? கற்புன்னு ஒண்ணு இருக்கான்னு, ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பு என்பது ஒழுக்கம்தான். கற்பில்லாத ஒழுக்கமில்லாத ஒருவரை எந்த ஆணும், எந்த பெண்ணும் விரும்புவதில்லை. அதனால் கற்பு என்னும் ஒழுக்கம் ஜோதிடத்தில் மிக முக்கிய இடம் பெற்று இருக்கிறது.

ஒருவனுக்கு ஒருத்தி என வாழும் தமிழ் கலாச்சாரத்தை மேலை நாடுகளும் இப்போது பின்பற்ற தொடங்கி உள்ளன. ஆனால் சிலர்  சுதந்திரம் என்ற பெயரில் இந்த கட்டுபாட்டை உடைக்கவே விரும்புகின்றனர். காரணம் தனித்து பணம் சம்பாதிப்பது. பகுத்தறிவு என்ற பெயரில் என் இஷ்டப்படி நடப்பேன். அதை கேட்க நீ யார்..?என்கிறார்கள். எல்லோருக்கும் கற்பு ,ஒழுக்கம் உள்ளது.

பெண்ணின் ஜாதகம் பார்த்ததும், அதன் ஒழுக்கம்,கற்பு எல்லாம் பட்டவர்த்தனமாய் தெரிந்துவிடும். அவள் ஆசை எப்படி?கணவனுக்கு சுகம் உண்டா? அல்லது கணவனை தொந்தரவு செய்து போதாமல் அடுத்த ஆண்களையும் கவர் செய்யக்கூடிய பெண்ணா என்பது சில கிரக அமைப்புகளை பார்த்ததும் தெரிந்து கொள்ளலாம். அப்படி உண்மைகளை தெரிய ஆரம்பித்தால் பெரும்பாலான கல்யாணம் நடக்காது.

அவரவர் விதிப்படிதான் மனைவி அமையும். ஒழுக்கமான மனைவி அமையும் யோகம் இருந்தால் அவனுக்கு சீதை போல மனைவி அமைவாள். அலட்சியமாக ஜாதக பொருத்தம் பார்க்காமல் வேலை, பணம், வசதி பார்த்து திருமணம் செய்தால், அந்த உணர்வு அதிகம் உள்ள பெண்ணை திருமணம் செய்தோ அல்லது குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை ஏற்படுத்தும் பெண்ணாகவோ, கணவ்னை எடுத்தெறிந்து பேசும் பெண்ணோ மனைவியாக அமைய வாய்ப்புண்டு.

செவ்வாய் நட்சத்திரத்தில் (சித்திரை, மிருகசிரீடம், அவிட்டம்) பிறந்த பெண்கள் மிக கோபம் நிறைந்தவர்களாக இருப்பர். 


ராகு நட்சத்திரம், கேது நட்சத்திர பெண்கள் பிடிவாதம் நிறைந்தவர்கள். (அஸ்வினி, மகம், திருவாதிரை, சுவாதி,சதயம்,மூலம்)


சனி நட்சத்திரத்தில்(பூசம், அனுஷம், உத்திரட்டாதி) பிறந்த பெண்கள் உற்சாகம் இன்றி குடும்பத்தாரோடு சந்தோசம் இல்லாமல் கூட்டு குடும்பத்தில் ஒன்றி வாழாமல் , சோகமாக இருப்பர். 


சுக்கிர நட்சத்திரங்களில் (பூராடம், பரணி, பூரம்) பிறந்த பெண்கள் நெருங்கி பழகி கெட்ட பெயர் வாங்கக்கூடிய, சாதர்ணமாக மனதில் எந்த கெட்ட எண்ணமும் இல்லாமல் பழகினாலும் கெட்ட பெயர் வருகிறது. 


மேற்கண்ட நட்சத்திர பெண்களுக்கு திருமணத்திற்கு முன்னர் ஆண்களால் பல சோதனைகள் வரும். அதை தெய்வ துணையால் சமாளித்து வந்தால் நல்ல குடும்ப வாழ்வு அமையும்.


பெண்ணின் குண அமைப்பு

இப்படி நற்குணங்கள் யாருக்கு அமையும் என பார்க்கும்போது ஜென்ம லக்னத்தில் சுபக்கிரகங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன் போன்ற கிரகங்கள் அமையப் பெற்றாலும், சுபக்கிரகங்கள் ஜென்ம லக்னத்தை பார்வை செய்தாலும் நல்ல அறிவாற்றல், அழகான உடலமைப்பு, சிறந்த குண நலன்கள் போன்ற யாவும் சிறப்பாக அமையும்.

