சனி, 19 டிசம்பர், 2020

இன்றைய (19-12-2020) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்

மேஷம்

டிசம்பர் 19, 2020


மார்கழி 04 - சனி

 பணி தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமாகும். செயல்பாடுகளில் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. முக்கியமான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். மனதில் சேமிப்புகள் தொடர்பான சிந்தனைகள் தோன்றும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



அஸ்வினி : பயணங்கள் சாதகமாகும்.


பரணி : சிந்தித்து செயல்படவும்.


கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------





ரிஷபம்

டிசம்பர் 19, 2020


மார்கழி 04 - சனி

பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். தூரத்து உறவினர்களின் வருகையால் கலகலப்பான சூழல் உண்டாகும். உத்தியோகம் சம்பந்தமான புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். செய்யும் பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். பணி சம்பந்தமான ஆலோசனைகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.


ரோகிணி : கலகலப்பான நாள்.


மிருகசீரிஷம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

---------------------------------------





மிதுனம்

டிசம்பர் 19, 2020


மார்கழி 04 - சனி

நீண்ட நாள் உறவினர்களை கண்டு மகிழ்வீர்கள். தொழிலில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் மரியாதைகள் அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் அகலும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



மிருகசீரிஷம் : அனுபவம் உண்டாகும்.


திருவாதிரை : கவனம் வேண்டும்.


புனர்பூசம் : இழுபறிகள் அகலும்.

---------------------------------------





கடகம்

டிசம்பர் 19, 2020


மார்கழி 04 - சனி

உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் அமைதி காக்கவும். மற்றவர்களின் செயல்பாடுகளை விமர்சிப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் சம்பந்தமான செயல்பாடுகளில் காலதாமதம் நேரிடும். இணையதளம் சம்பந்தமான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப பெரியோர்களிடம் விவாதங்களை தவிர்க்கவும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



புனர்பூசம் : அமைதி வேண்டும்.


பூசம் : காலதாமதம் நேரிடும்.


ஆயில்யம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------





சிம்மம்

டிசம்பர் 19, 2020


மார்கழி 04 - சனி

பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த தனவரவுகளால் பணப்புழக்கம் மேம்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் நண்பர்களால் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். சக ஊழியர்களிடம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



மகம் : அனுகூலம் உண்டாகும்.


பூரம் : மகிழ்ச்சியான நாள்.


உத்திரம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

---------------------------------------





கன்னி

டிசம்பர் 19, 2020


மார்கழி 04 - சனி

தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பங்குதாரர்களிடம் அனுகூலமான சூழல் உண்டாகும். நண்பர்களுக்கிடையே அனுசரித்து செல்லவும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். எதிர்காலம் தொடர்பான முயற்சிகளில் பொறுமை வேண்டும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் திருப்பமான சூழல் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



உத்திரம் : நுணுக்கங்களை கற்பீர்கள்.


அஸ்தம் : அனுசரித்து செல்லவும்.


சித்திரை : திருப்பமான நாள்.

---------------------------------------





துலாம்

டிசம்பர் 19, 2020


மார்கழி 04 - சனி

சாதுர்யமான பேச்சுக்களால் சில பணிகளை செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் ஆதரவாக செயல்படுவார்கள். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை செயல்படுத்துவதால் இலாபம் அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



சித்திரை : ஆதரவு கிடைக்கும்.


சுவாதி : இலாபம் அதிகரிக்கும்.


விசாகம் : மேன்மை உண்டாகும்.

---------------------------------------





விருச்சகம்

டிசம்பர் 19, 2020


மார்கழி 04 - சனி

மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அலங்கார பொருட்களின் மீது ஈடுபாடு அதிகரிக்கும். சகோதரர்களுக்கிடையே ஒற்றுமை மேம்படும். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



விசாகம் : தெளிவு உண்டாகும்.


அனுஷம் : ஈடுபாடு அதிகரிக்கும்.


கேட்டை : பொருட்சேர்க்கை உண்டாகும்.

---------------------------------------





தனுசு

டிசம்பர் 19, 2020


மார்கழி 04 - சனி

குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத உதவிகளால் மேன்மை உண்டாகும். பணி தொடர்பான முடிவுகளால் சாதகமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். எடுத்த செயல்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். பத்திரம் தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மூலம் : ஒற்றுமை அதிகரிக்கும்.


பூராடம் : சாதகமான நாள்.


உத்திராடம் : எண்ணங்கள் ஈடேறும்.

---------------------------------------





மகரம்

டிசம்பர் 19, 2020


மார்கழி 04 - சனி

எண்ணிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். வேலையில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். அரசு அதிகாரிகளின் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் மேம்படும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



உத்திராடம் : வெற்றிகரமான  நாள்.


திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.


அவிட்டம் : இன்னல்கள் குறையும்.

---------------------------------------





கும்பம்

டிசம்பர் 19, 2020


மார்கழி 04 - சனி

செய்தொழிலில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறைந்து சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். வேலையாட்களின் மூலம் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணியில் முயற்சிக்கேற்ற அங்கீகாரமும், பாராட்டுகளும் கிடைக்கும். தனவரவுகளின் மூலம் திருப்தியான சூழல் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



அவிட்டம் : வாய்ப்புகள் உண்டாகும்.


சதயம் : புத்துணர்ச்சியான நாள்.


பூரட்டாதி : அங்கீகாரம் கிடைக்கும்.

---------------------------------------





மீனம்

டிசம்பர் 19, 2020


மார்கழி 04 - சனி

உத்தியோகத்தில் இருந்துவந்த தடைகள் அகலும். வெளியூர் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். தந்தைவழி உறவுகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் மரியாதைகள் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான பணிகளில் இலாபம் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



பூரட்டாதி : தடைகள் அகலும்.


உத்திரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.


ரேவதி : இலாபம் மேம்படும்.

---------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Odi odi Utkalantha Jothi Full Song Tamil Lyrics for music | ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் - ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics)

 ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics) Odi odi Utkalantha Jothi l...