ஞாயிறு, 25 அக்டோபர், 2020

இன்றைய (25-10-2020) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்

 மேஷம்

அக்டோபர் 25, 2020


ஐப்பசி 09 - ஞாயிறு

 புதிய இலட்சியத்தை  அடைவதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். இஷ்ட தெய்வத்தை வணங்குவீர்கள். பிறருக்கு உதவும்போது கவனமாக இருக்க வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



அஸ்வினி : பொருட்சேர்க்கை உண்டாகும்.


பரணி : உதவிகள் கிடைக்கும்.


கிருத்திகை : இழுபறிகள் நீங்கும்.

---------------------------------------





ரிஷபம்

அக்டோபர் 25, 2020


ஐப்பசி 09 - ஞாயிறு

 புதிய நபர்களின் அறிமுகத்தால் தொழிலில் இலாபம் அதிகரிக்கும். இணையம் தொடர்பான பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்களுக்கிடையே உறவுநிலை மேம்படும். ஆபரணச்சேர்க்கை உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் உங்களை பற்றிய நம்பிக்கை மேலோங்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



கிருத்திகை : இலாபம் அதிகரிக்கும்.


ரோகிணி : வாய்ப்புகள் உண்டாகும்.


மிருகசீரிஷம் : நம்பிக்கை மேலோங்கும்.

---------------------------------------





மிதுனம்

அக்டோபர் 25, 2020


ஐப்பசி 09 - ஞாயிறு

 உத்தியோகஸ்தர்கள் பணியில் மேன்மையான செயல்களை செய்து முடிப்பீர்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பொதுக்கூட்டப் பேச்சுக்களில் ஈடுபடுபவர்கள் கவனமாக பேசவும். தொழில் தொடர்பான கடன் உதவிகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மிருகசீரிஷம் : மேன்மையான நாள்.


திருவாதிரை : கவனம் வேண்டும்.


புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------





கடகம்

அக்டோபர் 25, 2020


ஐப்பசி 09 - ஞாயிறு

 செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். தாய் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். வேளாண்மை சம்பந்தமான பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். தொழில் தொடர்பான புதிய முடிவுகள் எடுப்பதில் கவனத்துடன் இருக்கவும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



புனர்பூசம் : நிதானம் வேண்டும்.


பூசம் : அனுசரித்து செல்லவும்.


ஆயில்யம் : அலைச்சல்கள் உண்டாகும்.

---------------------------------------





சிம்மம்

அக்டோபர் 25, 2020


ஐப்பசி 09 - ஞாயிறு

 உறவினர்களால் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். பணி தொடர்பான வெளியூர் பயணங்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். ஆன்மிக எண்ணங்களில் மனம் ஈடுபடும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் இலாபம் அதிகரிக்கும். மனை தொடர்பான விஷயங்களில் சாதகமான சூழல் அமையும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



மகம் : ஆதரவு கிடைக்கும்.


பூரம் : எண்ணங்கள் ஈடேறும்.


உத்திரம் : சாதகமான நாள்.

---------------------------------------





கன்னி

அக்டோபர் 25, 2020


ஐப்பசி 09 - ஞாயிறு

 இளைய சகோதரர்களின் மூலம் சுபவிரயங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். விளையாட்டு வீரர்கள் பயிற்சியின்போது கவனத்துடன் ஈடுபடவும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திரம் : சுபவிரயங்கள் உண்டாகும்.


அஸ்தம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


சித்திரை : கவனம் வேண்டும்.

---------------------------------------





துலாம்

அக்டோபர் 25, 2020


ஐப்பசி 09 - ஞாயிறு

 பூர்வீக சொத்துக்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். செய்தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்துவதால் தனித்திறமைகள் புலப்படும். நீண்ட நாட்களாக மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். புதிய நண்பர்களின் ஆதரவின் மூலம் தொழில் வாய்ப்புகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : மெரூன் நிறம்



சித்திரை : மகிழ்ச்சியான நாள்.


சுவாதி : திறமைகள் வெளிப்படும்.


விசாகம் : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------





விருச்சகம்

அக்டோபர் 25, 2020


ஐப்பசி 09 - ஞாயிறு

 உயர் அதிகாரிகளிடம் மதிப்புகள் உயரும். பெரியோர்களின் உபதேசங்களால் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுக்கு இடையேயான மனக்கசப்புகள் குறையும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். எதிர்பாராத சுபச்செய்திகளால் மனமகிழ்ச்சி அடைவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்



விசாகம் : மதிப்புகள் உயரும்.


அனுஷம் : தெளிவு கிடைக்கும்.


கேட்டை : மனக்கசப்புகள் குறையும்.

---------------------------------------





தனுசு

அக்டோபர் 25, 2020


ஐப்பசி 09 - ஞாயிறு

 மனதில் எண்ணிய செயல்திட்டங்களை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். பூமியை விருத்தி செய்வதற்கான சாதகமான சூழல் அமையும். கால்நடைகளின் மூலம் இலாபம் மேம்படும். குறுகிய தூர பயணங்களால் மாற்றங்கள் உண்டாகும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



மூலம் : முயற்சிகள் மேம்படும்.


பூராடம் : சாதகமான நாள்.


உத்திராடம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

---------------------------------------





மகரம்

அக்டோபர் 25, 2020


ஐப்பசி 09 - ஞாயிறு

 கால்நடைகளின் மூலம் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். எதிர்காலம் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். புண்ணிய தலங்களுக்கான யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். கற்ற கலைகளால் எதிர்பாராத இலாபம் உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்



உத்திராடம் : இலாபம் உண்டாகும்.


திருவோணம் : எண்ணங்கள் மேலோங்கும்.


அவிட்டம் : ஆசிகள் கிடைக்கும்.

---------------------------------------





கும்பம்

அக்டோபர் 25, 2020


ஐப்பசி 09 - ஞாயிறு

 தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான எண்ணங்கள் மேலோங்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் உண்டாகும். அரசாங்க பணியில் இருந்துவந்த இடர்பாடுகள் நீங்கும். சபை தலைவராக இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கிளி பச்சை



அவிட்டம் : சாதகமான நாள்.


சதயம் : இடர்பாடுகள் நீங்கும்.


பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------





மீனம்

அக்டோபர் 25, 2020


ஐப்பசி 09 - ஞாயிறு

 கெளரவ பதவிகளால் செல்வாக்கு அதிகரிக்கும். கல்லூரி படிப்பிற்கான சுபவிரயங்கள் உண்டாகும். புதுவிதமான ஆராய்ச்சி சம்பந்தமான எண்ணங்கள் தோன்றும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



பூரட்டாதி : செல்வாக்கு அதிகரிக்கும்.


உத்திரட்டாதி : சுபவிரயங்கள் உண்டாகும்.


ரேவதி : உறவு மேம்படும்.

---------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Odi odi Utkalantha Jothi Full Song Tamil Lyrics for music | ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் - ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics)

 ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics) Odi odi Utkalantha Jothi l...