அதுவே பாவக்கிரகங்கள் லக்னாதிபதியாக இருக்கும் பட்சத்தில் பலம் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் கோபக்காரியாக இருந்தாலும் நல்ல குணவதியாக இருப்பாள். சனி, ராகு போன்ற பாவக் கிரகங்கள் லக்னத்தில் பகை பெற்று அமையப் பெற்றாலும் ஜென்ம லக்னத்தை பார்வை செய்தாலும் மிகுந்த கோபக்காரியாகவும், மற்றவர்களை அனுசரிக்கத் தெரியாதவளாகவும், அழகில் குறைந்தவளாகவும் இருப்பாள்.


பெண்ணின் ஒழுக்கம்

பெண்களின் ஜனன ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் 4ம் பாவமும், சந்திரனுக்கு 4ம் பாவமும் சாதகமாக அமையப் பெற்றால், அப்பெண் நல்ல குண நலன்களும், ஒழுக்கமும் அனைவரையும் அனுசரித்துச் செல்லும் பண்பும் கொண்டவளாக திகழ்வாள்.

குறிப்பாக சுபகிரகமான குருபகவான் ஜென்ம லக்னத்திற்கு 4ம் பாவத்தையும், சந்திரனுக்கு 4ம் பாவத்தையும் பார்வை செய்து, 4 ம் அதிபதியையும் பார்வை செய்வது மிகவும் சிறப்பாகும். இப்படிப்பட்ட அமைப்பு ஏற்பட்டால் பண்புள்ள பெண்ணாகவும் மற்றவர்களுக்கு முன் உதாரணமானவளாகவும் விளங்குவாள்.


ஜென்ம லக்னத்திற்கு 4 ம் வீட்டிலும், சந்திரனுக்கு 4ம் வீட்டிலும் சுபகிரகங்கள் அமைவது மிகச்சிறப்பு.


நவகிரகங்களில் சுபகிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன் ஆகிய கிரகங்களும் மற்றும் சுபர் சேர்க்கை, சுபர் பார்வை பெற்ற புதனும் அமையப் பெற்றால், பண்புள்ள பெண்ணாகவும் நல்ல குணவதியாகவும் இருப்பாள்.


4ம் வீட்டில் 

  • குரு பகவான் அமையப் பெற்றால் தெய்வீக எண்ணம், மற்றவர்களை வழி நடத்தும் வல்லமை இருக்கும்.
  • சுக்கிரன் அமையப் பெற்றால் அழகான உடலமைப்பு, மற்றவர்களை வசீகரிக்கும் அழகு அமையும். இல்லற சுகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும்.
  • புதன் அமையப் பெற்றால் நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், நல்ல பண்பு, அழகான உடலமைப்பு, குடும்பத்தை பாங்காக நடத்திச் செல்லும் நற்குணம் போன்ற யாவும் உண்டாகும்.
  • வளர்பிறை சந்திரன் அமையப் பெற்றால் பிறரை வசீகரிக்கும் அழகான உடலமைப்பு, கவர்ச்சி சிறந் நற்குணங்களை உடைய பெண்ணாக விளங்குவாள்.

4ம் இடம் கற்பு ஸ்தானம் என்பதால், பாவக்கிரகங்கள் அமையாமல் இருப்பது நல்லது. 4ம் இடமே பாவக் கிரகத்தின் வீடாக இருந்தால் அக்கிரகம் சொந்த வீட்டில் ஆட்சி பெற்று அமைவதால் கெடுதிகள் ஏற்படாது.

நவகிரகங்களில் சூரியன், தேய்பிறை சந்திரன், செவ்வாய், பாவிகள் சேர்க்கை பெற்ற புதன், ராகு, கேது, சனி போன்ற பாவக்கிரகங்கள் 4ல் அமைவதோ, 4ம் வீட்டைப் பார்வை செய்வதோ, 4ம் அதிபதி மேற்கூறிய கிரகங்களின் சேர்க்கை பெற்று அமைவதோ அவ்வளவு சிறப்பில்லை.

ஒன்றுக்கும் மேற்பட்ட பாவகிரகங்கள் அதாவது 2, 3 பாவ கிரகங்கள் கற்பு ஸ்தானமான 4ல் அமைவது, அவ்வளவு சிறப்பல்ல. இதனால் ஜாதகிக்கு தேவையற்ற நட்புகள் சேரும் அமைப்பும், அவப்பெயர், மற்றவர்கள் பழி சொல் கூறும் சூழ்நிலையும் உண்டாகும்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் நான்காம் வீட்டில் ஒன்றிற்கு மேற்பட்ட தீய கிரகங்கள் இருந்து, நான்காம் அதிபதியும் பகை வீட்டில் இருந்தால் ஜாதகி ஒழுக்கம் தவறி பல ஆடவர்களைக் கூடி மகிழ்பவளாக இருப்பாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Odi odi Utkalantha Jothi Full Song Tamil Lyrics for music | ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் - ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics)

 ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics) Odi odi Utkalantha Jothi l...