சனி, 24 அக்டோபர், 2020

இன்றைய (24-10-2020) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்

 மேஷம்

அக்டோபர் 24, 2020


ஐப்பசி 08 - சனி

 குடும்பத்தில் உங்களது ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் இலாபம் உண்டாகும். தாயாரின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். மனை தொடர்பான பணிகளில் ஆதாயம் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்



அஸ்வினி : முக்கியத்துவம் கிடைக்கும்.


பரணி : இலாபம் உண்டாகும்.


கிருத்திகை : ஆதாயம் ஏற்படும்.

---------------------------------------





ரிஷபம்

அக்டோபர் 24, 2020


ஐப்பசி 08 - சனி

 மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். இளைய சகோதரர்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும். எண்ணிய காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடித்து வெற்றி அடைவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



கிருத்திகை : தைரியம் அதிகரிக்கும்.


ரோகிணி : அனுகூலம் உண்டாகும்.


மிருகசீரிஷம் : வெற்றிகரமான நாள்.

---------------------------------------





மிதுனம்

அக்டோபர் 24, 2020


ஐப்பசி 08 - சனி

 மனதில் தோன்றும் தேவையற்ற சிந்தனைகளின் மூலம் அவ்வப்போது குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் சற்று காலதாமதமாக கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் தொடர்பான விஷயங்களில் மற்றவர்கள் தலையிடுவதை தவிர்க்கவும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



மிருகசீரிஷம் : குழப்பங்கள் நீங்கும்.


திருவாதிரை : காலதாமதம் உண்டாகும்.


புனர்பூசம் : தலையிடுவதை தவிர்க்கவும்.

---------------------------------------





கடகம்

அக்டோபர் 24, 2020


ஐப்பசி 08 - சனி

 நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த வியாபாரம் நடைபெறும். வாழ்க்கை துணை வழி உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு மறையும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.


பூசம் : ஆதாயம் உண்டாகும்.


ஆயில்யம் : குழப்பங்கள் மறையும்.

---------------------------------------





சிம்மம்

அக்டோபர் 24, 2020


ஐப்பசி 08 - சனி

 தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். அவ்வப்போது சோர்வுகள் ஏற்பட்டு நீங்கும். பணிபுரியும் இடத்தில் அனுசரணையாக நடந்து கொள்ளவும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



மகம் : ஆதரவான நாள்.


பூரம் : உதவிகள் கிடைக்கும்.


உத்திரம் : சோர்வுகள் நீங்கும்.

---------------------------------------





கன்னி

அக்டோபர் 24, 2020


ஐப்பசி 08 - சனி

 மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வாழ்க்கை துணைவருடன் இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கி ஒற்றுமை மேம்படும். எதிர்பாராத வரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். சகோதரர் வழியில் மனமகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



உத்திரம் : புத்துணர்ச்சியான நாள்.


அஸ்தம் : ஒற்றுமை மேம்படும்.


சித்திரை : சேமிப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------





துலாம்

அக்டோபர் 24, 2020


ஐப்பசி 08 - சனி

 அரசாங்க வழியில் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும். மனதில் இருந்துவந்த இறுக்கம் நீங்கி மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். உறவினர்களுடன் சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமையும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



சித்திரை : எண்ணங்கள் நிறைவேறும்.


சுவாதி : மகிழ்ச்சி உண்டாகும்.


விசாகம் : சாதகமான நாள்.

---------------------------------------





விருச்சகம்

அக்டோபர் 24, 2020


ஐப்பசி 08 - சனி

 கூட்டுத்தொழில் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். தந்தையின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். நினைத்ததை நினைத்த விதத்தில் செய்து முடிப்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



விசாகம் : முன்னேற்றமான நாள்.


அனுஷம் : உதவிகள் கிடைக்கும்.


கேட்டை : எண்ணங்கள் ஈடேறும்.

---------------------------------------





தனுசு

அக்டோபர் 24, 2020


ஐப்பசி 08 - சனி

 வியாபாரத்தில் பணியாட்களிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். மற்றவர்களை பற்றி கருத்துக்களை கூறுவதை தவிர்ப்பது நன்மையளிக்கும். எதிர்பாராத பொருள் வரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த காரியங்களை செய்து முடிப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



மூலம் : நிதானம் வேண்டும்.


பூராடம் : கருத்துக்களை தவிர்க்கவும்.


உத்திராடம் : இழுபறிகள் அகலும்.

---------------------------------------





மகரம்

அக்டோபர் 24, 2020


ஐப்பசி 08 - சனி

 வாழ்க்கை துணைவரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் அகலும். அரசு தொடர்பான காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கேளிக்கை தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். அவசரமான முடிவுகளை தவிர்க்கவும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் அகலும்.


திருவோணம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


அவிட்டம் : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------





கும்பம்

அக்டோபர் 24, 2020


ஐப்பசி 08 - சனி

 செய்யும் காரியங்களில் பொறுமையுடன் செயல்பட்டால் தேவையற்ற செலவுகளை தவிர்க்க இயலும். எதிர்பாராத பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். பங்காளி வகை உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். இரவு நேரத்தில் அதிக நேரம் கண் விழிப்பதை  தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்



அவிட்டம் : பொறுமை வேண்டும்.


சதயம் : அனுபவம் கிடைக்கும்.


பூரட்டாதி : ஆதாயமான நாள்.

---------------------------------------





மீனம்

அக்டோபர் 24, 2020


ஐப்பசி 08 - சனி

 வாரிசுகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் இலாபம் அதிகரிக்கும். நுட்பமான சிந்தனைகள் மனதில் தோன்றும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் மூலம் காரியசித்தி உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்களை சந்திப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.


உத்திரட்டாதி : இலாபம் அதிகரிக்கும்.


ரேவதி : காரியசித்தி உண்டாகும்.

---------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Odi odi Utkalantha Jothi Full Song Tamil Lyrics for music | ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் - ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics)

 ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics) Odi odi Utkalantha Jothi l...