புதன், 16 செப்டம்பர், 2020

உங்களின் நோயை குறி காட்டும் வைனாசிக நட்சத்திரம்

முதலில் உங்கள் ஜென்ம நட்சத்திரம் எது என்பதை குறித்து கொள்ளுங்கள்.


அந்த  ஜென்ம நட்சத்திரம் முதல் எண்ணி வரும் 22 வது நட்சத்திரம் வைனாசிகம் நட்சத்திரம் என்பதை அறிக...


இன்னும் தெளிவாக ஒருவருக்கு நோய் வருவது 22 வது நட்சத்திரத்தின் மூலமாகத்தான் என்பதனை மனதில் வைக்க.


வைநாசிகம் என்பது பிறந்த நட்சத்திரத்திலிருந்து 22 வது நட்சத்திரம் மேலும் 88 வது பாதம் . சிலருக்கு இது 23 நட்சத்திரத்திலும் வரும், [ விளக்கம் கீழே உள்ளது ] 


வைனாசிகம் என்பது நமது உடலை வதைப்பது என்று பொருள் ஆகும்.


நமக்கு நோய் ஏற்படுத்துவது என்றும் பொருள் கொள்க.


வைனாசிக நட்சத்திரத்தில் எந்த கிரகம் இருக்கிறதோ அந்த கிரக தசா புத்திகளில் நமது உடல் நலம் பாதிப்பு அடையும்.


வைனாசிக நட்சத்திர அதிபதியின் தசா புத்தி காலமும் உடல் நல கோளாறுகளை கொண்டு வந்து சேர்க்கும்.


இதை கோச்சார கிரக இணைவுகளோடு பொருத்தி பார்த்தால் என்ன மாதிரியான உடல் நல கோளாறு வரும் என்பதை சரியாக கண்டறிய முடியும்.


மாதம் தோறும் வரும் வைனாசிக நட்சத்திரம் அன்று மருத்துவம் சம்பந்தப்பட்ட எந்த விஷயம் செய்தாலும் அது நல்ல பலனை தருவது இல்லை.


அதன் அனு ஜென்ம, திரிஜென்ம நட்சத்திரத்தையும் மருத்துவ விஷயங்களுக்கு தவிர்த்தல் நல்லது.


பண்டைய  நூல்களில் 22 ஆவது நட்சத்திரத்தின்  4-ம் பாதம் மட்டுமே வைநாசிக தோஷத்தை செய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


அதாவது 88-ம் பாதம்(22-ம் நட்சத்திரத்தின் நான்காம் பாதம் மட்டுமே).


 எந்த நட்சத்திரமாக இருந்தாலும் 1-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கே வைநாசிக தோஷம் வரும் என்றும் சொல்ல கேட்டதுண்டு.


 ஏன் எனில் 2,3,4 பாதங்களில் பிறந்தால் 88 ஆவது பாதம் 23 ஆவது நட்சத்திரத்தில் விழுந்து விடும்.


எனவே உங்கள் ஜனன நட்சத்திரம்  1-ம் பாதத்தில் இருந்தால்  மட்டுமே வைநாசிக தோஷம் எனவும் 


2,3,4 ம் பாதத்தில் பிறந்தவர்கள் வைநாசிக தோஷத்தை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்ற கூற்றும் உண்டு.


ஓர் ஆண் நட்சத்திரத்திற்கு 22வது நட்சத்திரம் வைநாசிக நட்சத்திரம் பெண்ணை இணைக்க கூடாது என்பதும் ஒரு ஜோதிட விதி.  


பெரும்பாலும் இந்த 22 வது நட்சத்திர நபருடன் நமது மணவாழ்க்கை/காதல்/ நட்பு/ உறவு பாதிவழியில் முடிந்துவிடுகிறது.


ஒருவருடைய ஜன்ம நட்சத்திரத்திற்கு 22 வது நட்த்திரமாக அவருடைய வாழ்க்கைத் துணையின் நட்சத்திரங்களாக இருந்தால்  குடும்ப வாழ்க்கை நோய் நொடி என பல போராட்டங்கள் நிறைந்தாக இருக்கும்!!!


பெண்ணின் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து 4-வது நட்சத்திரம் ஷேம நட்சத்திரமாக வருவதால்  அது ஆணின் ஜென்ம நட்சத்திரமாக இருக்க பொருத்தம் உண்டு. 


ஆனால் அந்த ஷேம நட்சத்திரத்தின் திரிஜென்மமாக வரும் 22-வது நட்சத்திரம் வைநாசிகம் என்பதால் பொருந்தாது என்பது மற்றொரு விதி.


இதில் அந்த 22-வது நட்சத்திரத்தில் (சில சமயங்களில் 23-வது நட்சத்திரத்தில்) அமையும் 88-வது பாதம் மரண பாதம் என்பதால் அது ஆணின் ஜென்ம நட்சத்திரமாக அமையக்கூடாது என்பது குறிப்பான விதி.


மொத்தத்தில்  திசை நடத்தும் கிரகம் தான் நின்ற நட்சத்திரத்திலிருந்து 7-வது நட்சத்திரமான வதை நட்சத்திரத்தில் ஒரு கிரகம் நின்று புத்தி நடத்தினால் அந்த புத்தி நல்ல  பலன்கள் தராது.


ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் அதன் 22வது நட்சத்திரம் வைநாசிக நட்சத்திரமாகும்!


அசுவினிக்கு- திருவோணமும்


பரணிக்கு- அவிட்டமும்


கார்த்திகைக்கு- சதயமும்


ரோகிணிக்கு - பூரட்டாதியும்


மிருகசிரீடத்திற்கு - உத்திரட்டாதியும்


திருவாதிரைக்கு - ரேவதியும்


புணர்பூசத்திற்கு - அசுவினியும்


பூசத்திற்கு - பரணியும்


ஆயில்யத்திற்கு - கார்த்திகையும்


மகத்திற்கு - ரோகிணியும்


பூரத்திற்கு- மிருகசீரீடமும்


உத்திரத்திற்கு - திருவாதிரையும்


அஸ்தத்திற்கு - புணர்பூசமும்


சித்திரைக்கு - பூசமும்


சுவாதிக்கு -ஆயில்யமும்


விசாகத்திற்கு- மகமும்


அனுசத்திற்கு - பூரமும்


கேட்டைக்கு - உத்திரமும்


மூலத்திற்கு - அஸ்தமும்


பூராடத்திற்கு - சித்திரையும்


உத்திராடத்திற்கு - சுவாதியும்


திருவோணத்திற்கு - விசாகமும்


அவிட்டத்திற்கு - அனுஷமும்


சதயத்திற்கு - கேட்டையும்


பூரட்டாதிக்கு - மூலமும்


உத்திரட்டாதிக்கு  - பூராடமும்


ரேவதிக்கு - உத்திராடமும்


வைநாசிக நட்சத்திரஙகளாகும்!


நிறைய போட்டு குழம்பி கொள்ளாமல் மேலே எளிய அட்டவணை தந்திருக்கிறேன்.


அதை பயன்படுத்துங்கள்.


அந்த குறிப்பிட்ட நட்சத்திரம் அன்றும், அதன் தசா புத்தி காலங்களிலும், உடல் நிலையில் மிகுந்த அக்கறை எடுத்து கொள்ளுங்கள்.


நோய் இல்லாமல் நலமோடு வாழுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Odi odi Utkalantha Jothi Full Song Tamil Lyrics for music | ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் - ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics)

 ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics) Odi odi Utkalantha Jothi l...