இன்று (08-10-2020) சார்வரி வருஷம் புரட்டாசி மாதம் 22-ந்தேதி வியாழக்கிழமை பகல் 01-00மணி வரையில் தேய்பிறை சஷ்டி விரதம். பிறகு ஸப்தமி திதி. இரவு 08-06மணி வரை மிருகசீரிஷ நட்சத்திரம். பின் திருவாதிரை நட்சத்திரம். மரணயோகமுள்ள சமநோக்குநாள். இன்றைய இராசி பலன்கள். (பொதுவானது.)
*🐏மேஷ இராசி அன்பர்களே
*இன்று உங்களுக்கு அலைச்சல்களின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். வாரிசுகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். சொத்து பிரிவினையின்போது பங்காளிகளிடம் அமைதியை கடைபிடிக்கவும். பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையாக நடந்து கொள்ளவும்.
*அதிர்ஷ்ட திசை : கிழக்கு*
*அதிர்ஷ்ட எண் : 1*
*அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்*
*அஸ்வினி : சேமிப்புகள் அதிகரிக்கும்.*
*பரணி : அமைதியை கடைபிடிக்கவும்.*
*கிருத்திகை : பொறுமை வேண்டும்.*
---------------------------------------
*🐂ரிஷப இராசி அன்பர்களே*
*இன்று உங்களுக்கு உங்களுடைய நண்பர்களின் ஆதரவுகள் மூலம் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழல் ஏற்படும். புதிய நபர்களின் ஆதரவால் தனவரவுகள் உண்டாகும். கால்நடைகளால் எண்ணிய இலாபம் கிடைக்கும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும்.*
*அதிர்ஷ்ட திசை : மேற்கு*
*அதிர்ஷ்ட எண் : 4*
*அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்*
*கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.*
*ரோகிணி : முன்னேற்றமான நாள்.*
*மிருகசீரிஷம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.*
---------------------------------------
*👥மிதுன இராசி அன்பர்களே*
*இன்று நீங்கள் உங்களுடைய இளைய உடன்பிறப்புகளிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். சபைகளில் ஆதரவு கிடைக்கும். மனதில் இருந்துவந்த துன்பங்கள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். வெளிநாட்டு பயணங்களின் மூலம் மேன்மையான சூழல் உண்டாகும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள்.*
*அதிர்ஷ்ட திசை : தெற்கு*
*அதிர்ஷ்ட எண் : 5*
*அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்*
*மிருகசீரிஷம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.*
*திருவாதிரை : புத்துணர்ச்சி அடைவீர்கள்.*
*புனர்பூசம் : மேன்மையான நாள்.*
---------------------------------------
*🦀கடக இராசி அன்பர்களே*
*இன்று நீங்கள் புண்ணிய காரியங்களில் கலந்து கொள்வதன் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். பூஜை புனஸ்காரங்களில் மனம் ஈடுபடும். தொழிலில் உள்ள நுணுக்கத்தை கற்று கொள்வீர்கள். பணியில் செல்வாக்கு உயரும். கலைத்தொழிலில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும்.*
*அதிர்ஷ்ட திசை : வடக்கு*
*அதிர்ஷ்ட எண் : 5*
*அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்*
*புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.*
*பூசம் : செல்வாக்கு உயரும்.*
*ஆயில்யம் : சாதகமான நாள்.*
---------------------------------------
*🦁சிம்ம இராசி அன்பர்களே*
*இன்று உங்களுடைய மூத்த உடன்பிறப்புகளால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஆலய பயணங்களை மேற்கொள்வீர்கள். வாடிக்கையாளர்களின் வரவால் இலாபம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளை முடிக்க முயல்வீர்கள். சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும்.*
*அதிர்ஷ்ட திசை : கிழக்கு*
*அதிர்ஷ்ட எண் : 1*
*அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை*
*மகம் : அனுகூலமான நாள்.*
*பூரம் : இலாபம் உண்டாகும்.*
*உத்திரம் : அனுசரித்து செல்லவும்.*
---------------------------------------
*🧜♀️கன்னி இராசி அன்பர்களே*
*இன்று நீங்கள் உங்களுடைய நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபடுவீர்கள். போக்குவரத்து தொடர்பான தொழிலில் உள்ளவர்களுக்கு பொருளாதாரத்தில் மேன்மை உண்டாகும். தாய்வழி உறவுகளுடன் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்க்கவும். எண்ணிய செயல்களில் காலதாமதம் உண்டாகும்.*
*அதிர்ஷ்ட திசை : தெற்கு*
*அதிர்ஷ்ட எண் : 7*
*அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்*
*உத்திரம் : கேளிக்கையில் ஈடுபடுவீர்கள்.*
*அஸ்தம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.*
*சித்திரை : காலதாமதம் உண்டாகும்.*
---------------------------------------
*⚖️துலா இராசி அன்பர்களே*
