திங்கள், 21 செப்டம்பர், 2020

ராசிபலன்' சில சமயங்களில் ஏன் பலிப்பதில்லை? என்று நீங்களும் தெரிஞ்சுக்கணுமா?


பொதுவாக ராசிபலன் அல்லது ஜோதிட பலன்கள் பலிக்காமல் போவதற்கு நிறைய காரணங்கள் உண்டு. அதற்காக ஜோதிடமே தவறு என்று கூறி விட முடியாது. நம்முடைய வாழ்க்கையிலேயே எவ்வளவோ ஜோதிடர்கள் கணித்து கூறிய சில விஷயங்கள் நம் வாழ்க்கையில் நடந்திருப்பதை கண்டு நாம் வியந்து இருப்போம். எப்படி இவ்வளவு சரியாக சொல்கிறார்கள்? என்று நமக்கே தோன்றியிருக்கும். அது தான் ஜோதிடத்தின் பலம். நம்முடைய முக்காலத்தையும் நம் கண்முன்னே காட்டும் மாயக்கண்ணாடி தான் ஜோதிடம். அப்படி இருந்தும் ராசிபலன் சில சமயங்களில் பலிப்பதில்லையே ஏன்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.


முக்காலத்தையும் காட்டும் மாயக்கண்ணாடி ஜோதிடம் என்றாலும், அது நூற்றுக்கு 90 சதவீதம் தான் பலிக்கும். நமது பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சிறு மாறுதல் ஏற்பட்டாலும் ஜோதிட பலன்கள் பலிக்காது போய்விடும் என்பது தான் உண்மை. உதாரணத்திற்கு கைரேகை சாஸ்திரத்தை எடுத்துக் கொள்வோம். கைரேகை சாஸ்திரத்தை பொறுத்தவரை ஒருவரது கையில் ரேகை பார்க்கும் பொழுது, அவருடைய சந்திர மேட்டில் சூலம், வேல், சக்கரம் போன்ற அமைப்புகள் இருந்தால் அவர்களுக்கு கைரேகை ஜோதிடம் சொல்ல மாட்டார்கள். அதற்கு காரணம் அத்தகைய படைப்பை கடவுள் நேரடியாக கண்காணிப்பதாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இவர்களுக்கு சொன்னாலும் அது பலிக்காது.


சாதாரண மனிதர்களுக்கு பலிக்கும் ஜோதிடம் கூட இத்தகையவர்களுக்கு பலிப்பதில்லை, அதாவது ஒருவர் மனநிலை பாதித்து இருந்தால், சாலையோரத்தில் அழுக்கு படிந்த உடைகளுடன், உடலுடன் இருந்தால், பிச்சை எடுப்பவர்கள், நிராதரவாக நிற்பவர்கள், அகோரிகள், மனிதனைப் போல அல்லாத முகம், உடல் கொண்டவர்கள் இவர்களுக்கெல்லாம் ஜோதிடம் பலிப்பதில்லை. இவர்களுடைய படைப்பு அதற்காகவே அமைந்துள்ளது எனக் கூறலாம்.


ஒருவரது ஜாதகத்தில் 5 அல்லது 6 கிரகங்கள் உச்சம் பெற்று இருந்தால் அவர்களுக்கு கூறப்படும் ஜோதிடம் பலிக்காது என்பார்கள். கேதுவுடன் நான்கு கிரகங்களும், ராகுவுடன் மூன்று கிரகங்களும் ஒன்று சேர்ந்து இருந்தால் அந்த ஜாதகர் வாழ்க்கையில் ஏகப்பட்ட கஷ்டங்களை அனுபவிப்பார். அவர்களுக்கு ஜாதகம் பார்த்து ஜோதிடம் கூறினாலும் அது பலிக்காது... 


இது இறைவனின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் சில விஷயங்கள். இவற்றை ஜோதிடத்தால் கணித்துக் கூற முடியாத நிலையில் இருக்கும் என்பது தான் உண்மை. அன்றாடம் சொல்லும் ராசிபலன் பெரும்பான்மையினருக்கு பொருந்தினாலும் ஒருசிலருக்கு பொருந்துவதில்லை. அதற்கு காரணம் அவர்களின் ஜாதகத்தில் இருக்கும் பிரச்சினையாக இருக்கலாம் அல்லது கிரக அமைப்புகளின் மாற்றங்களால் உண்டாகும் விளைவாக இருக்கலாம்.


அதற்காகத்தான் நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் பலிக்கும் என்பார்கள். 10 சதவீதம் பேருக்கு அளிக்காமல் போவதற்கு பூமியின் சுழற்சி இது போல் காரணமாக அமைந்து விடுகிறது. இதனால் ஜோதிடத்தையே தவறு என்று முற்றிலுமாக கூறக்கூடாது. ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்பவர்கள் எல்லாம் நன்றாகத் தானே இருக்கிறார்கள் என்று நினைப்பதும் தவறு. எல்லோருக்கும் எல்லாமும் சரியாக நடந்து விடாது.


ஜோதிடம் என்பது மனிதனுக்கு கிடைத்த வரப்பிரசாதம். அதை முறையான ஜோதிடரிடத்தில் முறையாக காண்பித்து நம்முடைய எதிர்கால வாழ்க்கையை தெரிந்து கொள்ள வேண்டும். நல்ல ஜோதிடர்கள் அமையாமல் இருப்பதும் ஒரு விதி தான் என்று கூறலாம். நம்முடைய தலைவிதியை மாற்ற நம்மால் முடியுமா? கர்ம வினைப்பயன் நம்மை தொடர்ந்து தானே ஆகும்?🤔🤔

பூஜை அறையில் செய்ய வேண்டியவையும், செய்யக் கூடாதவையும்...


வெற்றிலைக்கு நுனியும், வாழைப்பழத்திற்கு காம்பும் அவசியம் இருக்க வேண்டும். 


வெற்றிலை பாக்கில் சுண்ணாம்பு இருக்கக் கூடாது.


அவல்பொரி, கடலை மற்றும் கல்கண்டு நிவேதனமாகப் படைக்கலாம். 


*பச்சரிசியில் சாதம் செய்து தான் கடவுளுக்குப் படைக்க வேண்டும்.


நாகப்பழம், மாதுளை, கொய்யா, வாழைப்பழம், நெல்லி, இலந்தை, விளாம்பழம், புளியம்பழம், மாம்பழம் ஆகிய பழங்கள் பூஜைக்கு ஏற்றவையாகும்.


*வாழையில் நாட்டுப்பழம் நல்லது


குடுமி தேங்காயை சீராக உடைத்து பிறகு குடுமியைப் பிரிக்க வேண்டும். அழுகிய தேங்காய் இருந்தால், அதனை மாற்றி வேறு தேங்காயை உடைக்கலாம். கோணலான, வழுக்கையான தேங்காய் இருக்கக் கூடாது


வழிபாட்டிற்கு முன்பாக சாம்பிராணி புகை போடுவது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். சாம்பிராணி வாசம் கெட்ட அதிர்வுகளை விரட்டும் ஆற்றல் கொண்டது.


கோலமிட்டு, விக்ரகங்களைச் சரியாக அமைத்துக்கொண்டு, விளக்கேற்றி, ஊதுவத்தி ஏற்றி அர்ச்சனை செய்து அதன்பின் கற்பூர ஆரத்தி செய்ய வேண்டும்.


விநாயகரை துளசியால் பூஜிப்பது தவறு. பெருமாளுக்கு அர்ச்சதையால் பூஜிப்பதும் தவறு. சிவபெருமானுக்கு தாழம் பூ ஆகாது. திருமகளுக்கு தும்பை பூ ஆகாது. பவளமல்லி சரஸ்வதிக்கும், அம்பிகைக்கு அருகம்புல்லும் பூஜைக்கு உகந்தது அல்ல.


*வில்வம், கொன்றை, தும்பை, வெள்ளேருக்கு, ஊமத்தை சிவனுக்கு உரியது. காளியம்மன், துர்கை, முருகனுக்கு அரளி பூக்கள் உகந்தவை.


அருகம்புல், மல்லி, சாமந்தி, நீலப்பூ, ரோஜா, பன்னீர் ரோஜா, சங்குப்பூ, தாமரை, மரிகொழுந்து, சம்பங்கி, துளசி, விரிச்சிப்பூ ஆகியவை பூஜைக்கான மலர்கள் என்று ஆன்றோர்களால் கூறப்படுகிறது.


சாமந்தி போன்ற மனமில்லாத மலர்கள் பூஜைக்கு ஒதுக்கி வைக்க வேண்டும் என்று ஒருசிலர் கூறுகிறார்கள். ஆனால், அலங்காரத்திற்குப் பயன்படுத்தலாம். 


*அர்ச்சிக்கும் போது முழு மலரால் மட்டுமே அர்ச்சனை செய்ய வேண்டும். பூவின் இதழ்களைக் கொண்டு அர்ச்சனை செய்வது மிகவும் தவறாகும்.


*காய்ந்துபோன மற்றும் அழுகிப்போன, வாடிப்போன, பூச்சி கடித்த பூக்களைப் பயன்படுத்த தெய்வ குற்றமாகும்.

ஒரு கிரகமும் இல்லாத வீடுகள்...

 

ஒருவரின் ஜாதகத்தில் குறிப்பாக ஒரு பாவகத்தில் எந்த ஒரு கிரகமும் இல்லை என்ற நிலையிலும் ,அந்த பாவகம் எந்த ஒரு கிரகத்தின் பார்வையினைப் பெறாத நிலையில் அந்த வீட்டின் பலன்கள் எப்படி இருக்கும்? 

ஒரு பாவகம், எந்த ஒரு கிரக தொடர்பினையும்  பெறாத நிலையில் அந்த வீட்டின் அதிபதியின் சுய இயல்பை, அந்த வீடு பிரதிபலிக்கும். 


சுய இயல்பு என்றால் என்ன? கிரகங்கள் சுப கிரகமாக அமையுமாயின் சுப தன்மையையும், அசுப கிரகமாயின் அசுப தன்மையையும் பெற்றிருக்கும். இதுதான் கிரகங்களின் சுய இயல்பு என்பதாகும்.


எடுத்துக்காட்டாக மீன இலக்னத்திற்கு ஏழாம் இடமான கன்னியில் எந்த ஒரு கிரகமும் இல்லை என்ற நிலையில் அந்த வீட்டினை எந்த ஒரு கிரகமும் பார்க்கவில்லை எனும் பட்சத்தில் பலன்கள் எப்படி இருக்குமென்றால் ஏழாமிடம் புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி இராசியாக இருப்பதால் அவருக்கு வரக்கூடிய மனைவி புதனின் குண இயல்புகளை கொண்டவராக இருப்பார். 


புதனின் இயல்புகளான  அதீத புத்திசாலித்தனம், இளமையான தோற்றம்,

நகைச்சுவை உணர்வு, எல்லோரையும் காரணத்தோடு அனுசரித்துச் செல்லும் பாங்கு போன்றவற்றை கொண்டவராக இருப்பார்.

 அந்த ஜாதகத்தில் புதன் அமர்ந்த இடத்திற்கு ஏற்பவும் புதனுடன் இணைந்துள்ள மற்ற கிரகங்களின் குணத்திற்கேற்ற  பலன்களையும்  பெற்றிருப்பார்.


அதேபோல கும்ப இலக்கினத்திற்கு 7ஆம் இடமான சிம்மத்தில் எந்த ஒரு கிரகமும் இல்லை என்ற நிலையில், அந்த வீட்டினை எந்த ஒரு கிரகமும் பார்க்காத நிலையில் அவருக்கு வரக்கூடிய மனைவி சூரியனின் குண இயல்புகளை பிரதிபலிப்பவராக இருப்பார். ஆளுமை, அதிகாரம்,

தற்பெருமை, நான் என்ற எண்ணம் போன்றவை,  சூரியன் அமர்ந்த இடம், சூரியனுடன் தொடர்பு பெற்றுள்ள கிரகங்களைப் பொறுத்து பலன்கள் மாறுபடும். எனவே எந்த ஒரு கிரகமும் இல்லாத, பார்க்காத வீடுகளின் பலன்கள், அந்த வீட்டு அதிபதியின் சுய இயல்பினை பிரதிபலிப்பதாக அமையும்.

சனி, 19 செப்டம்பர், 2020

சதாசிவ பிரம்மேந்திரர்


 சதாசிவ பிரம்மேந்திரர் ஆற்றங்கரையில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த போது ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். பின்னர் சில மாதங்கள் கழித்து ஆற்றில் மண் அள்ளியபோது அவரது உடல் கண்டு எடுக்கப்பட்டது. அப்போது கண்விழித்த அவர் எதுவும் நடக்காதது போல எழுந்து சென்றார். இனி.மூன்று மாதங்கள் வரை மணலில் புதைந்திருந்த காலத்திலும் சமாதி நிலையில் இருந்து விடுபடாமல் சதாசிவ பிரம்மேந்திரர் இருந்த செய்தி அவருடைய குருவான பரம சிவேந்திர சரஸ்வதி சுவாமிகளை எட்டிய போது ‘அப்படியொரு நிலையை எப்போது என்னால் எட்ட முடியும்’ என்று வியந்தாராம்.

குருவையே அப்படி வியக்க வைத்த சதாசிவ பிரம்மேந்திரர் எத்தனையோ சக்திகளைப் பெற்றிருந்த போதும் அதை விளம்பரப்படுத் திக் கொள்ளவோ, தன்னை ஒரு மகானாகக் காட்டிக் கொள்ளவோ எப்போதும் முயன்றதில்லை. அவருடைய அந்த சக்திகள் இயல்பாக தேவைப்பட்ட இடங்களில் வேலை செய்தன. அதற்கு சம்பந்தப்பட்டவர் போலவே அவர் காட்டிக் கொண்டதில்லை.

ஒரு முறை ஒரு தானியக் குவியலில் அமர்ந்தவர் அப்படியே சமாதி நிலையில் லயித்திருக்க ஆரம்பித்து விட்டார். அந்த விவசாயி அவரை தானியம் திருட வந்த கள்வன் என்று நினைத்து ஒரு கம்பால் அவரை அடிக்க ஓங்கினான். ஆனால் அவன் கை அப்படியே நின்று விட்டது. அவர் விழித்து அவனைப் பார்த்த போது தான் அவனால் கையைக் கீழே இறக்க முடிந்தது. அவன் அவரைத் திருடன் என நினைத்ததற்கு வருந்தி மன்னிப்பு கேட்பதற்கு முன் அவர் அங்கிருந்து போயுமிருந்தார்.ஒரு முறை திருநெல்வேலி யில் இருந்து குற்றாலத்திற்கு அவர் நடந்து போய்க் கொண்டிருந்தார். வழியில் சிலர் வண்டியில் மரக்கட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தார்கள். நெடிய கட்டை போல் அவர் போய்க்கொண்டிருந்ததைப் பார்த்து அவர்களில் ஒருவன் அவரை அழைத்து கட்டைகளை எடுத்துத் தரச் சொன்னான். எந்த விதமான மறுப்பும் சொல்லாமல் அவரும் எடுத்துத்தந்து அந்த மரக்கட்டைகளை வண்டியில் ஏற்றுவதற்கு உதவினார். வேலை முடிந்த பின் அவர் மறுபடி தன் பயணத்தைத் தொடர்ந்தார்.அந்தக் கயவர்கள் தங்களுக்கு உதவிய ஒருவர் என்கிற நன்றியும் இல்லாமல் ‘இந்தக் கட்டை எங்கே போகிறது?’ என்று கூவி ஏளனமாகக் கேட்டார்கள்.சதாசிவ பிரம்மேந்திரர் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் வண்டியில் ஏற்றி இருந்த கட்டைகள் திடீரென்று தீப்பிடித்து எரிய ஆரம்பித்தன. அப்போது தான் அவர்களுக்கு அவர் ஒரு யோகி என்பது புரிந்தது.

இன்னொரு சமயம் ஒரு பண்டிதன் அவருடைய பூர்வாங்கம் தெரியாமல் அவருக்குக் கிடைக்கும் புகழைக் கண்டு பொறாமைப்பட்டான். பல சமஸ்கிருத நூல்களைக் கற்றுத் தேர்ந்திருந்த அவன், அவர் வேத நூல்கள் பற்றிய பரிச்சயமே இல்லாதவர் என்றும், அவர் வாழும் வாழ்க்கை வேதங்களின் அங்கீகாரம் இல்லாதது என்றும் அவரிடம் நேரில் வந்து குற்றம் சாட்டினான்.சதாசிவ பிரம்மேந்திரர் அப்போது அங்கே அருகில் இருந்த ஒரு சலவைத் தொழிலாளி நாக்கில் சில எழுத்துக்கள் எழுத, படிப்பறிவில்லாத அவர் வேத மந்திரங் களைச் சொல்ல ஆரம்பித்து விட்டார்.அந்த மந்திரங்கள் ஒரு ஞானியின் வாழ்க்கை முறையை விவரிப்பதாக இருந்தன. அவை அனைத்தும் சதாசிவ பிரம்மேந்திரரின் வாழ்க்கையை ஒத்ததாகவும் இருந்தன.

இப்படி அவருடைய சக்திகளை உணர்ந்தவர்கள் சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல, அரசர்களும் தான்.ஒரு முறை அவர் பயணத்தின் போது வழியில் ஒரு படைத்தலைவன் அந்தப்புரத்துக்குள் புகுந்து விட்டார். ஆடைகள் இல்லாத ஒரு பித்தர் என்று அவரை எண்ணிய அந்தப்புர பெண்மணிகள் அலறி அடித்துக் கொண்டு ஒதுங்கினார்கள். ஆனால் அவரோ சுற்றுப்புற சூழலே உணராமல் அந்தப்புரத்தைக் கடந்து கொண்டு இருந்தார். இந்தத் தகவல் நவாபின் செவிகளை எட்டியது.

கோபம் கொண்ட நவாப் அந்தப் பித்தனின் கையை வெட்டிக் கொண்டு வரும்படி சிப்பாய்களிடம் ஆணை இட்டான். சிப்பாய்கள் விரைந்து வந்து சதாசிவ பிரம்மேந்திரரின் ஒரு கையை வெட்டினார்கள். கை வெட்டப்பட்டு ரத்தம் வந்து கொண்டிருந்த போதும் சிறிதும் சலனப்படாத அவர் சென்று கொண்டே இருந்தார். அந்தச் செய்தியும் நவாபின் செவிகளை எட்டியது.

திகைத்துப் போன நவாப் அந்த வெட்டப்பட்ட கையை எடுத்துக் கொண்டு ஓடி அவரை அடைந்து மன்னிப்பு கேட்டான்.

அந்தக் கையை அவனிடம் இருந்து வாங்கி மீண்டும் பொருத்திக் கொண்டு அவர் போய்க் கொண்டே இருந்தார்.

கையை வெட்டியதற்குக் கோபம் கூடக் கொள்ளாத அந்த யோகி சாதாரண மனிதர்களின் உணர்ச்சிகளை என்றோ கடந்திருந்தார் என்றல்லவா இதிலிருந்து நமக்குப் புரிகிறது.கி.பி.1730 முதல் 1768–ம் ஆண்டு வரை புதுக்கோட்டை மன்னராக இருந்த விஜய ரகுநாத தொண்டைமான் சதாசிவ பிரம்மேந்திரர் பற்றிக் கேள்விப்பட்டு அவரைத் தன் அரண்மனைக்கு அழைத்து கவுரவிக்க விரும்பினார். தன் ஆட்சி எல்லைக்குள்ளே இருந்த அந்த யோகியைத் தானே நேரில் சென்று அழைக்கவும் செய்தார்.

மவுன விரதம் மேற்கொண்டிருந்த சதாசிவ பிரம்மேந்திரர் ஒன்றுமே பேசாமல் அமைதியாக இருந்தார். அவர் அப்படி அரண்மனைக்கு எல்லாம் வர மாட்டார் என்பதைப் புரிந்து கொண்ட மன்னர் ஆன்மிகம் குறித்த கேள்வி ஒன்றை அவரிடம் கேட்டார். அதற்காவது அவரிடம் இருந்து பதில் வந்தால் அது தனக்கு அவரது ஆசீர்வாதமாக இருக்கும் என்று மன்னர் எண்ணினார்.

சதாசிவ பிரம்மேந்திரர் மணலில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி மந்திரத்தைப் பதிலாக எழுதி விட்டுச் சென்றார்.

விஜய ரகுநாத தொண்டைமான் தன் அங்கவஸ்திரத்தில் அந்த மணலைக் கட்டி எடுத்துக் கொண்டு சென்றுஅரண்மனையில் பூஜித்து வந்ததாகச் சொல் கிறார்கள்.

சதாசிவ பிரம்மேந்திரரின் அருளைப் பெற்ற இன்னொரு மன்னர் சரபோஜி மன்னர். அவரது அமைச்சராக இருந்த மல்லாரி பண்டிட் என்பவர் சதாசிவ பிரம்மேந்திரரைச் சந்தித்து மன்னருக்கு மகன் பிறக்க அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டதாகவும், அவரும் ஆசீர்வதித்து தனது ‘ஆத்மவித்யா விலாசம்’ என்ற நூலை அளித்ததாகவும் குறிப்பிட்டு எழுதிய கடிதம் வரலாற்று ஆவணமாக தஞ்சை சரஸ்வதி மகாலில் இப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.இப்படி ஒரு பிரம்ம ஞானியாகவே வாழ்ந்து வந்த சதாசிவ பிரம்மேந்திரர் தன் வாழ்வு கடைசிக் கட்டத்தை நெருங்குவதை உணர்ந்தார். அருகில் இருந்த அவரது பக்தர்களிடம் தனது சமாதியை கரூரை அடுத்த நெரூரில் அமைக்கும்படி எழுதிக் காட்டினார்.அந்தப் பக்தர்கள் பெருந்துக்கம் அடைந்தனர். கண்களை மூடிக்கொண்டு கடைசி யாத்திரைக்குத் தயாராக இருந்த சதாசிவ பிரம்மேந்திரரிடம் தங்கள் துக்கத்தை வெளிப்படுத்திய அவர்கள் ‘இனி எங்களுக்கு யார் இருக்கிறார்கள்? எங்களுக்கு வழி காட்டுங்கள்’ என்று வேண்டினார்கள். கஷ்டப்பட்டு கண்களைத் திறந்த சதாசிவ பிரம்மேந்திரர் தன் கடைசி கீர்த்தனையை எழுதிக் காட்டினார்.சர்வம் பிரம்ம மயம் ரே ரே  சர்வம் பிரம்ம மயம்...’ என்று தொடங்கும் அந்தக் கீர்த்தனையில் ‘எல்லாமே இறைமயம் தான். அப்படி இருக்கையில் கடவுளை எங்கே தேட வேண்டும். அந்தப் பிரம்மத்தில் அல்லவா நாமும் இருக்கிறோம்’ என்ற பொருள் இருக்கிறது.

1755 –ம் ஆண்டு சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதி அடைந்து இவ்வுலக வாழ்க்கையை முடித்துக் கொண்டார். நெரூரில் அவரது ஜீவ சமாதியைக் கட்ட புதுக்கோட்டை மன்னர் உதவி இருக்கிறார். இன்றும் அவரது ஜீவசமாதிக்குப் பல ஆன்மிக அன்பர்கள் சென்ற வண்ணம் இருக்கிறார்கள். சென்றவர்கள் அங்கு அவரது ஆன்மிக அலைகளை உணர்ந்த வண்ணம் இருக்கிறார்கள்.

அவரது ஜீவசமாதிக்கு ‘ஒரு யோகியின் சுயசரிதை’யை எழுதிய பரமஹம்ச யோகானந்தரும் சென்று வழிபட்டிருக்கிறார். அதையும் சதாசிவ பிரம்மேந்திரர் புரிந்த சில அற்புதச் செயல்களையும் அந்த நூலில் குறிப்பிட்டும் இருக்கிறார்.

தமிழகத்தில் 8 இடங்களில் காட்சி தந்த நரசிம்மர் கோவில்கள்...

தமிழகத்தில் 8 இடங்களில் காட்சி தந்த நரசிம்மர் கோவில்கள் உள்ளன. அந்த கோவில்களின் வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ளலாம்.


இரண்யனுக்கு அஞ்சி வேறு பகுதிகளில் ஒளிந்து வாழ்ந்த முனிவர்கள், இரண்ய வதத்திற்குப்பின் பகவானிடம் நரசிம்மத் திருக்கோலத்தைத் தங்களுக்குக் காட்டியருள வேண்டும் என்று வேண்டினர். அதற்கிசைந்த பெருமாள் அவ்வண்ணமே முனிவர்களுக்குக் காட்சி தந்தார். அவ்வாறு காட்சி தந்த தலங்கள் தமிழகத்தில் எட்டு இடங்களில் உள்ளன.


இவற்றில் பூவரசன் குப்பம் நடுவில் இருக்க, இதைச் சுற்றி சோளிங்கர் நரசிம்மர், நாமக்கல் நரசிம்மர், அந்திலி நரசிம்மர், சிங்கப் பெருமாள் கோவில் (தென் அகோபிலம்), பரிக்கல் நரசிம்மர், சிங்கிரி கோவில் லட்சுமி நரசிம்மர், சித்தனைவாடி நரசிம்மர் ஆகிய தலங்கள் அமைந்துள்ளன.


பூவரசன்குப்பம், பரிக்கல், சிங்கிரி கோவில் ஆகிய மூன்று தலங்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன. இந்த 3 தலங்களையும் ஒரே நாளில் வழிபட்டால் நல்லது என்பார்கள். இவையன்றி இன்னும் பல தலங்களில் நரசிம்மர் கோவில் கொண்டுள்ளார். நரசிம்ம ஜெயந்தி நாளில், தன் பக்தனுக்காக நொடிப் பொழுதில் தோன்றி காத்து ரட்சித்த அந்த உலக நாயகனை வணங்கிப் பேறு பெறுவோம்.


பூவரசங்குப்பம் :


இரண்யகசிபுவை வதம் செய்த பிறகும், கோபம் தணியாத நரசிம்மர், காடுகளிலும், மலைகளிலும் சுற்றித் திரிந்தார். அப்போது இரண்யகசிபுக்கு பயந்து காடுகளில் ஒளிந்தபடி தன்னை வழிபட்ட முனிவர்களுக்கு அவர் காட்சியளித்தார். அந்தத் தலமே இதுவாகும். தட்சிண அகோபிலம் என்ற புராணப்பெயரைக் கொண்டது.

தூணிலிருந்து நரசிம்மர் வெளிப்பட்ட வரலாற்றின் அடிப்படையில், ஒரு தூணையே நரசிம்மராகக் கருதி இங்கு வழிபாடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதன்பின்னர் பல்லவ மன்னர்கள் காலத்தில் ஆலயம் எழுப்பி, சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மூலவர் லட்சுமிநரசிம்மர், உற்சவர் பிரகலாதவரதன், தாயார் அமிர்தவல்லி.


பொதுவாக நரசிம்மருக்கான ஆலயங்களில் அவர் உருவம் பெரியதாகவும், தாயாரின் உருவம் சிறியதாகவும் அமைந்திருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில், ஆணுக்குப் பெண் சரிசமம் என்பதை உணர்த்தும் விதமாக பெருமாளின் உருவத்திற்கு தகுந்தாற்போல, தாயாரின் திருஉருவமும் அமைக்கப்பட்டிருக்கிறது.


பண்ருட்டியிலிருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் சின்னக்கள்ளிப்பட்டு என்ற ஊரிலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்திலும், புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் சிறுவந்தாடு என்ற ஊரிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் இருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் சுவாதி தினத்தில் நரசிம்மர் ஜெயந்தி தின விழா கொண்டாடப்படுவது வழக்கம்.


கோவில் அலைபேசி எண்: 95851 78444.


சிங்கிரிக்குடி :


பிரகலாதன் வேண்டு கோளுக்கிணங்கி, 16 கரங் களுடன் உக்கிரமூர்த்தியாக காட்சியளித்த தலம் இது. ராஜராஜ சோழன் மற்றும் விஜயநகர மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட இவ்வாலயம், 5 நிலை ராஜ கோபுரத்துடன் மேற்கு நோக்கி உள்ளது.


இரண்யகசிபுவை நரசிம்மர் மேற்கு நோக்கி நின்று வதம் செய்ததால், இந்தக் கோவிலும் மேற்கு நோக்கிய நிலையில் உள்ளது. நரசிம்மரின் இடதுபுறம் இரண்ய கசிபுவின் மனைவி நீலாவதி, வலதுபுறம் தரிசனம் வேண்டி 3 அசுரர்கள், பிரகலாதன், சுக்ரன், வசிஷ்டர் ஆகியோர் உள்ளனர். கருவறையின் உள்ளே வடக்கு நோக்கிய நிலையில் சிறுவடிவில் யோகநரசிம்மர், பால நரசிம்மர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். ஒரு கருவறையில் மூன்று நரசிம்மர்கள் அருள்பாலிப்பது அரிதான காட்சியாகும்.


கடலூர்-புதுச்சேரி சாலையில் தவளகுப்பத்தில் இருந்து அபிஷேகபாக்கம் செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் தொலைவில் இந்தக் கோவில் இருக்கிறது.


கோவில் தொலைபேசி எண்: 04142-224328.


பரிக்கல் :


இதுவும் பிரகலாதனுக்காக நரசிம்மர் காட்சி கொடுத்த தலம் தான். நரசிம்மர் மீது மாறாத பக்திக்கொண்ட விஜயராஜன் என்னும் மன்னன் இங்கு ஆலயம் எழுப்பியுள்ளான். மேலும் ஆலயத்தில் தன் குரு வாமதேவ மகரிஷி உதவியுடன் மூன்று நாட்கள் தொடர் வேள்வி நடத்த ஏற்பாடு செய்தான்.


யாகத்தில் கலந்து கொள்ளுமாறு பல்வேறு தேச அரசர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தான். இந்த நேரத்தில் பரிகாலன் என்னும் அசுரன், வேள்வியை தடுத்து நிறுத்த அங்கு வந்தான். அசுரன் வருவதை அறிந்த குலகுரு, மன்னனை அருகிலுள்ள புதரில் ஒளிந்துக் கொள்ளுமாறு கூறினார். இருப்பினும் அசுரன் கோடரியால் மன்னனின் தலையை தாக்கினான். இதையடுத்து நரசிம்மர், ‘உக்கிர நரசிம்மராக’ தோன்றி, பரிகாலனை அழித்து மன்னனுக்கு காட்சியளித்தார்.


சென்னை--திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டைக்கு வடக்கில் இருந்து இந்த ஆலயத்தை அடையலாம். விழுப்புரம் மாவட்ட எல்லைக்குள் இருக்கிறது இந்தக் கோவில்.


இது மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். 


பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவில் அலைபேசி எண்: 96776 42002.


சோளிங்கர் :


சப்த ரிஷிகளின் வேண்டுகோளின்படி, நரசிம்மர், யோக நிலையில் காட்சியளித்த தலம் இது. மூலவர் யோக நரசிம்மர், உற்சவர் பக்தவச்சலம் சுதாவல்லி, தாயார் அமிர்தவல்லி.


விசுவாமித்திரர் இங்குள்ள நரசிம்மரை வழிபட்டு பிரம்ம ரிஷி பட்டம் பெற்றார். கடிகாசலம் எனப்படும், 500 அடி உயரமும், 1305 படிக்கட்டுகளும் கொண்ட பெரிய மலையில் மூலவர் அருள்பாலிக்கிறார். உற்சவருக்கு மலையிலிருந்து நான்கு கிலோமீட்டர் தள்ளி ஊருக்குள் தனிக்கோவில் உள்ளது. தமிழ்நாட்டிலேயே மூலவருக்கு தனியாகவும், உற்சவருக்கு தனியாகவும் கோவில் இருப்பது இங்கு மட்டுமே. பெரிய மலைக்கு அருகில் 406 படிக்கற்களைக் கொண்ட சிறிய மலையில் யோக ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.


வேலூர் மாவட்டம் அரக்கோணம்-சோளிங்கர் சாலையில் இந்த மலைக்கோவில் இருக்கிறது.


சிங்கப்பெருமாள் கோவில் :


ஜாபாலி என்னும் மகரிஷி, நரசிம்மரை வேண்டி தவம் செய்து, அவரது தரிசனம் பெற்ற தலம் இது. இவர் ‘பாடலாத்ரி நரசிம்மர்’ என்று அழைக்கப்படுகிறார். (பாடலம் என்றால் சிவப்பு, அத்ரி என்றால் மலை) என்று பொருள். சிவந்த கண்களுடன் மலைமீது அமர்ந்திருப்பதால், இந்த பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


பொதுவாக நரசிம்மருக்கான ஆலயங்களில், அவர் இடதுகாலை மடித்துவைத்தும், வலதுகாலை தொங்கவிட்ட நிலையிலும் காட்சி தருவார். ஆனால் இந்த ஆலயத்தில் வலதுகாலை மடித்துவைத்தும், இடதுகாலை தொங்கவிட்ட நிலையில் மிகப்பெரிய மூர்த்தியாக காட்சியளிக்கிறார்.


காஞ்சீபுரம் மாவட்ட எல்லைக்குள், தாம்பரம்-செங்கல்பட்டு இடையில் சிங்கப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது.


நாமக்கல் :


திருமகள், தன் கணவரான மகாவிஷ்ணு எடுத்த நரசிம்மர் அவதாரத்தை காண வேண்டி, தவம் செய்து தரிசனம் பெற்ற தலம் இது. நரசிம்மரை காண வேண்டி இத்தலத்தில் திருமகள் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஆஞ்சநேயர், கண்டகி நதியில் இருந்து சாளக்கிராம கல்லை (திருமாலின் அனுக்கிரகம் பெற்றது) எடுத்துக்கொண்டு வான்வழியே பறந்து சென்றார். இந்த தலத்தின் அருகே வந்தபோது, இங்குள்ள தீர்த்தத்தில் நீராட விரும்பினார் அனுமன்.


கையிலிருந்த சாளக்கிராமத்தைக் கீழே வைக்கமுடியாத நிலையில், என்ன செய்வதென யோசித்தவருக்கு தீர்த்தக் கரையில் தவம் செய்த திருமகள் தெரிந்தார். மகிழ்ச்சியுடன் அவரிடம் அந்த சாளக்கிராமத்தைத் தந்து விட்டு நீராடச் சென்றார். அதை கையில் வாங்கிய திருமகள் குறித்த நேரத்திற்குள் வராவிட்டால் கீழே வைத்துவிடுவேன் என்று கூறினார்.


அதுபோலவே அனுமன் வராதிருக்க திருமகள் அக்கல்லை கீழே வைத்தார். அது பெரியதாக விசுவரூபம் பெற்று பெருமலையானது. அதிலிருந்து நரசிம்மர் தோன்றி திருமகளுக்கும் ஆஞ்சநேயருக்கும் காட்சியளித்தார். சாளக்கிராமத்தைக் கொண்டுவந்த ஆஞ்சநேயர் 18 அடி உயரத்தில், கையில் ஜெபமாலை, இடுப்பில் கத்தியுடன் நரசிம்மர் ஆலயத்துக்கு எதிரில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். நாமக்கல்லில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.


 பிரதோஷ நேரமான மாலை 6 மணி அளவில் விஷேசமான தீபாராதனை நடைபெறும். 


நரசிம்ம ஜெயந்தி தினத்தில் மாலை 6 மணிக்கு பிறகு சாமியை தரிசிப்பவர்களுக்கு பொருளாதாரத்தினுடைய வளர்ச்சி, தோஷங்கள் நிவர்த்தியாகும். உத்யோகம், வாழ்வியலில் நம்முடைய நேர்மையான கோரிக்கைகளை சாமி அனு கிரகம் செய்து கொடுப்பார்.


சனி, ராகு, கேது, செவ்வாய் போன்ற கிரக உபாதைகள் குறையும். கிரகங்களால் ஏற்படக் கூடிய தோஷங்கள் குறையும், லட்சுமி கடாட்சம் கிடைக்கும். எந்தவித பிரார்த்தனைகளும் உடனே அனுகிரகம் கிடைக்கும்.


கோவில் தொடர்பு எண்:04286-233999


சிந்தலவாடி :


ஒரு பக்தனின் கனவில் தோன்றிய நரசிம்மர், தனக்கு ஒரு ஆலயம் எழுப்புமாறு கூறி, அந்த பக்தனுக்கு காட்சியளித்த தலம் இது. ஹரியாச்சார் என்பவர் கரூர் மாவட்டம் திருக்காம்புலியூரில் வசித்துவந்தார். அவர் கனவில் ஒருநாள் நரசிம்மர் தோன்றி, தான் கருப்பத்தூர் காவிரிக்கரையில் ஒரு கல்லாக கவிழ்ந்து கிடப்பதாகவும், தன்மீது ஒரு சலவையாளர் அனுதினமும் துணி துவைத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.


இதுகேட்டு வேதனையுற்ற ஹரியாச்சார் கருப்பத்தூர் சென்றார். இதேபோல் சலவையாளரின் கனவிலும் தோன்றி சொல்லியிருக்கவே, இருவரும் சேர்ந்து நரசிம்மரை கண்டுபிடித்து, அதை தூக்கிக் கொண்டு திருக்காம்புலியூர் புறப்பட்டனர். பாரம் அதிகமாக இருக்கவே திருக்காம்புலியூருக்கும், கருப்பத்தூருக்கும் இடைபட்ட சிந்தலவாடியில் இருந்த வெங்கட்ரமண ஆலயத்தில் இறக்கி வைத்தனர். பகவான் அங்கேயே பிரதிஷ்டை ஆனதுடன், ஹரியாச்சாருக்கும், சலவையாளருக்கும் காட்சித் தந்தார்.


திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் காட்டுப்புத்தூர் அருகில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.


அந்திலி :


நரசிம்மர், தன் வாகனமான கருடனுக்கு காட்சி தந்த திருத்தலம் இது. பிரகலாதனை காப்பாற்ற வேண்டிய அவசரத்தில் தன்னிடம் சொல்லாமல் பகவான் புறப்பட்டுச் சென்றதை அறிந்த கருடன், மிகுந்த வேதனை அடைந்தார். பகவானைத் தேடி பூலோகம் வந்து நிம்மதியின்றி தவித்தார்.

எங்குச் சென்றாலும் தன்மீது ஏறிச்செல்லும் பகவான், தன்னை மறந்துவிட்டுப் போனதை எண்ணி வருந்தியவர் இந்த தலம் இருக்கும் இடத்திற்கு வந்து தவம் இருந்தார். இதனால் அவர் உடல் இளைத்தது. அவரது உடலிலிருந்து வெளிப்பட்ட வெப்பம், கயிலாயம் வரை சென்று தாக்கியது. இதையடுத்து தேவர்கள், நாராயணரிடம் சென்று கருடனை காக்க வேண்டி பிரார்த்தித்தனர். கருடனிடம் முன்பாக சென்றார் நாராயணர். அப்போது தனக்கும் நரசிம்மராக காட்சியளிக்க வேண்டும் என்று கருடன் வேண்ட, அவ்வாறே காட்சியளித்தார்.


திருக்கோவிலூரில் இருந்து முகையூர் வழியாக விழுப்புரம் செல்லும் சாலையில் அரகண்ட நல்லூரை அடுத் திருக்கிறது அந்திலிதிருத்தலம்.

திருநீறு வாங்கும் போதும் அதை நெற்றியில் வைக்கும் போதும் கவனிக்க வேண்டியவை...

 கோவிலுக்கு போனோம், திருநீறு வாங்கினோம், நெற்றியில் வைத்துக்

கொண்டோம், என்பதுடன் முடிந்து விடவில்லை.


 ஆலயங்களில் வாங்கும் திருநீறு ஆண்டவனின் பிரசாதம் ஆகும்.


 திருக்கோவில்களில் நாம் திருநீறு வாங்கும் போதும் அதை நெற்றியில் வைக்கும் போதும் கவனிக்க வேண்டியவை.


1. திருநீறு இடது கையை கீழே வைத்து வலது கையால் வாங்கப்பட வேண்டும்.


2.அத் திருநீறு இடது கைக்கு மாற்றக் கூடாது.


3.நல்ல சுத்தமான தாளில் மாற்றிக்கொள்ளலாம்.


4. திருநீறை கீழே சிந்தக்கூடாது. அப்படி சிதறினால் அவ்விடம் சுத்தம் செய்ய வேண்டும்.


 5.திருக்கோவிலில் வாங்கிய திருநீறை கொட்டிவிட்டு வரக்கூடாது.


திருநீறு நெற்றியில் இடும்போது கவனிக்க வேண்டியது 


1.கிழக்கு ,வடக்கு திசைகளில் நின்றாவாறே திருநீறு இட வேண்டும்.


2.சிவ நாமங்களான "சிவ சிவ" "ஓம் நமச்சிவாய" 

"ஒம் சிவாய நம" என்று உச்சரித்தல் நல்லது.

உங்கள் இஷ்ட தெய்வங்களை நினைத்து இடுவதும் நல்லதே.


3. திருநீறு என்றால் ஐஸ்வர்யம் என்பது பொருள் .அப்படியெனில் ஐஸ்வர்யம் நம்முடனிருக்க திருநீறு இடுவோம்..


திருநீறை நெற்றியின் இடக் கண் புருவ ஆரம்பத்தில் இருந்து வலது கண் புருவ இறுதி வரை மூன்று கோடுகளாக இடுதல் வேண்டும். மூன்று கோடுகள் எதற்கு?  இந்த மூன்று கோடுகள் ஈசனின் தொழிலான 1. ஆக்கல் 

2 .காத்தல் 3 அழித்தல் என்பதை குறிக்கிறது. 


திருநீற்றினை நெற்றியில் இட்டுக்கொண்டு  இரு புருவ மத்தியில் அம்பாளுக்கு உகந்த குங்குமம் வைத்துக் கொள்ளலாம். 


இதனால் கிடைக்கும் நன்மைகள்: 


1. சிவனருள்


2. மன அமைதி


3. நெற்றியின் புருவ மத்தியை வைத்து தான் ஹிப்டானிசம் செய்வதாக சொல்லப்படுகிறது. தீருநீறு ,குங்குமம் வைக்கும் போது இந்த ஹிப்டானிசம் செய்வினைகள் எல்லாம்  தவிர்க்கப்படுகிறது.


4. திருநீறு நம் நெற்றியில் தேவையற்ற நீர் உறிஞ்சும் சக்தி உடையது 


5. நாம் திரு நீறு இட்டு வெளியே செல்லுதல் கண் திருஷ்டியில் இருந்து விலக்கு.

ஆகையால் அன்பர்களே ஈசனை மனதார வணங்கி அவனது பிரசாதமாகிய திருநீறை நெற்றி நிறைய வைத்து அவனது  அருளைப் பெறுவோம்.

காதல் திருமணம் வெற்றி பெறுமா...?










1. காதல் திருமணம் என்பது ஒரு ஆணும், ஒரு பெண்ணும் அவர்களாகவே ஒருவரை ஒருவர் மனமார விரும்பி அவர்களுக்குள் ஏற்படுத்திக்கொள்ளும் இணைவு / பந்தம் ஆகும். இதனை ஜோதிடத்தில் காந்தர்வ திருமணம் என்று கூறுவர். அப்படிப்பட்ட ஜாதகங்களுக்கு திருமணப் பொருத்தம் பார்க்க அவசியம் இல்லை தான். காதலித்து திருமணம் செய்பவர்களுக்கு, திருமணப் பொருத்தம் பார்க்கத் தேவையில்லை என மூல ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது. காதலிக்கும் இருவரின் மனப் பொருத்தம் ஒன்றையே கவனிக்க வேண்டும். 


2. காதல் கொள்பவர்கள், அவர்களின் பெற்றோர்களை, அவர்தம் கருத்துக்களை, விருப்பங்களை கேளாமல் அவர்கள் பிறந்த சாதி, மதம், பழக்க வழக்கம் இவற்றினை புறந்தள்ளி அவர்களுக்குள்ளாகவே ஏற்படுத்திக்கொள்ளும் சொந்தம் / பந்தம் ஆகும். 


3. ஒரு ஆண் அல்லது ஒரு பெண் காதல் கொள்ள ஜாதகத்தில் குறிகாட்டுமா என்றால் நிச்சயம் குறி காட்டும் என்றே கூற முடியும். இதனை முன்கூட்டியே பெற்றோர்கள் அறிந்து வைத்துக் கொண்டால் தமது பெண், பிள்ளைகளின் எதிர்கால நல்வாழ்வுக்குப் பெற்றோர் தடை இல்லாமல் இருந்து இவர்களின் ஆசியோடு திருமணத்தை நடத்தி வைத்து விட்டால் நாம் பெற்று வளர்த்த நமது அருமை குழந்தைகள் தனிமைப்படாமல் குடும்பத்தோடு இணைந்து மகிழ்வோடு வாழலாம். பெற்றோர்களின் இறுதிக்காலமும் ஒரு இன்பமயமான சூழலுக்குக் கொண்டு செல்லும். ஜாதகத்தில் 5-ஆம் வீடு என்பது ஒருவரின் சம்பிரதாயங்கள் மற்றும் அவர் தம் பழக்க வழக்கங்களைக் குறிக்கும். இங்கு மத சம்பிரதாயங்களை 9ஆம் வீடு குறிக்கும். 7 ஆம் வீடு வாழ்க்கை துணைவரைக் குறிக்கும்.


4. சம்பிரதாயங்களைப் புறக்கணித்து காதல் மணம் புரிவோர் ஜாதகத்தில் 5 ஆம் வீட்டில் வலிமையான கிரகங்களோ அவ்வீட்டின் ஆட்சி கிரகமோ இடம் பெறும். காதல் உணர்வுகளைத் தூண்டி மணம் செய்ய வைப்பதில் வலிய கிரகம் சனி ஆகும். அதற்கு அடுத்த வலிமையான கிரகம் ராகு.


5. ஆணின் ஜாதகத்தில் சனி அல்லது ராகு இவர்களின் பார்வை / சேர்க்கை மூலம் சுக்கிரன் பாதிக்கப்பட்டிருந்தால் காதல் திருமணத்திற்கு வாய்ப்பு அதிகம். ஆகவே 5, 7 மற்றும் 9 ஆம் வீட்டின் அதிபதிகள் மற்றும் அவ்வீட்டுடன் தொடர்புடைய கிரகங்கள் காதல் திருமணத்தை நிர்ணயிக்கின்றன.


6. ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் செய்யும் பணியை பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் செய்கிறது. அதாவது சனி அல்லது ராகு செவ்வாயுடன் சேர்ந்தாலோ, செவ்வாயை பார்த்தாலோ காதல் தொடர்புகளை ஏற்படுத்தும். முடிவில் திருமணம் நடப்பது ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன், சனி, ராகு, சந்திரன் இவர்களின் அமைப்பைப் பொறுத்தது.


7. காதல் திருமணத்தை தவறாகப் பார்க்கும் மனப்பான்மையைப் பெற்றோர்கள் முதலில் கைவிட வேண்டும். காதல் திருமணம் மட்டுமே நிலைக்கும் அமைப்பு சில ஜாதகங்களுக்கு உண்டு. பழங்கால நூல்களில் 7-ல் சனி இருந்து, செவ்வாய் அதனைப் பார்த்தால், அந்த ஜாதகர் தன்னைவிடத் தகுதி, குணம், ஒழுக்கம், அந்தஸ்தில் குறைந்தவரை திருமணம் செய்வார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. (ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாயும், சனியும் பாபர்கள், எனவே இவர்களின் கூட்டு / தொடர்பு தாம் பிறந்த குடிக்கு / குலத்துக்கு கேடு செய்ய தூண்டும்.)


8. இங்கு, தகுதி குறைவானவர்கள் எனக் குறிப்பிடப்பட்டது , ஜாதியை வைத்து அல்ல. ஏனென்றால் உயர்ந்த ஜாதியிலும் (உயர்குடி பிறப்பிலும்) குணத்தில் தகுதி குறைவானவர்கள் உண்டு.  


9. ஜோதிடத்தைப் பொறுத்தவரை செவ்வாய், சனி ஆகியவை ஒன்றுக்கொன்று பகை கிரகங்களாகும். செவ்வாய் நெருப்புக்கு உரியது. சனி நீருக்கு உரியது. எனவே, இந்த கிரகங்கள் ஒன்றுக்கு ஒன்று பார்க்கும் அமைப்பு உள்ள ஜாதகர்களும், ஒரே வீட்டில் இருக்கப் பெற்ற ஜாதகர்களும், தங்கள் நிலை / தகுதிக்கு எதிரான முடிவுகளை எடுப்பர்.


10. ஒரு சிலருக்கு காதல் திருமணம் நடந்தாலும், அதில் மணமுறிவு ஏற்பட்டு, பின்னர் பெற்றோர் பார்த்த வரனைத் திருமணம் செய்து இறுதி வரை ஒன்றாக வாழ வேண்டிய நிலையும் ஜாதக ரீதியாக அமையும். 


11. இது ஒருபுறம் என்றால், பெற்றோர் நிச்சயித்த திருமணம் தோல்வியில் முடிந்ததால், தாமாகவே விரும்பிய வரனை 2வது திருமணம் செய்து சிறப்பாக வாழும் ஜாதக அமைப்பு உள்ளவர்களும் இருக்கின்றனர், என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.


12. எனவே, எந்த மாதிரியான கிரக அமைப்பு உள்ளது என்பதை திருமண வயது நெருங்கும் துவக்கத்திலேயே ஆராய்ந்து, அதற்கு ஏற்றது போன்ற திருமணத்தை அமைத்து 

தருவதே பெற்றோரின் கடமையாக இருக்க வேண்டும். 


13. தனது பிள்ளைக்கு (ஆண் / பெண் இருபாலருக்கும்) காதல் திருமணம்தான் நடக்கும் என்ற கிரக அமைப்பு காணப்பட்டால், அவர்களது காதலை பெற்றோர்கள் எதிர்க்காமல், அது நல்ல வரனாக இருப்பின் (எந்த கெட்ட பழக்க வழக்கமும் இல்லாத பட்சத்தில்)  அதனையே தேர்வு செய்து திருமணம் நடத்தி வைப்பதே நல்ல பலனைத் தரும். அல்லது, ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்பட்ட உடல் சுகம் மட்டுமே கருதி பெற்றெடுத்தது போன்று பெற்றோர்களின் நிலை அமைந்து விடுமேயன்றி அன்புக்கும், பாசத்துக்குமான பிணைப்பு இல்லாமல் போய்விடலாம். 


14. காதல் செய்வதால் வரக்கூடிய சாதக பாதகங்களைப் பற்றி யோசிப்பதற்கு இன்றைய இளைஞர்களுக்கு நேரமில்லை. காதல் என்பது ஜாதி, மதம், இனம், மொழிகளைக் கடந்து, வரதட்சணை போன்ற பிரச்சனைகளுக்கும் ஓர் தீர்வு என்பதால் அது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், காதல் என்ற பெயரால் காம விளையாட்டுகளில் ஈடுபட்டு, பெற்றவர்களுக்கும் சுற்றத்தாருக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் காதலர்களை ஏற்றுக் கொள்ள முடியாது தான்.


15. காதலுக்கு கண்ணில்லை என்பதால் காதலிக்கும் போது நிறை குறைகள் பெரிதாகத் தெரிவதில்லை. ஆனால் திருமணத்திற்குப் பின் சின்ன சின்ன விஷயங்கள் கூட பூதாகரமாகிவிடும். காதலிப்பது மன ரீதியாக ஆரோக்கியமான விஷயம் என்பதால், காதலிப்பதில் தப்பில்லை. 


16. திருமண வாழ்க்கையை அனுசரித்து வாழ முடியும் என்ற தன்னம்பிக்கை இருந்தால் மட்டுமே காதலிப்பது நல்லது. 


17. ஒருவரை ஒருவர் ஏமாற்றுவது, ஏமாறுவது போன்றவை நடக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது. காதலிக்கக்கூடிய வாய்ப்பு எல்லோருக்கும் அமைவதில்லை. காதல் திருமணமும், கலப்புத் திருமணமும் அவரவரின் பிறந்த ஜாதகத்திலேயே கிரகங்களால் குறிப்பிடப்பட்டுஇருக்கும். காதல் என்பது காமம் அல்ல. அது ஒரு அன்பின் ஈர்ப்பு. இனக்கவர்ச்சியும், உடல் உணர்ச்சியையும் காதல் என்ற பெயரால் அசிங்கப்படுத்தாமல் இருப்பது நல்லது. முதலில் மனதைப் புரிந்து கொள்ளுங்கள்.


18. ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீட்டில் ராகுபகவான் அமையப் பெற்று, 7ம் அதிபதியும் சுக்கிரனும் ராகு சாரம் பெற்றிருந்தால், சிறிதளவாவது வேறுபட்ட ஒருவரை  கலப்புத் திருமணம் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீட்டை குறிப்பிடுவது போல சந்திரனுக்கு 7ம் வீட்டில் சனி, செவ்வாய், ராகு போன்ற கிரகங்களில் ஏதாவது இருகிரகங்கள் அமையப் பெற்றாலும் பழக்கவழக்கத்தில் மாறுபட்ட இடத்தில் திருமணம் செய்ய நேரிடும்.


வெற்றிகரமான காதல் திருமணத்திற்கு சில கிரக இணைவுகள்


1. ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் 12ஆம் வீட்டிலும், பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் 12 ஆம் வீட்டிலும்.


2.  9-ஆம் வீட்டில் அசுப கிரகம்.


3. ஆண் மற்றும் பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரன் மற்றும் செவ்வாய் தங்கள் வீடுகளை பரிவர்த்தனை செய்திருந்தால் காதல் திருமணம் வெற்றிகரமாக இருக்கும். மேலே கூறப்பட்டவை வெகு சிலதே. இன்னும் பல விதிகளும், இணைவுகளும் உள்ளது. 


அனுபவம் பெற்ற ஜோதிடரின் உதவியை நாடுதல் அவசியம். காதல் திருமணம் கைகூடாது என அறிந்த பின்னர் தாம் காதலிக்கும் பெண்ணை / ஆசைப்படும் பெண்ணை (ஒரு தலை காதல் ) நட்பு ரீதியாக அல்லது சகோதரி பாசத்தோடு விலகுவது ஒரு சிறந்த ஆணின் செயலாகும். வற்புறுத்தி தொல்லைகள் அளிக்காமல் இருப்பதே தாம் காதலித்த அந்த பெண்ணுக்கு அளிக்கும் ஒரு சிறந்த அன்பு பரிசாகும். இதனை, ஆண்  பெண் இருபாலரும் ஜோதிட ரீதியாக அறிந்து செயல்படுவது மனித குலத்துக்கு நாம் செய்யும் ஒரு பெரிய மானுட செயல் ஆகும்.

கிரக சேர்க்கை

ஜாதகத்தில் குருவும் சனியும் சேர்ந்திருந்தால் இளம் வயதிலேயே வேலைக்கு செல்லும் நிலை ஏற்படும்

 

சுக்கிரன் + புதன் + சனி - சேர்க்கை சுப ஸ்தானங்களில் வலிமை பெற்ற ஜாதகன்- பொன், ஆடை , ஆபரணங்கள், வீடு, வாகன வசதிகளை அடைவான்.

 

சுக்கிரன் + குரு + சனி - சேர்க்கை சுப ஸ்தானங்களில் வலிமை பெற்ற ஜாதகன்- வாலிப வயதில் ஏராளமாக சம்பாதித்து மிகுதியான செலவு செய்வான்.

 

செவ்வாய் + சந்திரன் + சூரியன்- சேர்க்கை சுப ஸ்தானங்களில் வலிமை பெற்ற ஜாதகன்- கிராம தலைவனாகும் அமைப்பு உண்டு. பேச்சு திறமையின் காரணமாக புகழ் பெறுவான்....

 

சூரியன் + சந்திரன் + புதன் சேர்க்கை- சேர்க்கை சுப ஸ்தானங்களில் வலிமை பெற்ற ஜாதகன்- அரசனைப் போல செல்வமும் செல்வாக்கும் பெற்றவனாவான்

 

குரு + புதன் + சூரியன் சேர்க்கை சுப ஸ்தானங்களில் வலிமை பெற்றால் ஜாதகன் செல்வந்தன் ஆவான். வீடு, நிலம் ஆகியன பெற்று சிறப்பான வாழ்க்கை அமையும்.

 

குரு + சுக்கிரன் + புதன் - சேர்க்கை சுப ஸ்தானங்களில் வலிமை பெற்றால் ஜாதகன் பாக்கியமுள்ளவன். இளம் வயதில் செல்வம் சேர்ப்பவன். குடும்பத்தாருடன் ஒற்றுமையாக வாழ்பவன்.

 

செவ்வாய் + சுக்கிரன் + சனி - சேர்க்கை சுப ஸ்தானங்களில் நின்றால் , ஜாதகனுக்கு பிறக்கும் மகன் நற்பண்புகள் இல்லாதவனாக இருப்பான். அதனால் ஜாதகனுக்கு பொருள் நஷ்டமும் மான இழப்பும் ஏற்படும்.

 

குரு + சனி சேர்க்கை - வலிமை பெற்று சுப ஸ்தானங்களில் நிற்க - ஜாதகன், புகழ் உள்ளவன். செல்வம் சேர்ப்பவன். ஒழுக்கமுள்ளவன், கொடுத் வாக்கை காப்பபாற்றுபவன். பெரியோர்களை மதிக்கத் தெரிந்தவன்.


சூரியன் + செவ்வாய் , சூரியனும் நெருப்பு கிரகம் செவ்வாயும் நெருப்பு கிரகம் இவ்விரு கிரகங்களும் சேரும் போது ஜாதகர் அதிகமான உஷ்ணத்தை பெற்ற உஷ்ண தேகி ஆகிறார்.

உஷ்ணத்தால் முக்கியமான பாதிப்புகளால் அம்மை வியாதிகள் தோன்றுகின்றன.

சூரியன் செவ்வாய் ராகு கேதுக்களுடன் சேரும் போது உஷ்ணத் தொடர்புடைய நோய்கள் முற்றி நோய் எதிர்ப்பு சக்திகளை  ஜாதகர் இழக்கிறார்.

தீவிர அம்மை நோய்கள் சிறு வயதில் ஏற்பட்டிருந்தால் அது குழந்தை பிறப்பை தரக்கூடிய உயிரணுக்களை ஜாதகர் பெற்றிருக்க மாட்டார்.

பெண்கள் ஜாதகத்தில் சூரியன் செவ்வாய் இருவரும் சேர்ந்து எங்கு இருந்தாலும் உடல் உஸ்ணத்தால் வரும் வியாதிகள் உண்டாகும்..அடிக்கடி காய்ச்சல் என படுத்து விடுவார்கள்..கணவன் மனைவி உறவையும் பாதிக்கும்..ராகு திசையோ கேது திசையோ நடந்தால் குடும்ப தகராறு உண்டாகி தீக்குளித்து இறப்பர்.


ராகு சந்திரனுடனோ லக்னாதிபதியுடனோ சேர்ந்து எட்டில் மறைந்தால் விசம் குடிப்பர். குரு அவர்களை பார்த்தால் காப்பாற்றி விடுவார்கள்...


7-ல் சனி, லக்கனத்தில் - குரு இருக்க பிறந்த ஜாதகனுக்கு வாதநோய், பக்கவாதம் ஏற்படும்.


5, 9 -ல் சனி இருந்து -அந்த சனியை செவ்வாய் , சூரியன் பார்த்தால் பல் வியாதி.


5- க்குடையவன் 10-லும் , 10 -க்குடையவன் 5-லும் பரிவர்த்தனைப் பெற்று இருப்பது , அல்லது

 

5- ல் 2 -ஆம் அதிபதி அல்லது புதன் + சனி + செவ்வாய் --- சேர்க்கைப் பெற்று பலம் பொருந்தி இருக்க பிறந்த ஜாதகர்- வைத்தியத்தில் வல்லுனர் + இரண சிகிச்சை புரிவதில் சமர்த்தர்

>>> பரிகாரத்_தலங்கள்



*ஆயுள் பலம் வேண்டுதல்..* 

1.அ/மிகு. அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்,திருக்கடையூர்,

2.அ/மிகு. எமனேஸ்வரமுடையார் திருக்கோவில், எமனேஸ்வரம், பரமக்குடி 

3.அ/மிகு. காலகாலேஸ்வரர் திருக்கோவில், கோவில்பாளையம், 

4.அ/மிகு. சித்திரகுப்தசுவாமி திருக்கோவில், காஞ்சிபுரம், 

5.அ/மிகு. தண்டீஸ்வரர் திருக்கோவில், வேளச்சேரி, 

6.அ/மிகு. ஞீலிவனேஸ்வரர் திருக்கோவில். திருப்பைஞ்ஞீலி. 

7.அ/மிகு. வாஞ்சிநாதசுவாமி திருக்கோவில், வாஞ்சியம்,


*ஆரோக்கியத்துடன் வாழ..* 


1.அ/மிகு. தன்வந்திரி திருக்கோவில், ராமநாதபுரம், கோவை.

2.அ/மிகு. பவஒளஷதீஸ்வரர் திருக்கோவில்,திருத்துறைப்பூண்டி.

3.அ/மிகு. பிரசன்னவெங்கடேச பெருமாள் திருக்கோவில், குணசீலம்.

4.அ/மிகு. மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர்.

5.அ/மிகு. மகா மாரியம்மன் திருக்கோவில், வலங்கைமான்.

6.அ/மிகு. வைத்தியநாதசுவாமி திருக்கோவில், மடவார்விளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர்.

7.அ/மிகு. வைத்தியநாதசுவாமி திருக்கோவில், வைத்தீஸ்வரகோவில்.


 *எதிரி பயம் நீங்க..* 


1.அ/மிகு. அங்காளம்மன் திருக்கோவில், மேல்மலையனூர்.

2.அ/மிகு. அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோவில், பழைய வண்ணாரப்பேட்டை,சென்னை.

3.அ/மிகு. காலபைரவர் திருக்கோவில், கல்லுக்குறிக்கி. கிருஷ்ணகிரி.

4.அ/மிகு. காளமேகப்பெருமாள் திருக்கோவில், திருமோகூர்.

5.அ/மிகு. காளிகாம்பாள் திருக்கோவில், தம்புசெட்டித்தெரு, சென்னை.

6.அ/மிகு. தட்சிணகாசி உன்மத்த காலபைரவர் திருக்கோவில்,அதியமான்கோட்டை.

7.அ/மிகு. தில்லைகாளியம்மன் திருக்கோவில், சிதம்பரம்.

8.அ/மிகு. பிரத்யங்கராதேவி திருக்கோவில், அய்யாவாடி. கும்பகோணம்.

9.அ/மிகு. மாசாணியம்மன் திருக்கோவில், ஆணைமலை.

10.அ/மிகு. முனியப்பன் திருக்கோவில், பி.அக்ரஹாரம், தர்மபுரி.

11.அ/மிகு. ரேணுகாம்பாள் திருக்கோவில், படவேடு.

12.அ/மிகு. வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவில், கொல்லங்குடி


 *கடன் பிரச்சனைகள் தீர..* 


1.அ/மிகு. அன்னமலை தண்டாயுதபாணி திருக்கோவில், மஞ்சூர், ஊட்டி

2.அ/மிகு. கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு.

3.அ/மிகு. சாரபரமேஸ்வரர் திருக்கோவில், திருச்சேறை, கும்பகோணம்.

4.அ/மிகு. சிவலோகதியாகர், நல்லூர்பெருமணம், ஆச்சாள்புரம், சீர்காழி.

5.அ/மிகு. திருமலை-திருப்பதி ஸ்ரீநிவாசபெருமாள் திருக்கோவில், திருமலை.


 *கல்வி வளம் பெருக...* 


1.அ/மிகு. கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில், மாதவரம்.

2.அ/மிகு. தேவநாதசுவாமி திருக்கோவில், திருவஹிந்தீபுரம், கடலூர்.

3.அ/மிகு. மகாசரஸ்வதி அம்மன், கூத்தனூர். பூந்தோட்டம்.

4.அ/மிகு. வரதராஜபெருமாள் திருக்கோவில், செட்டிபுண்ணியம்.

 

 *குழந்தைப்பேறு அடைய...* 


1.அ/மிகு. ஏகம்பரநாதர் திருக்கோவில், காஞ்சிபுரம்.

2.அ/மிகு. சங்கரராமேஸ்வரர் திருக்கோவில், தூத்துக்குடி.

3.அ/மிகு. சிவசுப்ரமண்யசுவாமி திருக்கோவில், குமாரசாமிபேட்டை, தர்மபுரி.

4.அ/மிகு. தாயுமானசுவாமி திருக்கோவில், மலைக்கோட்டை, திருச்சி.

5.அ/மிகு. பாலசுப்ரமணியசுவாமி திருக்கோவில், ஆயக்குடி, தென்காசி.

6.அ/மிகு. மயூரநாதசுவாமி திருக்கோவில், பெத்தவநல்லூர், ராஜபாளையம்.

7.அ/மிகு. முல்லைவனநாதசுவாமி திருக்கோவில், திருக்கருகாவூர்.

8.அ/மிகு. நச்சாடை தவிர்தருளியசுவாமி திருக்கோவில், தேவதானம், ராஜபாளையம்.

9.அ/மிகு. விஜயராகவபெருமாள் திருக்கோவில், திருபுட்குழி.


 *குடும்பத்தில் ஒற்றுமை ஓங்க...* 


1.அ/மிகு. அகத்தீஸ்வரர் திருக்கோவில், வில்லிவாக்கம்.

2.அ/மிகு. அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில், திருச்செங்கோடு.

3.அ/மிகு. அங்காளம்மன் திருக்கோவில், முத்தனம்பாளையம்.திருப்பூர்

4.அ/மிகு. கல்யாணவிகிர்தீஸ்வரர் திருக்கோவில், வெஞ்சமாங்கூடலூர்.

5.அ/மிகு. சங்கரநாராயணசுவாமி திருக்கோவில், சங்கரன்கோவில்.

6.அ/மிகு. நவநீதசுவாமி திருக்கோவில், சிக்கல்.

7.அ/மிகு. பள்ளிக்கொண்டீஸ்வரர் திருக்கோவில், ஊத்துக்கோட்டை,சுருட்டப்பள்ளி.

8.அ/மிகு. மனிஹடா ஹெத்தையம்மன் நாகராஜா திருக்கோவில், மஞ்சக்கம்பை.

9.அ/மிகு. மாரியம்மன்,காளியம்மன் திருக்கோவில், ஊட்டி 

10.அ/மிகு. லட்சுமி நரசிம்மர் திருக்கோவில், பரிக்கல்.

11.அ/மிகு. வெக்காளியம்மன் திருக்கோவில், உறையூர்

12.அ/மிகு. ஸ்தலசயனப்பெருமாள் திருக்கோவில், மாமல்லபுரம்.


 *செல்வ வளம் சேர...* 


1.அ/மிகு. அனந்தபத்மநாபசுவாமி திருக்கோவில், அடையாறு.

2.அ/மிகு. அஷ்டலட்சுமி திருக்கோவில், பெசண்ட்நகர், சென்னை.

3.அ/மிகு. கைலாசநாதர் திருக்கோவில், தாரமங்கலம்.

4.அ/மிகு. பக்தவச்சலப்பெருமாள் திருக்கோவில், திருநின்றவூர்.

5.அ/மிகு. மாதவப்பெருமாள் திருக்கோவில், மயிலாப்பூர்.


*திருமணத்தடைகள் நீங்க...* 


1.அ/மிகு. உத்வாகநாதசுவாமி திருக்கோவில், திருமணஞ்சேரி.

2.அ/மிகு. கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோவில், கரூர்.

3.அ/மிகு. கல்யாணவேங்கடரமணசுவாமி திருக்கோவில், தான்தோன்றிமலை.

4.அ/மிகு. கைலாசநாதர் திருக்கோவில், தாரமங்கலம்.

5.அ/மிகு. சென்னமல்லீஸ்வரர், சென்னகேசவபெருமாள் திருக்கோவில், பாரிமுனை.

6.அ/மிகு. பட்டீஸ்வரர் திருக்கோவில், பேரூர். கோவை.

7.அ/மிகு. நித்யகல்யாண பெருமாள் திருக்கோவில், திருவிடந்தை.

8.அ/மிகு. வரதராஜபெருமாள் திருக்கோவில், நல்லாத்தூர்.

9.அ/மிகு. வீழிநாதேஸ்வரர் திருக்கோவில், திருவீழிமழலை.


*தீவினைகள் அகன்றிட..* 


1.அ/மிகு. காலபைரவர் திருக்கோவில், குண்டடம்.

2.அ/மிகு. காளிகாம்பாள் திருக்கோவில், தம்புசெட்டி தெரு, சென்னை.

3.அ/மிகு. குறுங்காலீஸ்வரர் திருக்கோவில், கோயம்பேடு.

4.அ/மிகு. சரபேஸ்வரர் திருக்கோவில், திருபுவனம்.

5.அ/மிகு. சிங்காரத்தோப்பு முனீஸ்வரர் திருக்கோவில், நடுப்பட்டி, மொரப்பூர்.

6.அ/மிகு. பண்ணாரிமாரியம்மன் திருக்கோவில், பண்ணாரி.


*நிலம், வீடு, மனை அமைந்து சங்கடங்கள் தீர...* 


1.அ/மிகு. அக்னீஸ்வரர் திருக்கோவில், திருப்புகலூர்.

2.அ/மிகு. தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோவில், தீர்த்தமலை, அரூர்.

3.அ/மிகு. பூவராகசுவாமி திருக்கோவில், ஸ்ரீமுஷ்ணம்.

4.அ/மிகு. வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல். காஞ்சீபுரம்.


*நோய், நொடிகள் தீர...* 


1.அ/மிகு. இருதயாலீஸ்வரர் திருக்கோவில், திருநின்றவூர்.

2.அ/மிகு. தோரணமலை முருகன் திருக்கோவில், தோரணமலை.

3.அ/மிகு. பண்ணாரிமாரியம்மன் திருக்கோவில், பண்ணாரி.

4.அ/மிகு. மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர்.

5.அ/மிகு. வீர்ராகவர் திருக்கோவில், திருவள்ளூர்.

6.அ/மிகு. வீழிநாதேஸ்வரர் திருக்கோவில், திருவீழிமழலை.

7.அ/மிகு. வைத்தியநாதசுவாமி திருக்கோவில், மடவார் விளாகம். ஸ்ரீவில்லிப்புத்தூர்.


*பெண்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண...* 


1.அ/மிகு. தாயுமானசுவாமி திருக்கோவில், மலைக்கோட்டை, திருச்சி.

2.அ/மிகு. பாதாள பொன்னியம்மன் திருக்கோவில், கீழ்ப்பாக்கம், சென்னை.

3.அ/மிகு. மகாதேவர் திருக்கோவில், செங்கனூர்.


*முன்னோர் வழிபாட்டிற்கு..* 


1.அ/மிகு. சங்கமேஸ்வரர் திருக்கோவில், பவானி.

2.அ/மிகு. மகுடேஸ்வரர் திருக்கோவில், கொடுமுடி.

3.அ/மிகு. வரமூர்த்தீஸ்வரர் திருக்கோவில், அரன்வாயல். கவரப்பேட்டை.

4.அ/மிகு. வீர்ராகவர் திருக்கோவில், திருவள்ளூர்.

6.அ/மிகு. ராமநாதசுவாமி திருக்கோவில், ராமேஸ்வரம்.

7.அ/மிகு. திருப்பள்ளிமுக்கூடல். குருவிராமேஸ்வரம் திருக்கோவில், திருவாரூர்

8 காசி காசி விஸ்வநாதர்

9 பாபநாசம் திருநெல்வேலி மாவட்டம்

10 அ/மிகு . சொறிமுத்து அய்யனார் கோயில்

பாபநாசம் திருநெல்வேலி மாவட்டம்


அ முதல் ஃ வரை...

>>> காசியை மிஞ்சும் ஒரு கோவில் தமிழகத்தில் எங்குள்ளது தெரியுமா ?

 


இந்துக்கள் பலரும் வாழ்வில் ஒருமுறையாவது காசிக்கு செல்லவேண்டும் என்று நினைப்பதுண்டு. 


கங்கை கரை ஓரத்திலே கோவில் கொண்டு காசி விஸ்வநாதர் தன் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். அதே போல காசிக்கு நிகரான, ஏன் காசியை விட ஒரு படி அதிகம் சக்தி கொண்ட ஒரு கோவில் தமிழகத்திலும் உள்ளது. அந்த கோவில் எங்கு உள்ளது, அதன் சிறப்புகள் என்ன என்று பார்ப்போம் வாருங்கள்.


புதுச்சேரி அருகில் திருகாஞ்சி என்னும் கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரர் ஆலயம். 


காசியில் உள்ள கோவில் எப்படி கங்கை கரையோரம் அமைந்துள்ளதோ அதே போல ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரர் ஆலயம், சங்கராபரணி என்னும் நதிக்கரையில் அமைந்துள்ளது. சங்கராபரணி நதியானது கங்கை நதிக்கு நிகராக போற்றப்படுகிறது. 


இந்த நதிக்கு கிளிஞ்சியாறு, செஞ்சியாறு, வராக நதி என்று பல பெயர்கள் உண்டு. இந்த கோவில் சங்கராபரணி நதிகரியல் இருந்தாலும் இங்குள்ள இறைவன் கங்கைவராக நதீஸ்வரர் என்று அழைக்கப்படுவதில் இருந்தே நாம் சங்கராபரணி நதியானது கங்கை நதிக்கு ஒப்பானது என்று அறிந்துகொள்ளலாம் .


இந்த கோவிலில் வீற்றிருக்கும் ஐயனை வேண்டினால் பதினாறு செல்வங்களும் ஒருசேர கிடைக்கும் என்பது ஐதீகம். அதோடு பூர்வ ஜென்ம பாவ தோடங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகும் என்று கூறப்படுகிறது. 


இந்த திருத்தலத்தில் சித்தர்களின் சமாதிகள் பல இருப்பதாக குறிப்புகள் உள்ளன. இந்த ஸ்தலமானது காசிக்கு நிகராக போற்றப்படுவதற்கு பின் ஒரு புராண காலத்து கதையும் உள்ளது.


ஒரு சமயம் வேத விற்பன்னர் ஒருவர் தன்னுடைய தந்தையின் அஸ்தியை கங்கையில் கரைக்க புறப்பட்டு சென்றுள்ளார். 


போகும் வழியில் இங்குள்ள இறைவனை தரிசிக்க விரும்பிய அவர் இங்கு வந்துள்ளார். இங்கு வந்ததும் தன்னுடைய தந்தையின் அஸ்தி முழுவதும் பூக்களாய் மாறி உள்ளது. இதை கண்டு அவர் மெய் சிலிர்த்துள்ளார். 


அஸ்தியை பூக்களாக மாற்றும் சக்தி இந்த தளத்திற்கு உள்ளது என்றால் இது காசியை மிஞ்சும் வகையில் சக்தி பெற்ற ஒரு தலம் என்பதை அவர் உணர்ந்துள்ளார். அந்த சமயம் அவருக்கு, காசியில் செய்வேண்டிய பிதுர் கர்மாக்களை இங்கும் செய்யலாம் என்றொரு அசரீரி கேட்டுள்ளது.


இங்குள்ள சிவலிங்கமானது ஏறத்தாழ 3000 ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்று கூறப்படுகிறது. இந்த சிவலிங்கத்தை அகத்தியர் பிரதிஷ்டை செய்துள்ளார் என்று ஸ்தல வரலாறு கூறுகிறது.


மூலவர் மேற்கு நோக்கி அமர்ந்துள்ள இந்த தலத்தில் காமாட்சி மீனாட்சி என இரு அம்மன்கள் உள்ளனர். இங்குள்ள கருவறையானது தஞ்சை பெரிய கோவிலின் கருவறையை ஒத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கிருக்கிறது...எப்படிச் செல்வது?

பாண்டிச்சேரி - விழுப்புரம் சாலையில் வில்லியனூர் என்ற இடத்தில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருக்காஞ்சி திருத்தலம். வில்லியனூரில் இருந்து ஷேர் ஆட்டோ வசதி உண்டு.

>>> ஹோமங்களும், கிடைக்கும் நன்மைகளும்...

 1.கணபதி ஹோமம் : தடைகள் விலகும், எடுத்த காரியங்கள் வெற்றி அடையும்.

2. சண்டி ஹோமம் : பயம் போக்கும், வாழ்வில் தொடர்ந்து வரும் தரித்திரம் நீக்கும்.

3. நவகிரஹ ஹோமம் : கிரக தோஷங்கள் போக்கி மகிழ்ச்சியும், வளமும் உண்டாகும்.

4. சுதர்ஸன ஹோமம் : ஏவல் பில்லி சூனியங்கள் நீங்கும், சகல காரியங்களிலும் வெற்றி தரும்.

5. ருத்ர ஹோமம் : ஆயுள் விருத்தி உண்டாகும்.

6. மிருத்யுஞ்ச ஹோமம் : மந்தி தோஷம் போக்கும், பிரேத சாபம் நீக்கும்.

7. புத்திர கமோஷ்டி ஹோமம் : புத்திர பாக்கியத்தை உண்டாக்கும்.

8. சுயம்வர கலா பார்வதி ஹோமம் : பெண்களுக்கு திருமண தடை நீக்கி விரைவில் நடைபெறும்.

9. ஸ்ரீ காந்தர்வ ராஜ ஹோமம் : ஆண்களுக்கு திருமண தடை நீக்கி விரைவில் நடைபெறும்.

10. லக்ஷ்மி குபேர ஹோமம் : செல்வ வளம் தரும், பொருளாதார பெருக்கம் ஏற்படும்.

11. தில ஹோமம் : சனி தோஷம் போக்கும், இறந்தவர்களின் சாபங்களை நீக்கும்.

12. ஸ்ரீ ப்ரத்யங்கிரா ஹோமம் : நோய்கள் நீங்கும், எதிரிகளின் தொல்லைகள் நீங்கும்.

13. ஸ்ரீ பிரம்மஹத்தி ஹோமம் : எதிரிகளின் சூழ்ச்சிகள் தொல்லைகள் நீங்கி, வெற்றி மேல் வெற்றி உண்டாகும்.

14. கண்திருஷ்டி ஹோமம் : திருஷ்டி தோஷங்கள் விலகும், காரிய தடைகள் நீக்கும்.

15. கால சர்ப்ப ஹோமம் : திருமண தடை உத்தியோக தடை நீங்கும், வாழ்வில் சோதனைகள் நீங்கி சாதனைகள் மலரும்.

16.ஸ்ரீ ப்ரத்யங்கிரா ஹோமம்; சகல பயன்களும் போக்கி, சத்ருக்களிடம் வெற்றி பெற முடியும்.


நன்றி... திரு.மாரிமுத்து அவர்கள்...

வியாழன், 17 செப்டம்பர், 2020

சந்திராஷ்டமம்

 சந்திராஷ்டமம் : ஜோதிட சாஸ்திரத்தில் நாம் பலன்களையும் எந்தெந்த நேரங்களில் என்ன காரியங்கள் தொடங்கலாம், எந்த காலகட்டங்களை தவிர்க்க வேண்டும் போன்றவற்றையும் தெரிந்துகொள்வதற்கு பல வழிமுறைகள் உள்ளன. அந்த வகையில், காலம் காலமாக இருந்து வரும் ஒரு நடைமுறை, சந்திராஷ்டமம்..

-.

சந்திரனின் முக்கியத்துவம் : ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் பிரதானமாக இருப்பது லக்னமாகும். இதற்கு அடுத்த நிலையை பெறுவது ராசியாகும். ராசி என்பது நாம் பிறக்கும்போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ, அந்த நட்சத்திரம் அமைந்துள்ள வீட்டைக் குறிப்பதாகும்.


சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைத்தான் நாம் ராசி என்கிறோம். அதே நேரத்தில் புதன் இருக்கும் இடத்தையோ, குரு இருக்கும் இடத்தையோ நாம் ராசி என்று சொல்வதில்லை. இதில் இருந்து சந்திரனின் முக்கியத்துவத்தை நாம் தெரிந்து கொள்ளலாம்.


சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துத்தான் பிறந்தநாள் கொண்டாடுகிறோம்.-

சந்திரன் இருக்கும் நட்சத்திரம் மூலம்தான் திருமணப் பொருத்தம் பார்க்கிறோம்.

சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துத்தான் ஒருவருக்கு முதல் தசை எது என்று கணிக்கிறோம்.

சந்திரன் இருக்கும் ராசிப்படிதான் கோச்சார பலன்களைப் பார்க்கிறோம்.

சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை சொல்லித்தான் கோயிலில் அர்ச்சனை, வழிபாடுகள் செய்கிறோம்.

இத்தகைய முக்கியத்துவம் பெற்ற சந்திரன் மூலம் நமக்கு யோகங்கள், அவயோகங்கள், தடைகள் ஏற்படுகின்றன. அந்த வகையான இடையூறுகளில் ஒவ்வொரு மாதமும் சந்திரனால் ஏற்படும் தோஷங்களில் ‘சந்திராஷ்டமம்’ ஒன்று.


சந்திராஷ்டமம் – நீங்கள் பிறந்த ராசிக்கு எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தில் சந்திரன் வருமானால், அதையே சந்திராஷ்டமம் என்கிறோம். சந்திரன்+அஷ்டமம்= சந்திராஷ்டமம். சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான் ‘சந்திராஷ்டம’ காலம் என்கிறோம். அதிலும் குறிப்பாக நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டமம் ஆகும்.


பொதுவாக எட்டாம் இடம் என்பது சில தடைகள், மனச்சங்கடங்கள், இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும். மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர் பார்வையாக தனம், குடும்பம், வாக்குஸ்தானமான இரண்டாம் இடத்தை பார்ப்பதால் அந்த ஸ்தான அமைப்புகளும் பாதிப்படைகின்றன.


ஆகையால் இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுபகாரியங்களை செய்ய மாட்டார்கள். மணமகன், மணமகள் ஆகிய இருவருக்கும் சந்திராஷ்டம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் வைப்பார்கள். பால் காய்ச்சுதல், கிரகப் பிரவேசம், வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கும் சந்திராஷ்டமத்தை தவிர்த்து விடுவார்கள்.

புதிய முயற்சிகள் செய்ய மாட்டார்கள், புதிய ஒப்பந்தங்களை தவிர்த்து விடுவார்கள். முக்கிய பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட மாட்டார்கள். குடும்ப விஷயங்களை யும் பேச மாட்டார்கள். ஏனென்றால் சந்திராஷ்டம தினத்தன்று சந்திரனால் நம் மனதில் சில மாற்றங்கள் உண்டாகின்றன.


எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுகின்றன ஏனென்றால் சந்திரன் மனோகாரகன், மனதை ஆள்பவன். ஆகையால் நம் எண்ணங்களிலும் கருத்துகளிலும் நிதானமற்ற நிலை உண்டாகும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சந்திரன் ஜெனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைந்து இருந்தாலும் உச்சம், ஆட்சி, நீச்சம் போன்ற அமைப்புகளில் இருந்தாலும் சந்திராஷ்டமத்தால் கெடு பலன்கள் ஏற்படுவதில்லை என சில ஜோதிட நூல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சந்திரன் இருக்கும் இடம் சந்திரன் தினக்கோள் ஆகும். வேகமாக சுற்றும் இந்த கிரகம் முப்பது நாட்களில் (ஒரு மாதத்தில்) 12 ராசிகளை கடந்துவிடும். இப்படி கடக்கும்போது தினசரி சந்திரன் இருக்கும் இடத்தை பொறுத்து நம் குணாதிசயங்கள் வேறுபடுகிறது, அதே நேரத்தில் லாப-நஷ்டங்கள், நிறை-குறைகள் ஏற்படுகின்றன. நம் ராசிக்கு சந்திரன் எங்கெங்கு வரும்போது என்னென்ன பலன்கள் ஏற்படும்?


சந்திரன் நாம் பிறந்த ராசியில் இருக்கும்போது: மனம் அலை பாயும், சிந்தனை அதிகரிக்கும். ஞாபக மறதி உண்டாகலாம்.


இரண்டாம் இடத்தில் இருக்கும்போது: பணவரவுக்கு வாய்ப்புண்டு. பேச்சில் நளினமிருக்கும். கவிஞர்களுக்கு கற்பனை வ ளம் மிகும்.


மூன்றாம் இடத்தில் இருக்கும்போது: சமயோசிதமாக செயல்படுதல், சகோதர ஆதரவு, அவசிய செலவுகள். நான்காம் இடத்தில் இருக்கும்போது: பயணங்கள், மனமகிழ்ச்சி, உற்சாகம், தாய்வழி ஆதரவு.


ஐந்தாம் இடத்தில் இருக்கும்போது: ஆன்மிக பயணங்கள், தெய்வ பக்தி, நல்ல எண்ணங்கள், தெளிந்த மனம். தாய் மாமன் ஆதரவு.


ஆறாம் இடத்தில் இருக்கும்போது: கோபதாபங்கள், எரிச்சல், டென்ஷன். வீண் விரயங்கள். மறதி, நஷ்டங்கள்.


ஏழாம் இடத்தில் இருக்கும்போது: காதல் நளினங்கள், பயணங்கள், சுற்றுலாக்கள், குதூகலம். பெண்களால் லாபம், மகிழ்ச்சி.


எட்டாம் இடத்தில் இருக்கும்போது: இதைத்தான் சந்திராஷ்டமம் என்று சொல்கிறோம். இந்நாளில் மௌனம் காத்தல் நல்லது. தியானம் மேற்கொள்ளலாம். கோயிலுக்குச் சென்று வரலாம்.


ஒன்பதாம் இடத்தில் இருக்கும்போது: காரிய வெற்றி, சுபசெய்தி, ஆலய தரிசனம்.


பத்தாம் இடத்தில் இருக்கும்போது: பயணங்கள், நிறை-குறைகள், பண வரவு, அலைச்சல், உடல் உபாதைகள்.


பதினொன்றாம் இடத்தில் இருக்கும்போது: தொட்டது துலங்கும், பொருள் சேர்க்கை, மூத்த சகோதரரால் உதவி, மன அமைதி, தரும சிந்தனை.


பன்னிரண்டாம் இடத்தில் இருக்கும்போது: வீண் விரயங்கள், டென்ஷன், மறதி, கைப்பொருள் இழப்பு, உடல் உபாதைகள்.


17ம் நட்சத்திரத்துக்கு வரும் சந்திரன் உங்களுக்குரிய சந்திராஷ்டம நாட்களை எளிதில் அறிந்துகொள்ள உதவும் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


உங்கள் நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் வரும் நாளே, சந்திராஷ்டம தினமாகும். உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம நட்சத்திரம் தரப்பட்டுள்ளது. அந்தக் குறிப்பிட்ட நட்சத்திர நாளில் நிதானமாகவும் கவனமாகவும் இருப்பது நலம் தரும்.


பிறந்த நட்சத்திரம் இது என்றால், – சந்திராஷ்டமம் வரும் நட்சத்திர நாள் இதுதான்…

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு – அனுஷ நட்சத்திரம் வரும் நாளில் சந்திராஷ்டமம்… என்பது போல் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்..!


அஸ்வினி – அனுஷம்

பரணி  -கேட்டை

கிருத்திகை – மூலம்

ரோகிணி – பூராடம்

மிருகசீரிஷம் – உத்திராடம்

திருவாதிரை திருவோணம்

புனர்பூசம் அவிட்டம்

பூசம் சதயம்

ஆயில்யம் பூரட்டாதி

மகம் உத்திரட்டாதி

பூரம் ரேவதி

உத்திரம் அஸ்வினி

அஸ்தம் பரணி

சித்திரை கிருத்திகை

சுவாதி ரோகிணி

விசாகம் மிருகசீரிஷம்

அனுஷம் திருவாதிரை

கேட்டை புனர்பூசம்

மூலம் பூசம்

பூராடம் ஆயில்யம்

உத்திராடம் மகம்

திருவோணம் பூரம்

அவிட்டம் உத்திரம்

சதயம் அஸ்தம்

பூரட்டாதி சித்திரை

உத்திரட்டாதி சுவாதி

ரேவதி விசாகம்


சந்திராஷ்டமம் சஞ்சாரத்தில் சேரும் கோள்களாலும் மாறுபடுவதுண்டு. பாவியான 12 ம் அதிபதியானால் நஷ்டமும், 4, 8,12 அதிபதி சேர்கையானால் விபத்தும் 2, 11,6 அதிபதி சேர்க்கை பார்வையுடன் சஞ்சாரம் இருக்குமானால் அதிர்ஷ்டமாகவும் மாறுவதுண்டு. 8மிடம் ஒரு கொதிகலன் போல. நன்மையோ தீமையோ அபரிதமாக கிடைக்கும் இடம். இந்த கிரஹ சேர்க்கை எந்த ராசியில் வேண்டுமானாலும் நடக்கலாம்.

புதன், 16 செப்டம்பர், 2020

ஆரோக்கியத்தை தரும் தன்வந்திரி ஸ்லோகம்....!

 


நோயற்ற வாழ்க்கையை வாழும் மனிதன் மட்டுமே உண்மையில் பணக்காரன் என்பது அனுபவ மொழியாகும். ஒரு மனிதன் தள்ளாத வயதிலும் உடலில் எத்தகைய நோய் நொடிகளும் இல்லாமல் வாழ்வது என்பது ஒரு வரப்பிரசாதமாகும். 

இன்றைய காலகட்டத்தில் நாம் எந்த வகையான நோய்களாலும் பாதிக்கப்படாமல் இருந்தாலே அது  சாதனையாக இருக்கிறது. ஏற்கனவே  ஏதேனும் நோய் பாதிப்புகள் கொண்டவர்களும், புதிதாக நோய்கள் உண்டாகாமல் இருக்க கூற வேண்டிய தன்வந்திரி பகவான் ஸ்லோகம் இது.

தன்வந்திரி ஸ்லோகம்:

"சதுர்புஜம் பீத வஸ்திரம்

ஸர்வாலங்கார சோபிதம்

த்யோயேத் தன்வந்த்ரிம்

தேவம் ஸுராஸுர நமஸ்க்ருதம்."

ஸ்ரீ தன்வந்த்ரி பகவானுக்குரிய இம்மந்திரத்தை தினமும் காலை, மதியம், மாலை மற்றும் இரவு வேளைகளில் 27 முறை கூறி தன்வந்திரி  பகவானை வணங்க வேண்டும். மேலும் காலை சூரிய உதயத்தின் போது தன்வந்திரி பகவானை மனதில் எண்ணி இம்மந்திரத்தை கூறி  வழிபட்டு வருவதால் நீங்கள் எத்தகைய நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால் அதன் கடுமை தன்மை குறையும். ஒரு சிலருக்கு அந்த நோய் முற்றிலும் நீங்க கூடிய நிலையையும் ஏற்படுத்துவார் ஸ்ரீ தன்வந்த்ரி பகவான்.

புராணங்களின் படி இறவா தன்மையை கொடுக்கும் தேவாமிர்தத்தை பெற தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தனர். அப்போது அக்கடலிலிருந்து அனைத்து உயிர்களுக்கும் நன்மை அளிக்கும் பல விடயங்கள் வெளிவந்தன. அந்த வகையில் மகாவிஷ்ணுவின் அம்சமாக ஸ்ரீ  தன்வந்திரி பகவான் மனித குலத்தின் பல நோய்களை போக்கும் அமிர்த கலசத்துடன் வெளிவந்தார். மேலும் நம் நாட்டின் பாரம்பரிய  மருத்துவ முறையான ஆயுர்வேதம் மருத்துவத்தை மனிதர்களுக்கு அளித்தவராகவும் கருத படுகிறார் தன்வந்த்ரி பகவான்.

மகப்பேறு அருளும் மகத்தான தலம்! திருவாலங்காடு ஸ்ரீ புத்திரகாமேஸ்வரர் ஆலயம்...

திருவாலங்காடு ஸ்ரீ புத்திரகாமேஸ்வரர் ஆலயம்






மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றாலும் சிறப்புடைய திருத்தலங்களில் திருவாலங்காடு ஸ்ரீவடாரண்யேசுவரர் கோயிலும் ஒன்று. இத்தலத்துப் பெருமான் வண்டார்குழலி சமேத வடாரண்யேசுவரர் என்றும் ஆலங்காட்டீசர் என்றும் அழைக்கப்படுகிறார்.   புத்திரப்பேறு அருளும் ஸ்ரீ புத்திரகாமேஸ்வரர் எழுந்தருளியுள்ள இக்கோயில் புராணச் சிறப்பும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைமையும் கொண்டது.  இக்கோயிலின் தலபுராணச் சிறப்பை திருவாவடுதுறை மகா வித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இயற்றிய திருத்துருத்திப் புராணத்தில் திருவாலங்காட்டுப் படலத்தில் காணலாம்.  

ஸ்ரீ புத்திரகாமேஸ்வரர்

பரதன் என்ற அந்தணரும், அவரது மனைவியும் புத்திரப்பேறு இல்லாமல் வருந்தி, சிவபெருமானை வேண்டி, கடும் தவம் புரிந்தனர். சிவபெருமான் அசரீரியாக, “நீங்கள் இருவரும் திருவாலங்காடு தலத்தை அடைந்து புத்திரகாமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி, புத்திரகாமேஸ்வரரையும் ஆலங்காட்டீசரையும் வழிபட்டால் உங்களுக்குக் குழந்தைப்பேறு கிடைக்கும்” என்று அருளினார். அதன்படி பரதனும் அவர் மனைவியும் திருவாலங்காடு வந்து வணங்கி, பெண் குழந்தையைப் பெற்று எண்ணிய செல்வமெல்லாம் அடைந்து இன்புற்று வாழ்ந்தனர்.  அதுபோல், இத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவண்டார்குழலி அம்பிகையிடம், சிறகை இழந்த பருந்து ஒன்று அடைக்கலமானது.  அதன்மேல் கருணை கொண்ட அம்பிகை அந்தப் பருந்தின் உருவத்தை திருமகள் போல் எழில்மிகு பெண்ணாக மாற்றி அருளினார் என்கிறது தலபுராணம்.  

திருவாவடுதுறை ஆதீன கட்டுப்பாட்டிலுள்ள இந்தத் தலத்து இறைவன் மீது மிகுந்த பக்தி கொண்டவன் மூன்றாம் குலோத்துங்கச் சோழன்.  தனது தலையில் இந்தத் தலத்து இறைவனின் திருவடிகளைச் சூடிக்கொண்டதற்கு ஆதாரமாக இந்தக் கோயிலில் குலோத்துங்கச் சோழனின் உருவச்சிலை அமைந்திருக்கிறது.  

“குழந்தைப்பேறு வேண்டுகின்ற தம்பதியர் இந்தக் கோயிலுக்கு காலையில் வந்து புத்திரகாமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி, மூலவர் ஆலங்காட்டீசரை வணங்க வேண்டும்.  பின்னர், மேற்கு திசை நோக்கி தனிச் சந்நிதி கொண்டு அருள்பாலிக்கும் புத்திரகாமேஸ்வரர் சந்நிதிக்கு வந்து தங்கள் பெயர், நட்சத்திரம், ராசி முதலியவற்றை சிவாசார்யாரிடம் சொல்லி சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும்.  அவர், இறைவனுக்கு அர்ச்சனை செய்து இரு மலர் மாலைகளைத் தருவார்.  அதனைத் தம்பதி அணிந்து கொண்டு, தொழுத கைகளுடன் புத்திரகாமேஸ்வரரை ஐந்து முறை வலம் வந்து, அம்மனை தரிசித்து, புத்திரகாமேஸ்வரரை மனதுக்குள் தியானம் செய்து அமைதியுடன் இல்லத்திற்குத் திரும்பினால் புத்திரப்பேறு உறுதி.  

அதுபோல் ஆண்டுதோறும் பங்குனி மாத அமாவாசை நாளில் புத்திரகாமேஸ்வரர் சந்நிதியில் சிறப்பு ஹோமம் நடைபெறும். இவ்வழிபாட்டில் புத்திர பாக்கியம் வேண்டுகின்ற தம்பதியர் வருகை தந்து வேண்டினால், வேண்டிய பலன் கிடைக்கும்.  

நீங்காத காய்ச்சல் உள்ளவர்களும், விட்டு விட்டு ஜுரம் வருபவர்களும் இந்தக் கோயிலின் தெற்கு பிராகாரத்தில் அருள்பாலிக்கும் ஜுரஹரேஸ்வரர் பெருமானிடம் தங்கள் பிரார்த்தனையை முறையிட்டு அர்ச்சனை செய்து வணங்கினால் காய்ச்சல் விலகி பூரண நலம்பெறுவர் என்பது ஐதீகம்.   நீண்ட ஆயுள் வேண்டுவோரும், ஜாதகத்தில் ஆயுள் கண்டம் உள்ளவர்களும் இந்தக் கோயிலுக்கு வந்து மூலவரைத் தொழுது, தெற்குப் பிராகாரத்தில் எழுந்தருளியிருக்கும் யமதர்ம ராஜனிடம் அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தால் ஆயுள் பலம் அதிகரிக்கும்.  கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடவும், கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவம் நடைபெறவும் இந்தக் கோயிலின் ஆடிப்பூர வளையலணி திருவிழாவில் கலந்து கொண்டு வணங்கினால் சகல ஐஸ்வர்யங்களும் பெற்று மங்கள வாழ்வு பெறுவர்.  

சனி பகவானின் மகன் மாந்தி தனிச் சந்நிதி கொண்டு சுபகிரகமாக அருள்புரிவது இந்தத் தலத்தின் சிறப்பம்சமாகும்.  மாந்திக்கு தோஷப் பரிகாரம் செய்ய விரும்புவோர், பருத்திக் கொட்டையை தரையில் பரப்பி, அதன்மேல் நல்லெண்ணெய் இட்டு பஞ்ச தீபம் ஏற்றி, மனமுருக பிரார்த்தனை செய்ய வேண்டும்.  இந்தப் பரிகாரம் ஒவ்வொரு சனிக்கிழமையும் ராகுகாலத்தில் (காலை 9.00-10.30) அபிஷேக ஆராதனையுடன் நடைபெறுகிறது.  இந்த மங்கள மாந்தியை வழிபடுவோர் திருமணத் தடை, வியாபாரத் தடை, உத்தியோகத் தடை, குடும்பச் சண்டை சச்சரவுகள் யாவும் நீங்கி வளம்பெறுவர்.  

இந்தத் தலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நடராஜ பெருமான் திருவுருவம் சிறப்புடையது.  இம்மூர்த்தியின் பீடத்தில் திருமால் பஞ்சமுக வாத்தியம் வாசிப்பதாக அமைந்துள்ளது.  இரட்டை விநாயகர், பாதாள நந்தி இந்தத் தலத்திற்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்திருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் பங்குனிப் பெருவிழா, பங்குனி அமாவாசை, ஆடிப்பூர சிறப்பு வழிபாடு ஆகியன திருவிழாக்களாக நடைபெற்று வருகின்றன” என்று இந்தக் கோயிலின் சிறப்புப் பற்றி 90 வயது பெரியவர் சாமிநாத குருக்கள் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

மயிலாடுதுறை - கும்பகோணம் பேருந்து மார்க்கத்தில் 17 கி.மீ. தொலைவிலும், ரயில் மார்க்கமாக குத்தாலம் ரயில் நிலையத்திலிருந்து மேற்கே 5 கி.மீ. தொலைவிலும் இக்கோயில் அமைந்துள்ளது.

உங்களின் நோயை குறி காட்டும் வைனாசிக நட்சத்திரம்

முதலில் உங்கள் ஜென்ம நட்சத்திரம் எது என்பதை குறித்து கொள்ளுங்கள்.


அந்த  ஜென்ம நட்சத்திரம் முதல் எண்ணி வரும் 22 வது நட்சத்திரம் வைனாசிகம் நட்சத்திரம் என்பதை அறிக...


இன்னும் தெளிவாக ஒருவருக்கு நோய் வருவது 22 வது நட்சத்திரத்தின் மூலமாகத்தான் என்பதனை மனதில் வைக்க.


வைநாசிகம் என்பது பிறந்த நட்சத்திரத்திலிருந்து 22 வது நட்சத்திரம் மேலும் 88 வது பாதம் . சிலருக்கு இது 23 நட்சத்திரத்திலும் வரும், [ விளக்கம் கீழே உள்ளது ] 


வைனாசிகம் என்பது நமது உடலை வதைப்பது என்று பொருள் ஆகும்.


நமக்கு நோய் ஏற்படுத்துவது என்றும் பொருள் கொள்க.


வைனாசிக நட்சத்திரத்தில் எந்த கிரகம் இருக்கிறதோ அந்த கிரக தசா புத்திகளில் நமது உடல் நலம் பாதிப்பு அடையும்.


வைனாசிக நட்சத்திர அதிபதியின் தசா புத்தி காலமும் உடல் நல கோளாறுகளை கொண்டு வந்து சேர்க்கும்.


இதை கோச்சார கிரக இணைவுகளோடு பொருத்தி பார்த்தால் என்ன மாதிரியான உடல் நல கோளாறு வரும் என்பதை சரியாக கண்டறிய முடியும்.


மாதம் தோறும் வரும் வைனாசிக நட்சத்திரம் அன்று மருத்துவம் சம்பந்தப்பட்ட எந்த விஷயம் செய்தாலும் அது நல்ல பலனை தருவது இல்லை.


அதன் அனு ஜென்ம, திரிஜென்ம நட்சத்திரத்தையும் மருத்துவ விஷயங்களுக்கு தவிர்த்தல் நல்லது.


பண்டைய  நூல்களில் 22 ஆவது நட்சத்திரத்தின்  4-ம் பாதம் மட்டுமே வைநாசிக தோஷத்தை செய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


அதாவது 88-ம் பாதம்(22-ம் நட்சத்திரத்தின் நான்காம் பாதம் மட்டுமே).


 எந்த நட்சத்திரமாக இருந்தாலும் 1-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கே வைநாசிக தோஷம் வரும் என்றும் சொல்ல கேட்டதுண்டு.


 ஏன் எனில் 2,3,4 பாதங்களில் பிறந்தால் 88 ஆவது பாதம் 23 ஆவது நட்சத்திரத்தில் விழுந்து விடும்.


எனவே உங்கள் ஜனன நட்சத்திரம்  1-ம் பாதத்தில் இருந்தால்  மட்டுமே வைநாசிக தோஷம் எனவும் 


2,3,4 ம் பாதத்தில் பிறந்தவர்கள் வைநாசிக தோஷத்தை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்ற கூற்றும் உண்டு.


ஓர் ஆண் நட்சத்திரத்திற்கு 22வது நட்சத்திரம் வைநாசிக நட்சத்திரம் பெண்ணை இணைக்க கூடாது என்பதும் ஒரு ஜோதிட விதி.  


பெரும்பாலும் இந்த 22 வது நட்சத்திர நபருடன் நமது மணவாழ்க்கை/காதல்/ நட்பு/ உறவு பாதிவழியில் முடிந்துவிடுகிறது.


ஒருவருடைய ஜன்ம நட்சத்திரத்திற்கு 22 வது நட்த்திரமாக அவருடைய வாழ்க்கைத் துணையின் நட்சத்திரங்களாக இருந்தால்  குடும்ப வாழ்க்கை நோய் நொடி என பல போராட்டங்கள் நிறைந்தாக இருக்கும்!!!


பெண்ணின் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து 4-வது நட்சத்திரம் ஷேம நட்சத்திரமாக வருவதால்  அது ஆணின் ஜென்ம நட்சத்திரமாக இருக்க பொருத்தம் உண்டு. 


ஆனால் அந்த ஷேம நட்சத்திரத்தின் திரிஜென்மமாக வரும் 22-வது நட்சத்திரம் வைநாசிகம் என்பதால் பொருந்தாது என்பது மற்றொரு விதி.


இதில் அந்த 22-வது நட்சத்திரத்தில் (சில சமயங்களில் 23-வது நட்சத்திரத்தில்) அமையும் 88-வது பாதம் மரண பாதம் என்பதால் அது ஆணின் ஜென்ம நட்சத்திரமாக அமையக்கூடாது என்பது குறிப்பான விதி.


மொத்தத்தில்  திசை நடத்தும் கிரகம் தான் நின்ற நட்சத்திரத்திலிருந்து 7-வது நட்சத்திரமான வதை நட்சத்திரத்தில் ஒரு கிரகம் நின்று புத்தி நடத்தினால் அந்த புத்தி நல்ல  பலன்கள் தராது.


ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் அதன் 22வது நட்சத்திரம் வைநாசிக நட்சத்திரமாகும்!


அசுவினிக்கு- திருவோணமும்


பரணிக்கு- அவிட்டமும்


கார்த்திகைக்கு- சதயமும்


ரோகிணிக்கு - பூரட்டாதியும்


மிருகசிரீடத்திற்கு - உத்திரட்டாதியும்


திருவாதிரைக்கு - ரேவதியும்


புணர்பூசத்திற்கு - அசுவினியும்


பூசத்திற்கு - பரணியும்


ஆயில்யத்திற்கு - கார்த்திகையும்


மகத்திற்கு - ரோகிணியும்


பூரத்திற்கு- மிருகசீரீடமும்


உத்திரத்திற்கு - திருவாதிரையும்


அஸ்தத்திற்கு - புணர்பூசமும்


சித்திரைக்கு - பூசமும்


சுவாதிக்கு -ஆயில்யமும்


விசாகத்திற்கு- மகமும்


அனுசத்திற்கு - பூரமும்


கேட்டைக்கு - உத்திரமும்


மூலத்திற்கு - அஸ்தமும்


பூராடத்திற்கு - சித்திரையும்


உத்திராடத்திற்கு - சுவாதியும்


திருவோணத்திற்கு - விசாகமும்


அவிட்டத்திற்கு - அனுஷமும்


சதயத்திற்கு - கேட்டையும்


பூரட்டாதிக்கு - மூலமும்


உத்திரட்டாதிக்கு  - பூராடமும்


ரேவதிக்கு - உத்திராடமும்


வைநாசிக நட்சத்திரஙகளாகும்!


நிறைய போட்டு குழம்பி கொள்ளாமல் மேலே எளிய அட்டவணை தந்திருக்கிறேன்.


அதை பயன்படுத்துங்கள்.


அந்த குறிப்பிட்ட நட்சத்திரம் அன்றும், அதன் தசா புத்தி காலங்களிலும், உடல் நிலையில் மிகுந்த அக்கறை எடுத்து கொள்ளுங்கள்.


நோய் இல்லாமல் நலமோடு வாழுங்கள்.

ஜாதகங்களில் யோகம் ஏன் நடைமுறைக்கு வரவில்லை?

பலருக்கு பல யோகங்கள் ஜாதகங்களில் பரவிக் கிடக்கின்றன.

ஆனால் ஒரு யோகமும் வேலை செய்ய வில்லை ஏன்??

யோகம் யோகம் என்று சொல்லியே ஒருவனை யோகமற்றவனாக்கி விடுகிறதே என்று அங்கலாய்க்கின்ற

னர்.அவதிப்படுகின்றனர்.

தர்மகர்மாதிபதி யோகம் , குருச்சந்திரயோகம், கஜகேசரி யோகம், குரு மங்கலயோகம், சந்திர மங்கள யோகம் ,அஷ்டலட்சுமியோகம், பர்வதயோகம், புஷ்பமாலிகா யோகம் இப்படி பலயோகங்கள் ஒரே ஜாதகத்தில் இருந்தும் ஒரு யோகமும் தரவில்லையே? நாம் குண்டுச்சட்டிக்குள் இன்னும் குதிரையோட்டுகிறோமே எனக் கோபப்படுகின்றனர். அதற்கும் காரணம் ஜாதகத்திலேயே பரவிக் கிடக்கின்றன.

1.முதலில் ஜாதகத்தில் யோக கிரகதிசை இன்னும் வரவில்லை

2.யோக கிரகம் ஜாதகத்தில் வலிமை குன்றி தன் சக்தியை இழந்திருக்கும்

3.அஸ்தமனம் ஆன கிரகம் பலன் தராது.

4.நீசம் மற்றும் வக்கிரம் பெற்ற கிரகங்கள் ஜாதத்திலேயே வலுப்பெற்றுள்ளதா என ஆய்வு தேவை.

5.யோககிரகங்கள் யுத்த கிரகங்களில் சிக்கி வலுவின்றிப் போகக்கூடாது.

6.யோகம் தரும் நிலை பெற்ற கிரகம் பகை கிரக சேர்க்கை பார்வையில் சிக்கக் கூடாது.

7.யோக கிரகம் பாப கர்த்தாரியில் சிக்கி அவஸ்தையாகக் கூடாது.

8.யோக கிரகம் பகைசாரம் கூடாது.

9.யோக கிரகம் 6, 8, 12ல் மறைவானாலும் தனக்குக் கிடைக்கும் யோகம் சார்ந்தவர்களை நோக்கிச் செல்லும்.ஜாதகருக்கு இல்லை

10.யோக கிரகங்கள் திதி சூன்ய ராசிகளில் நின்றாலும், கிரகமே திதி சூன்யம் பெற்றாலும் பலன் தருவது சிரமம்.

திங்கள், 14 செப்டம்பர், 2020

நட்சத்திர தாரை

சுபகாரியங்களை செய்யும் முன் நாள் பார்க்கும் போது நட்சத்திர தாரையையும் பார்த்து செய்தல் உத்தமம் ஆகும்.

வேலைக்காக செல்லும் போதும், புதிய பொருட்களை வாங்கும் போதும்( வண்டி, வீடு, நிலம் போன்றவை ) தொழில் துவங்குவது போன்ற காரியங்களுக்கும் பார்க்க வேண்டும்.

உங்கள் பிறந்த நட்சத்திரம் முதல் அன்றைய நட்சத்திரம் வரை எண்ணி வந்து (ஜாதகரின் நட்சத்திரம் அஸ்வினி, அன்றைய நட்சத்திரம் பூரம் என்றால் 11÷9 =2 மீதம்.

இதில் 0,2,4,6,8 வந்தால் உத்தமம்

1,3,5,7 வந்தால் அதமம்

1 வந்தால் - ஜென்ம தாரை - உடல் நலிவு, விரையம்.
3 வந்தால் - விபத்து தாரை - வாகன விபத்து, விரையம்.
5 வந்தால் - பிரத்யக் தாரை - எல்லாவற்றிலும் தடை.
7 வந்தால் - வதை தாரை - அழிவு, பணகஷ்டம்.

0 வந்தால் - பரமமைத்ர தாரை - லாபம்.
2 வந்தால் - சம்பத்து தாரை - அதிர்ஷ்டம் ( தொழில் தொடங்கினால் விருத்தி)
4 வந்தால் - ஷேம தாரை - தன விருத்தி, செழிப்பு.
6 வந்தால் - சாதக தாரை - பிறர் உதவி கிடைக்கும்.
8 வந்தால் - மைத்ர தாரை - சொத்து, சுகம், மகிழ்ச்சி கிடைக்கும்.

இதில் ஒற்றைபடை யில் வந்தால் செய்யகூடாது,

தவிர்க்க முடியாமல் வந்தால் பரிகாரம்.

1 வந்தால் வாழைக்காய் தானம்.
3 வந்தால் பழம் ( ஏதேனும்) தானம்.
5 வந்தால் உப்பு தானம்.
7 வந்தால் எள் தானம்.
செய்த பின் அந்த காரியங்களை செய்யலாம்.

நட்சத்திர வரிசை தெரியாதவர்களுக்கு
அஸ்வினி
பரணி
கிருத்திகை
ரோஹிணி
மிருகசீரிடம்
திருவாதிரை
புனர்பூசம்
பூசம்
ஆயில்யம்
மகம்
பூரம்
உத்திரம்
ஹஸ்தம்
சித்திரை
ஸ்வாதி
விசாகம்
அனுசம்
கேட்டை
மூலம்
பூராடம்
உத்திராடம்
திருவோணம்
அவிட்டம்
சதயம்
பூரட்டாதி
உத்திரட்டாதி
ரேவதி

சம்பத்துதாரை உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு இரண்டாவது நட்சத்திரம் சம்பத்து தாரை...

இந்த சம்பத்து தாரையில்தான் அதிகமான வருமானம் வரும் இனிமையான செய்திகள் வரும்...எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும்...கேட்கும் உதவிகள் கிடைக்கும்...இதை தெரிந்து கொண்டால் இதை கடைபிடித்தால் நீங்கள் வெற்றிகரமான மனிதர் ஆகிவிடுவீர்கள் .


உங்கள் நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரமானசம்பத்து நட்சத்திர நாளில் செய்யப்படும் அனைத்து காரியங்களும் 100சதவிகிதம் வெற்றியைத் தந்தே தீரும் என்பது சத்தியம்.

இதை எப்படி அறிந்துகொள்வது?
உங்கள் நட்சத்திரத்திற்கான சம்பத்து தாரை நட்சத்திரங்கள் எவை என்பதைப் பார்ப்போம்.

அஸ்வினி:- இதற்கான சம்பத்து நட்சத்திரங்கள்
பரணி, பூரம், பூராடம்

பரணி :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
கார்த்திகை, உத்திரம்,உத்திராடம்

கார்த்திகை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
ரோகிணி, அஸ்தம்,திருவோணம்

ரோகிணி:- இதன் சம்பத்து நட்சத்திரம்
மிருகசீரிடம்,சித்திரை,அவிட்டம்

மிருகசீரிடம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
திருவாதிரை, சுவாதி,சதயம்

திருவாதிரை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி

புனர்பூசம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
பூசம், அனுசம்,உத்திரட்டாதி

பூசம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
ஆயில்யம்,கேட்டை,ரேவதி

ஆயில்யம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
மகம், மூலம்,அசுவினி

மகம் :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
பூரம்,பூராடம்,பரணி

பூரம் :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
உத்திரம், உத்திராடம்,கார்த்திகை

உத்திரம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
அஸ்தம்,திருவோணம்,ரோகிணி

அஸ்தம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
சித்திரை, அவிட்டம், மிருகசீரிடம்

சித்திரை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
சுவாதி,சதயம்,திருவாதிரை

சுவாதி :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
விசாகம், பூரட்டாதி, புனர்பூசம்

விசாகம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
அனுசம்,உத்திரட்டாதி, பூசம்

அனுசம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
கேட்டை,ரேவதி,ஆயில்யம்

கேட்டை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
மூலம், அசுவினி,மகம்

மூலம் :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
பூராடம்,பரணி,பூரம்

பூராடம் :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
உத்திராடம், கார்த்திகை, உத்திரம்

உத்திராடம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
திருவோணம், ரோகிணி,அஸ்தம்

திருவோணம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
அவிட்டம்,மிருகசீரிடம்,சித்திரை

அவிட்டம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
சதயம்,திருவாதிரை,சுவாதி

சதயம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
பூரட்டாதி, புணர்பூசம், விசாகம்

பூரட்டாதி:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
உத்திரட்டாதி, பூசம், அனுசம்

உத்திரட்டாதி:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
ரேவதி,ஆயில்யம்,கேட்டை

ரேவதி :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
அசுவினி,மகம்,மூலம்

இது மட்டுமில்லாமல் உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு நான்காவது நட்சத்திரம் சேமதாரையாகும்...
4,13,22 வதாக வரும் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உங்களுக்கு நல்ல நண்பர்களாக திகழ்வார்கள் அவர்களால் உங்கள் வாழ்வில் உயர்வும் உண்டாகும்..
நான்காவது நட்சத்திரத்துக்கு உண்டான சின்னங்களை பயன்படுத்துவதால் தொழிலில் மேன்மை அடைய முடியும்..

நட்சத்திர குறியீடுகள்:

1. அஸ்வினி நட்சத்திரத்துக்கு குதிரைத் தலை அல்லது குதிரை உருவம்.

2. பரணிக்கு மண் பாத்திரம், அடுப்பு அல்லது முக்கோண வடிவம்

3. கிருத்திகை நட்சத்திரத்துக்கு கத்தி, வாள் மற்றும் ஹோம தீ ஜூவாலை

4. ரோகிணிக்கு தேர், வண்டி, கோவில், ஆலமரம் மற்றும் சக்கரம்

5. மிருகசீரிஷம் நட்சத்திரத்துக்கு மான் தலை மற்றும் தேங்காயின் கண்

6. திருவாதிரை நட்சத்திரத்துக்கான குறியீடு மனித தலை, வைரம் மற்றும் நீர்த்துளி

7. புனர்பூசம் நட்சத்திர சின்னம் வில் மற்றும் அம்புக்கூடு

8. பூசம் நட்சத்திரத்துக்கு தாமரை, புடலம் பூ, அம்பு மற்றும் பசுவின் மடி

9. ஆயில்யத்துக்கு சர்ப்பம் மற்றும் அம்மி ஆகியவை.

10. மகம் நட்சத்திரத்துக்கு வீடு, பல்லக்கு மற்றும் நுகம்

11. பூரம் நட்சத்திரத்துக்கு கட்டிலின் இரு கால்கள், சங்கு மற்றும் மெத்தை

12. உத்திரம் நட்சத்திர குறியீடுகள் கட்டில் கால்கள் மற்றும் மெத்தை

13. ஹஸ்தம் நட்சத்திரத்துக்கு கைகள் அல்லது உள்ளங்கை

14. சித்திரைக்கு முத்து மற்றும் ஒளி பொருந்திய ரத்தினக் கற்கள்.

15. சுவாதிக்கு புல்லின் நுனி மற்றும் காற்றில் அசையும் தீபச்சுடர்

16. விசாகத்துக்கு முறம், தோரணம் மற்றும் பானை செய்யும் சக்கரம்

17. அனுஷம் நட்சத்திரத்துக்கு குடை, மலரும் தாமரை மற்றும் வில் வளைவு

18. கேட்டைக்கு குடை, குண்டலம் மற்றும் ஈட்டி

19. மூலம் நட்சத்திரத்துக்கு அங்குசம், சிங்கத்தின் வால் மற்றும் யானை தும்பிக்கை

20. பூராடம் நட்சத்திரத்துக்கு விசிறி, முறம் மற்றும் கட்டில் கால்கள்21. உத்திராடம் நட்சத்திரத்துக்கு யானை தந்தம், மெத்தை விரிப்பு, கட்டில் கால்கள்

22. திருவோணத்துக்கு காது, மூன்று பாதச்சுவடுகள் மற்றும் அம்பு

23. அவிட்டம் நட்சத்திரத்துக்கு மிருதங்கம் மற்றும் உடுக்கை

24. சதயத்துக்கு பூங்கொத்து மற்றும் வட்ட வடிவம்

25. பூரட்டாதிக்கு கட்டிலின் இரு கால்கள், வாள் மற்றும் இரு மனித முகங்கள்

26. உத்திரட்டாதி நட்சத்திரத்துக்கு கட்டில் கால்கள் மற்றும் இரட்டையர்கள்

27. ரேவதி நட்சத்திரத்தின் சின்னங்கள் மீன் மற்றும் மத்தளம்

Odi odi Utkalantha Jothi Full Song Tamil Lyrics for music | ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் - ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics)

 ஓம் நம சிவாய ஓம்... ஓம் நம சிவாய ஓம்... பாடல் வரிகள் (Om Namah Shivaya Om... Om Namah Shivaya Om... Song Lyrics) Odi odi Utkalantha Jothi l...