*இன்று உங்களுடைய வேலை சம்பந்தமான விஷயங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் மேன்மையான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.*
*அதிர்ஷ்ட திசை : மேற்கு*
*அதிர்ஷ்ட எண் : 8*
*அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்*
*சித்திரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.*
*சுவாதி : ஆதரவு கிடைக்கும்.*
*விசாகம் : நம்பிக்கை அதிகரிக்கும்.*
---------------------------------------
*🦂விருச்சிக இராசி அன்பர்களே*
*இன்று உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். நண்பர்களின் மூலம் சுபவிரயங்கள் ஏற்படும். அறிமுகமில்லாத புதிய நபர்களிடம் கவனத்துடன் பேசவும். முடிவுகளில் நிதானம் வேண்டும்.*
*அதிர்ஷ்ட திசை : வடக்கு*
*அதிர்ஷ்ட எண் : 2*
*அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்*
*விசாகம் : இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் அதனால் பயணங்களிலும் பணம் கொடுக்கல் வாங்கல்களிலும் பேசும் பேச்சு வார்த்தைகளிலும் கவனம் வேண்டும்.*
*அனுஷம் : சுபவிரயங்கள் ஏற்படும். இருந்தாலும் இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் எனவே பயணங்களிலும் பணம் கொடுக்கல் வாங்கல்களிலும் பேசும் பேச்சு வார்த்தைகளிலும் கவனமாக இருங்கள்.*
*கேட்டை : இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் ஆகவே பயணங்களிலும் பணம் கொடுக்கல் வாங்கல்களிலும் பேசும் பேச்சு வார்த்தைகளிலும் அதிக நிதானம் வேண்டும்.*
---------------------------------------
*🏹தனுசு இராசி அன்பர்களே*
*இன்று நீங்கள் வீடு கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த பிரச்சனைகளை முடிக்க முயல்வீர்கள். தொழில் தொடர்பான முக்கிய பிரதிநிதிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத தனலாபம் ஏற்பட்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.*
*அதிர்ஷ்ட திசை : கிழக்கு*
*அதிர்ஷ்ட எண் : 9*
*அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு*
*மூலம் : முயற்சிகள் கைகூடும்.*
*பூராடம் : பிரச்சனைகள் நீங்கும்.*
*உத்திராடம் : மகிழ்ச்சி உண்டாகும்.*
---------------------------------------
*🦌மகர இராசி அன்பர்களே*
*இன்று உங்களுடைய புதிய முயற்சிகளின் மூலம் உங்களுக்கு நற்பெயர்கள் கிடைக்கும். ஆன்மிக வழிபாட்டில் மனம் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் அலைச்சல்கள் உண்டாகும். புத்திரர்களால் இலாபகரமான செய்திகள் கிடைக்கும்.*
*அதிர்ஷ்ட திசை : தெற்கு*
*அதிர்ஷ்ட எண் : 3*
*அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்*
*உத்திராடம் : நற்பெயர்கள் கிடைக்கும்.*
*திருவோணம் : அலைச்சல்கள் உண்டாகும்.*
*அவிட்டம் : இலாபகரமான நாள்.*
---------------------------------------
*🧉கும்ப இராசி அன்பர்களே*
*இன்று உங்களுடைய தொழிலில் நீங்கள் மேற்கொண்ட புதிய முயற்சிகளால் எண்ணிய வெற்றி உண்டாகும். வாரிசுகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் எடுத்த பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பெரியோர்களிடம் கனிவாக நடந்து கொள்ளவும்.*
*அதிர்ஷ்ட திசை : மேற்கு*
*அதிர்ஷ்ட எண் : 6*
*அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்*
*அவிட்டம் : வெற்றி உண்டாகும்.*
*சதயம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.*
*பூரட்டாதி : கனிவு வேண்டும்.*
---------------------------------------
*🐬மீன இராசி அன்பர்களே*
*இன்று உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் அங்கீகாரம் கிடைக்கும். வாகனம் தொடர்பான பயணங்கள் ஈடேறும். செயல்கள் ஈடேறுவதில் இருந்துவந்த காலதாமதம் நீங்கி சுபிட்சம் ஏற்படும். தந்தையின் உறவுகளிடம் அனுசரணையாக பழக வேண்டும்.*
*அதிர்ஷ்ட திசை : வடமேற்கு*
*அதிர்ஷ்ட எண் : 4*
*அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்*
*பூரட்டாதி : அங்கீகாரம் கிடைக்கும்.
*உத்திரட்டாதி : பயணங்கள் ஈடேறும்.
*ரேவதி : சுபிட்சம் உண்டாகும்.
---------------------------------------
நாளைய விசேஷங்கள்:- நாளை (09-10-2020) சார்வரி வருஷம் புரட்டாசி மாதம் 23-ந்தேதி வெள்ளிக்கிழமை பகல் 01-27மணி வரையில் ஸப்தமி திதி. அதன்பின் தேய்பிறை அஷ்டமி திதி. இரவு 09-01மணி வரைக்கும் திருவாதிரை நட்சத்திரம். பின்னர் புனர்பூச நட்சத்திரம். சித்தயோகமுள்ள மேல்நோக்குநாள். இன்று மாலையில் பைரவர் வழிபாடு செய்வது மிகவும் நன்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக